Wednesday, 27 June 2018

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை காலை வெளியிடப்படுகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கின் றனர்.


No comments: