Friday, 29 June 2018

மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்றும், மாணவிக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், இடைக்கால ஜாமீனும் வழங்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடுமை புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்பவர் சிவநேசன் (வயது 41). அதே பள்ளியில், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வகுப்பு அறையில் வைத்து சிவநேசன் பாலியல் கொடுமை செய்தார். 10 ஆண்டு சிறை இதுகுறித்து, கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவநேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி செசன்சு கோர்ட்டு, சிவநேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதையடுத்து சிவநேசன் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். மேலும், இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கேட்டும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. முன்மாதிரி மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஆசிரியர் என்பவர் கடமை என்பது கல்வியை மட்டும் போதிப்பது அல்ல. மாணவர்களுக்கு கல்வியுடன், ஒழுக்கத்தையும் சேர்த்து போதிக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் மாணவர்களின் முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதனால், இந்த ஆசிரியருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.


No comments: