Tuesday, 12 June 2018

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த கல்லூரிகளின் டீன்கள் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் விநியோகம் குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் ஜி.செல்வராஜன் கூறும்போது, “அரசு இடங்களுக்கு 45 ஆயிரம் விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல்நாளில் அரசு இடங்களுக்கு 11,967 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5,631 ஆயிரம் விண்ணப்பங்களும் விற்பனையாகியுள்ளன” என்றார்.

1 comment:

Sarkari Job said...

Are you looking for Tamil Nadu Government Jobs? If you are, then you have come to the right place. Our website is the one stop place, where you can get all the details about the Tamil Nadu Government Jobs.