TRB

TNTET

Tuesday, 31 July 2018

17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டது. அதையொட்டி பலரும் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை தனது இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிட்டது. மனிதநேய மையம் இந்த ரேங்க் பட்டியலில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும், செல்வக்குமார் 33-வது இடத்திலும் கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 July 2018

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.

DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS 2012 - 2016 - CV LIST | சிறப்பாசிரியர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியானது.PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION As per the Notification No.5/2017 published on 26.07.2017, the Written Competitive Examination for the Direct Recruitment of 1325 Special Teachers was held on 23.09.2017. In the Written Examination 35,781 candidates appeared. As per procedure the answer sheets were evaluated and marks were published on 14.06.2018 Now, the list of candidates called for Certificate Verification in the ratio 1:2 is published subject to outcome in WA(MD).No.1296/2017 & WA(MD).No.1297/2017 Board proposes to conduct Certificate Verification on 13.08.2018 in all Districts. Certificate Verification venue and individual call letters are Published in the TRB website www.trb.tn.nic.in. The same is also communicated through mail and SMS. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.
Direct Recruitment of Special Teachers 2012-2016
PUBLICATION OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION

Dated: 27-07-2018

www.kalvisolai.com
Home


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டு புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்யவும், அரசால் தோற்றுவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளி கல்வி துறையை சேர்ந்த இணை இயக்குனர்களை மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்குமாறு பள்ளி கல்வி இயக்குனர் அரசை கோரியிருந்தார். பள்ளி கல்வி இயக்குனரின் கருத்துருவினை, அரசு கவனமாக பரிசீலனை செய்து அதனை ஏற்கலாம் என முடிவு செய்தது. மேலும் பள்ளி கல்வித்துறையை சேர்ந்த அனைத்து இணை இயக்குனர்களும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் அதன் விவரம் வருமாறு:- மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.உஷாராணி சென்னை, திருவள்ளூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் வை.பாலமுருகன் தூத்துக்குடிக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலை) எஸ்.சேதுராமவர்மா கோவை, நீலகிரி மற்றும் திருப்பூருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் எஸ்.உமா விழுப்புரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) பூ.ஆ.நரேஷ் காஞ்சீபுரத்துக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (இணை இயக்குனர் நிலையில்) கே.சசிகலா கரூர், நாமக்கல்லுக்கும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் சி.செல்வராஜ் திண்டுக்கல்லுக்கும், பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) பி.குப்புசாமி வேலூருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை-நெல்லை பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (தொழிற்கல்வி) எஸ்.சுகன்யா கடலூருக்கும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் எஸ்.நாகராஜன் மதுரை, தேனிக்கும், தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (நிர்வாகம்) கே.ஸ்ரீதேவி தஞ்சாவூருக்கும், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி) சி.அமுதவல்லி சிவகங்கை, புதுக்கோட்டைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடக்க கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (உதவிபெறும் பள்ளிகள்) ஆர்.பாஸ்கரசேதுபதி கன்னியாகுமரி, நெல்லைக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-2 கே.செல்வகுமார் தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கும், மாநில திட்ட இயக்ககம், அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர்-3 பி.பொன்னையா சேலம், ஈரோட்டுக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) வை.குமார் விருதுநகர், ராமநாதபுரத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகை-திருச்சி பள்ளி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் நாகப்பட்டினம், திருவாரூக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனர் (பாடத்திட்டம்) பி.குமார் பெரம்பலூர், அரியலூருக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் நா.ஆனந்தி திருவண்ணாமலைக்கும், பள்ளி கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) எம்.வாசு திருச்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 July 2018

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் கலந்துகொள்ளவில்லை

என்ஜினீயரிங் கலந்தாய்வு நேற்று ஆன்லைன் மூலம் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி மையத்தில் ஆன்லைனை பயன்படுத்தி இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்த போது எடுத்த படம். என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர கடந்த வருடம் வரை அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக கலந்தாய்வு நடத்தி வந்தது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் நம்பர் வெளியிடப்பட்டன. விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் நடைபெற்றது. வீடியோ விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர்தான் சான்றிதழ் சரிபார்க்க வந்தனர். இதில் தகுதியானவர்களின் விண்ணப்பம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 ஆகும். அவர்களில் 65 ஆயிரத்து 926 பேர் மாணவர்கள். 38 ஆயிரத்து 527 பேர் மாணவிகள். கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். நேற்று முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வுக்கு இணையதளத்தில் ( www.tnea.ac.in ) போய் விருப்ப குரூப், எந்த கல்லூரி என்பதை கிளிக் செய்ய வேண்டும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 7 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்காக பணம் செலுத்தினார்கள். கலந்துகொள்ளவில்லை தரவரிசை பட்டியலின்படி முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யாரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. முதல் இடம் பிடித்த கோவையை சேர்ந்த மாணவி கீர்த்தனா ரவி கூறுகையில், ‘நான் பி.எஸ்சி வேதியியல் (ஆனர்ஸ்) படித்து வருகிறேன். என்ஜினீயரிங் கலந்தாய்வில் நான் கலந்துகொள்ளவில்லை’ என்றார். 2-வதாக வந்த மதுரையை சேர்ந்த மாணவர் எஸ்.ரித்விக் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததால், அவரும் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 3-வது இடத்தில் வந்த திருச்சியை சேர்ந்த ஆர்.ஸ்ரீவர்ஷினி, மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்ததால் அவரும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. எனவே முதல் 3 இடங்களில் வந்தவர்களும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. 30-ந் தேதி ஒதுக்கீட்டு ஆணை நேற்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் எந்த குரூப், எந்தக்கல்லூரி என்பதை இறுதி முடிவு எடுத்து ஆன்லைனில் குறிப்பிட வேண்டும். 28-ந் தேதி அவர்கள் எந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்று தற்காலிக உத்தரவை மாணவர் சேர்க்கை செயலாளர் ஒதுக்கிவிடுவார். 28 மற்றும் 29-ந் தேதிகளில் நிரந்தர உத்தரவை உறுதி செய்வார். 30-ந் தேதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். 2-வது கட்ட கலந்தாய்வு 30-ந் தேதி தொடங்குகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 July 2018

‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணி நியமனத்திற்கான ‘வெயிட்டேஜ்’ முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த ‘வெயிட்டேஜ்’ முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 July 2018

டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு இணையதளம் வழியே நடத்தி உள்ளது. தற்போது தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளும் இணையதளம் வழியே நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் இருந்தாலும், தமிழக அரசு, ஆன்லைன் தேர்வுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை எப்போதோ கோரிவிட்டது. விரைவில் ஆன்லைன் வழித் தேர்வுகள் நடப்பது உறுதி என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. எந்த வகையில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு எப்படி நடைபெறுகிறது, மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் உருவாக்கப்படும். ‘லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)’ மூலம் அந்த தேர்வு மையத்தில் உள்ள அனைத்து கணினிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அவை அனைத்து தேர்வு மையங்களுக்குமான பொதுவான சர்வர் கணினியுடன் இணைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

வழக்கமான கொள்குறி வகை (ஆப்ஜெக்டிவ் டைப்) கேள்விகளே ஆன்லைன் தேர்விலும் இடம் பெறும். அதாவது வினாவும், அதன் கீழ் 4 விடைகளும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு வினாவுக்கு விடையை தேர்வு செய்ததும், நெக்ஸ்ட் என்ற பொத்தான் வழியாக அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

தேர்வு முடிந்ததும் இறுதியாக கருத்துப்படிவம் ஒன்றும் கொடுக்கப்படும், அதிலும் கணினி வழியாகவே பதில் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களின் சந்தேகங்கள், விளக்கங்களைப் பெறவும் ஆன்லைன் தேர்வு முறையில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக ‘சேலஞ்ச் விண்டோ’ என்ற திரையை விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிந்த 7 நாட்களுக்குள் பயன்படுத்தி முறையிடலாம்.

சிறப்புகள்

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பாக எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று பயிற்சி வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் குழப்பமின்றி தேர்வு எழுதலாம்.

ஆன்லைன் தேர்வை சுலபமாக்கவும், குறைகளை களையவும் முதலில் குறைந்த அளவில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வில், பரிசோதனை முறையாக ஆன்லைன் தேர்வு நடை முறைப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும்.

ஆன்லைன் வழியே நடப்பதால் காப்பியடித்தல் உள்ளிட்ட தவறுகள் கட்டுப்படுத்தப்படும். ஒவ்வொருவருக்கும் கேள்விகள் குறிப்பிட்ட முறையில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் எந்த வகையிலும் காப்பியடிக்க முடியாது.

கணினி வழியே தேர்வுகள் நடப்பதால் தேர்வுத்தாளை திருத்துதல், விடைகளை வெளியிடுதல் ஆகியவற்றுக்கான நேரம் மிச்சமாகும். கணினி களால் உடனடியாக விடைகளை சரிபார்த்து முடிவுகளை அறிவிக்க முடியும்.

ஆன்லைன் தேர்வை நடத்திக் கொடுக்கும் அமைப்பாக தனியார் நிறுவனம் செயல்பட்டாலும், டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தேர்வு முடிந்ததுமே அனைத்து தகவல்களும் சர்வர் கணினிக்குச் சென்றுவிடும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக சில இடங்களில் நகல்களும் பராமரிக்கப்படும். ஆனால் தேர்வு நடந்த மையங்களிலும், வேறு எங்கும் வினாத்தாள் உள்ளிட்ட எந்த விவரங்களும் சேமிக்கப்படுவதில்லை என்பது முறைகேட்டை குறைக்கும்.

சில கேள்விகள்...

ஒப்பந்தப்புள்ளி விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் முறை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் விண்ணப்பதாரர் நிலையில் எழும் சந்தேகங்கள், தேவையான வசதிகள் எல்லாம் சீர் செய்யப்பட வேண்டும்.

உதாரணமாக அடுத்த கேள்விக்கு தாவிச் சென்ற பின்பு, திரும்ப விடை தெரியாத கேள்விக்கு யோசித்து பதிலளிப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு ஐயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சிகள் வழங்கலாம், வெள்ளோட்டம் பார்த்த பின்னர் ஆன்லைன் தேர்வை நடைமுறைப்படுத்தலாம்.

தேர்வு நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பதால், விண்ணப்பதாரர்களின் கட்டணத் தொகை உயரலாம் மற்றும் வினாத்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே குரூப்-2 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு தோல்வி அடைந்திருப்பது அதற்கு சான்றாக காட்டப்படுகிறது. எனவே இதுபோன்ற குறைகளுக்கும் வழியிருக்கக்கூடாது.

நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவது, விரைந்த செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகும். குறைகளை கடந்து ஆன்லைன் தேர்வு என்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்னையும், தமிழக மாணவர்களையும், விண்ணப்பதாரர்களையும் தயார்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு!


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 July 2018

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது: வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன.பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 July 2018

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்.

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது: 2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக பயிற்சி முகாம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அடுத்த மாதம் தொடங்கப்படும். அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அப்போது தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும். 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 842 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனர். எனவே, மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. அதன்மூலம் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்ய முடியும். அதன் விபரங்கள் உடனுக்குடன் எங்களுக்கு வந்துசேரும். நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் சிறப்பான உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வார். சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் வழங்கப்படும். காலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும். 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 82 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை வாய்ப்பு இருக்கிறது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இருக்காது. டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதர பழசான கம்ப்யூட்டர்களால் கற்பித்தல் பணி போராட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் பல அம்சங்கள் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக மேல்நிலை கல்வியில் கணினி பாடம் அனைத்து பாடப் பிரிவிற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் ஒரு கணினி ஆசிரியர் 50க்கும் மேற்பட்ட பாடவேளைகளை கையாள வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள்தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் 'அப்டேட் வெர்ஷனை' பயன்படுத்த முடியவில்லை. அடிக்கடி பழுதடைகின்றன. கம்ப்யூட்டர் பாடம் நடத்துவது பெரும் போராட்டமாக உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சங்கரலிங்கம் கூறியதாவது: ஒரு பள்ளிக்குஒரு ஆசிரியர் என்பதால் கம்ப்யூட்டர் ஆசிரியர், வாரத்தில் குறைந்தபட்சம் 40 பாடவேளை கையாள வேண்டியுள்ளது. கூடுதல் ஆசிரியர் நியமித்தால்தான் தரமான கற்பித்தல் சாத்தியமாகும். 2005-06ல் 1880 அரசு பள்ளிகளுக்கு தலா 9 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அப்டேட்' இல்லாத அந்த கம்ப்யூட்டர்களையே ஆசிரியர் பயன்படுத்துகின்றனர். அடிக்கடி பழுதாவதால் கற்பித்தல் பணி சவாலாகிறது. நவீன தரத்துடன் கணினி ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணினிஆசிரியர் பணியிடமாக மாற்ற வேண்டும், என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு!

தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது. இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது. இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி,காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்!

தேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தேசிய விருது, ஜூனில் அறிவிக்கப்பட்டது. 'இந்த விருதுக்கு, ஜூன், 15 முதல், 30 வரை, நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்ப்பை விட குறைந்த அளவு ஆசிரியர்களே விண்ணப்பித்ததால், கூடுதலாக, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, வரும், 15ம் தேதிக்குள், தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 'இந்த விண்ணப்பங்களை மாவட்ட பரிசீலனை குழுவினர் ஆய்வு செய்து, வரும், 16ம் தேதி முதல், 24ம் தேதிக்குள், மாநில கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 'மாநில கமிட்டியினர், ஜூலை, 31க்குள், மத்திய அரசின் தேசிய விருது பரிசீலனை கமிட்டிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்': அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும் வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ''தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில் அனுமதி கோருவோம்: உயர்கல்வித் துறை அமைச்சர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பொறியியல் பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரவுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பல்வேறு கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாள்களிடம் மேலும் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு கட்டமைப்பு நிதியாக ரூ.20 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 1.7 கோடி அளவிலான பல்வேறு பணிகள் நிறைவு பெற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர நிர்ணயக் கமிட்டி (நாக்) வருகை தரவுள்ளது. இப்பல்கலைக்கழகத்துக்கு ஏ++ தர அந்தஸ்தை பெறுவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் கலந்தாய்வு: நிகழாண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை. பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 509 கல்லூரிகள் பதிவு செய்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக ஆன்லைன் மூலமாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இருந்த 26 பொறியியல் கல்லூரிகள் வேறு கல்லூரிகளாக மாற்றப்படவுள்ளன. அதனால், அந்தக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தள்ளிப்போகும் காரணத்தால், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தாமதமாக தொடங்குவதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளோம். நீதிமன்றத்தின் அனுமதிப்படி கலந்தாய்வு நடத்தப்படும். நிகழாண்டு புதிதாக கலை, அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு 41 உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் 264 புதிய பாடப் பிரிவுகளை வழங்கியிருக்கிறோம். உயர்கல்வித் துறையில் இந்திய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 25.2 சதவீதமாக இருந்தாலும்கூட, தமிழகத்தில் மாணவர் சேர்க்கை 46.9 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழக மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். வரும் 2020இல் 30 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அதை நாம் இப்போதே தாண்டிவிட்டோம். முறைகேடு இல்லை: பல்கலைக்கழகத்தில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. தவறு செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சிறப்புப் பிரிவினர் உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தவிர 2,593 இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி 8,986 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,337 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்கான முதல் மூன்று விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முதல் 2,593 பேரைத் தவிர மற்ற மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். யார், யார் எந்தெந்தப் பாடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யாரெல்லாம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கடிதங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். சேர்க்கைக் கட்டணமாக ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் யாரெல்லாம் முன்னேறிச் செல்ல இருக்கின்றனர் என்ற விவரம் வரும் 21ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மகிமை ராஜா தெரிவித்துள்ளார்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு.

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும். இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும். ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும். மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார். இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் பா.ஜோதிநிர்மலா சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011-ம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் ( https://tnvelaivaaipu.gov.in ) பதிவு செய்துவருகிறார்கள். 2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 16-ந் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து அன்று முதல் 30-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களும் வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 9 July 2018

எல்லைக் காவல் படையில் வேலை.

எல்லைக் காவல் படையில் தொழில்நுட்ப பணிகளுக்கு 207 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். எனப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவான இதில் தற்போது ‘குரூப்-சி’ பிரிவிலான தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வெகிகிள் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், வெல்டர், டர்னர், கார்பெண்டர், ஸ்டோர் கீப்பர், பெயிண்டர், வல்கனைஸ், பிட்டர், பிளாக்ஸ்மித் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணி வாரியாக உள்ள காலியிடங்கள் விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பணியிடங்கள் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவம் மற்றும் அனுமதி அட்டை படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட் களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் 30- ஜூலை-6 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 8 July 2018

இணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தகவல்

இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி கற்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது: தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள 1, 6, 9, 11 -ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களில், கணினித் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக தமிழில் அச்சிடப்பட்டுள்ள பாடநூல்கள் யாவும் ஒருங்குறி (யூனிகோட்) முறையில் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பாடத்திலும் இணைய வழங்கல் என்று கூறும்படி ஆசிரியர்களும், மாணவர்களும் இணையதளம் சென்று பயன்படுத்தக்கூடிய பல்வேறு செய்திகளை இந்தப் பாடங்களில் இணைத்துள்ளோம்.மாணவர்கள் 6 -ஆம் வகுப்பு முதலே இணையதளக் கல்வி, கணினித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணினி அறிவியல் பாடமானது அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்பிக்கப்படுகிறது. அதேபோல், மாணவர்கள் தங்களின் பாடங்களை விடியோக்கள், புகைப்படங்கள், செயல் விளக்கங்கள் மூலமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விரைவுக் குறியீடுகள் (க்யூ.ஆர்.கோடு) ஆங்காங்கே வழங்கப்பட்டுள்ளன. விரைவுக் குறியீடுகளை பாடங்களில் வழங்கும் முயற்சியில் மகாராஷ்டிரம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் முயற்சி செய்தாலும் தமிழகம்தான் முதன்முதலில் அறிமுகம் செய்தது. அத்துடன் மிக அதிக அளவாக 144 பாடங்களில், 2,895 குறியீடுகளை இடம்பெறச் செய்துள்ளோம்.மேலும், இவற்றைப் பயன்படுத்துவதிலும் தமிழகம் தற்போது முன்னோடியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் பயன்படுத்தப்படும் மொத்த விரைவுக் குறியீடுகளில் 60 சதவீதம் அளவுக்கு தமிழகத்தின் பங்களிப்பு உள்ளது. தமிழகத்தில் தினசரி சுமார் 2 லட்சம் மாணவர்களும், ஆசிரியர்களும் விரைவுக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். தமிழக மாணவர்களை அடுத்தடுத்த நவீன தொழில்நுட்ப தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதில் பள்ளிக் கல்வித் துறை பெரும் பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் 3 ஆயிரம் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்)தொடங்கப்பட உள்ளன என்றார் அவர்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்.

100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்ந்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும்  என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி

கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி | அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வந்தனர். சமீபத்தில் கல்வித்துறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டது அதன்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் இதனால் 'இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது சில இடங்களில் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்க முடியும் மேலும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலுள்ள வட்டார கல்வி அலுவலர்களை கண்காணிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள எங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பது நியாயமற்றது, என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வித்துறை பணியாளர்களின் பணி விதிகள் திருத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் குழப்பம் தீர்ந்துவிடும்,' என்றார்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை: நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வலியுறுத்துவோம் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் இது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினர், இந்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திர அரசிடமிருந்து எங்களுக்கு கடிதம் எதுவும் வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் ஒரு மணி நேரமும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் மேலும், 100 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்குவது பற்றி நாளை அறிவிக்கப்படும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் 12-ஆம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது." என்று தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 7 July 2018

DISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘நீட்’ தேர்வு வினாத்தாளில் குளறுபடி தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு வீணாகிறது கருணை மதிப்பெண் வழக்கில் உயர் நீதிமன்றம் வேதனை

சிபிஎஸ்இ செய்யும் குளறுபடியால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாழாக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். 49 வினாக்கள் தவறு இத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண் வழங்கவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஎஸ்இ பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்வு நடத்துவது, முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இயால் உறுதி செய்ய முடியாது. தமிழில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்தே ஆங்கில வினாத்தாள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பிராந் திய மொழியில் உள்ள அகராதியை அடிப்படையாக வைத்தே மொழிபெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வேண்டும் பின்னர், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடும்போது, நீட் தமிழ் வினாத்தாளில் பாசுமதி அரிசி புதிய ரகம் என்பதற்கு ‘புதிய நகம்’, வெளவ்வால் என்பது ‘வெளனவால்’ என்றும், இடை நிலையை ‘கடை நிலை’ என்றும், ரத்த நாளம் என்பது ‘ரத்த நலன்கள்’ என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. இதற்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றார். சிபிஎஸ்இ வழக்கறிஞர் வாதிடும்போது, ‘மொழிமாற்றம் சரியாகவே நடைபெற்றுள்ளது. எழுத்துப் பிழை இருந்தது. மனுதாரர் தவறு என்று சொல்லும் கேள்விகளுக்கான பதிலை சரியாகப் புரிந்து, பதில் அளித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் நீதிமன்றம் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு உரிமையில்லை’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர் விநியோகம் செய்துவிட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவக் கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்வது நமது கடமை. பிஹார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு சிபிஎஸ்இ என்ன பதில் சொல்லப்போகிறது? தமிழ் மொழிபெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது? இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாள் தேர்வு முடிவு வெளியிட்டது ஏன்? இது தவறான முன்னுதாரணம் ஆகும். நீட் தேர்வில் சிபிஎஸ்இ யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது என அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

சென்னைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஆய்வி யல் நிறைஞர் (எம்.ஃபில்)மற்றும் தமிழ் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு, திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான முழுநேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுகலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பாண்டு முதல் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு அரசால் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் படும். விண்ணப்பங்களை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலே அல்லது www.ulakaththamizh.org என்ற இணைய முகவரியிலோ பதிவிறக்கம் செய்து பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 8-ம் தேதி நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரியில் அல்லது 044-22542992 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 6 July 2018

மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு!

மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு! கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு (திருச்சி மேற்கு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:- வேலைக்கு செல்ல முடியாத நிலை கே.என்.நேரு:- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவை விமர்சனத்திற்கு ஆளாகின. முன்பு முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.500 ஆக இருந்தது. அதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியவர் கருணாநிதி. கடந்த ஆண்டு அது ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானவர்கள் இன்றும் சிரமமான நிலையில் உள்ளனர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் பிறகு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு அதை கவனத்தில் கொள்ளவேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த சிரமப்படுவதாக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அதனால் தான், ரூ.12 ஆயிரமாக இருந்த ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ செலவு கட்டணமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை கே.என்.நேரு:- எம்.எல்.ஏ.க்கள் என்றால் தினமும் 4 பெரிய காரியங்களுக்கு செல்ல வேண்டும். தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். மாலையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க செல்ல வேண்டும். இப்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் செலவு அதிகரிக்கிறது. எனவே, அந்தத் தொகையை மட்டும் தந்தால்போதும். எங்களுக்கு சம்பளமே வேண்டாம். அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இன்றைக்கு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 62 பேர் சென்னையில் உள்ள 2 பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள். முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார்:- கடந்த 2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமே போலீசில் புகார் அளித்தது. இந்த தேர்வை ரத்து செய்யச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 'சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.என்.நேரு:- திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால், 7 தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே தி.மு.க. ஆட்சி காலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், 120 ஏக்கர் அரசு நிலமாகும். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தொடர்பாக மாநகராட்சியின் பரிந்துரையில் உறுப்பினரின் கோரிக்கையும் சேர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். காலிப் பணியிடம் அமைச்சர் ஜெயக்குமார்:- உறுப்பினர் இங்கே எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை பற்றி பேசினார். முதலில் உயர்த்திய சம்பளத்தை அவரது கட்சித் தலைவர் வாங்கிக்கொள்ளட்டும். கே.என்.நேரு:- இந்த விஷயத்தில் என்னை ஏன் கோர்த்து விடுகிறீர்கள்?. எங்கள் தலைவர் சொன்னால், நாங்களும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்கமாட்டோம். தமிழக அரசுப் பணிகளில் 5½ லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போது, பணியிடங்களை வரைமுறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய ஜாக்டோ - ஜியோ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்:- 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 135 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 3 July 2018

சிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை உடனே வெளியிட கோரிக்கை.

சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23 -ஆம் தேதி உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளோம். தேர்வு நடைபெற்று 9 மாதங்களாக முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூன் 14 -ஆம் தேதி தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. மேலும், நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து ஓ.எம்.ஆர். நகலையும் ஆசிரியர் தேர்வு வாரிய வளாக கணினி திரையில் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்தது. சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு 15 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலையும் விரைவாக வெளியிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE