Wednesday, 13 June 2018

டி.பி.ஐ. வளாகம், அண்ணா நூலகத்தில் பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் வாங்க மக்கள் கூட்டம்

புதிய பாடத்திட்டத்தின்படி பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி முதல் சென்னை டி.பி.ஐ. வாளகம், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த இரு இடங்களிலும் பிளஸ்-1 மற்றும் இதர வகுப்புகளுக்கான புத்தகங்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பாடப்புத்தகங்களை வாங்க ஆன்லைனிலும் நிறைய பேர் பதிவு செய்துள்ளனர். இசேவை மையங்களிலும் புத்தகங்களை இணையதளத்தில் ( www.text-b-o-o-ks-o-n-l-i-ne.tn.nic.in ) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அதே இணையதளத்தில் புத்தகங்களை வாங்குவதற்கும் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு புத்தகங்கள் வீடு தேடி வரும். இந்த தகவலை தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் ஜெகன்னாதன் தெரிவித்தார்.

Post a Comment