Monday, 25 June 2018

சவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணி

வங்கியில் பயிற்சியுடன் அதிகாரி பணியிடங்கள் சவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணிக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு: பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. தற்போது இந்த வங்கியில் ஸ்கேல்-1 தரத்திலான புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதுநிலை வங்கிப் பணிகளுக்கான டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். மணிப்பால் குளோபல் எஜுகேசன் சர்வீஸ் நிறுவனத்தில் இதற்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி நிறைவு பெற்றதும், முதுநிலை வங்கி டிப்ளமோ படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- விண்ணப்பதாரர்கள் 31-12-2017-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 27-6-2018-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2018 அன்று நடக்கிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.southindianbank.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


Post a Comment