Monday, 18 June 2018

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருவாரூரில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காண்டிராக்டு அடிப்படையில் கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வேதியியல், இயற்பியல், இசை மற்றும் ஓவியம், சமூகவியல், புவியியல், கணினி அறிவியல், அப்ளைடு சைகாலஜி, ஆங்கிலம், நிர்வாகவியல், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, இந்தி, கணிதவியல், மைக்ரோ பயாலஜி, தமிழ் உள்ளிட்ட 21 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்து , நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பாடப்பிரிவினருக்கும் வெவ்வேறு நாளில் நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் மற்றும் சான்றுகளை 5 நகல்கள் எடுத்துக் கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். 21-6-2018-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை cutn.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


No comments: