TRB

TNTET

Tuesday, 19 June 2018

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்

அரசுத்தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி விடைத் தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் விடைத்தாள் நகலை 19-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதி விறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மேற்கண்ட இணைய தளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 2 நகல்களை எடுத்து ஜூன் 20 முதல் 22-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.


No comments: