TRB

Wednesday, 13 June 2018

2019-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

2019-ம் ஆண்டுக்கான பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வு கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. பொதுத்தேர்வுகள் தான் மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதால் அவர்கள் எந்தவித மன அழுத்தம் இன்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் கடந்த ஆண்டு தமிழக அரசு புதிய யுக்தியை கையாண்டது. பள்ளிகள் தொடங்கியவுடன் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியும், தேர்வுப்பாடங்கள் அட்டவணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. ஆகிய பொதுத்தேர்வுகள் அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும், புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒரே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதலாக நிதிகளை ஒதுக்கி வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.அதனடிப்படையில் மொழி பாடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு தாள்களையும் (தேர்வு) ஒரே தாளாக மாற்றி 6 பாடங்களுக்கு தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.மாணவர்களுக்கு மன அழுத்ததை குறைக்கின்ற வகையிலும், ஆசிரியர்கள், பொதுமக்கள், சிறந்த கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டறிந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.தமிழக முதல்-அமைச்சர் இந்த கோப்பில் (அரசாணை) கண் இமைக்கின்ற நேரத்தில் கையெழுத்திட்டார். தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் அட்டவணை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தற்போதே வெளியிடப்படுகிறது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடையும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிடப்படும்.பிளஸ்-1 வகுப்புகளுக்கு மார்ச் 6-ந்தேதி தேர்வு தொடங்கும். மார்ச் 22-ந்தேதி தேர்வு முடியும். மே 8-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கும். மார்ச் 29-ந்தேதி தேர்வு நிறைவடையும். ஏப்ரல் 29-ந்தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.தமிழ், ஆங்கிலம் 4 தாள்களை (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள்) 2 தாள்களாக மாற்றி இருப்பதால் 8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என்பதால், தேர்வு முடிவுகள் 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். | DOWNLOAD

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.