Wednesday, 11 July 2018

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் புதிய தர வரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவு உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மொழி பெயர்ப்பு தவறு காரண மாக 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டி யல் தயாரித்து கலந்தாய்வு நடத்தவும் அதுவரை தற்போது நடைபெறும் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாளில் தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்பியுமான டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது: நாடு முழுவதும் மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும். தவறாக மொழிபெயர்ப்பு இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத் தாளில் 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். மேலும் பிளஸ் 2 மதிப்பெண் கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஎஸ்இ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத் தாள் ஆங்கிலத்தில் இருந்து தமி ழில் மொழி மாற்றம் செய்யும் போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இ-யால் உறுதி செய்ய முடியாது. தமிழ் மொழியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை கற்பிக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டே ஆங் கில வினாத்தாள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஒவ் வொரு மாநிலத்திலும் இந்த முறையே பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் புழக்கத்தில் உள்ள அகராதியை அடிப்படை யாக வைத்தே மொழிபெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். தேர்வு முடிவில் அவசரம் ஏன்? இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம். பஷீர்அகமது அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதா வது: வழக்கு தாக்கல் செய்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். அதை செய்யாமல், வழக்கு தாக்கல் செய்த அன்றே தேர்வு முடிவுகளை வெளியிட்டது நியாயமற்றது. மேலும் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தமிழக மருத்து வக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இப்போதைக்கு வெளியிடப்படாது என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட் டது. நீட் தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு நீதிமன்றம் கேட்டபோது, அதற்கு சிபிஎஸ்இ மறுத்துவிட்டது. தேசிய அளவில் நடைபெறும் இதுபோன்ற தேர்வில் இவ்வாறான போக்கை கடைபிடிப்பதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு பாராட்டு நீட் தேர்வு வினாவில் உள்ள தவறைப் புரிந்து பதில் எழுதிய மாணவர்களைப் பாராட்ட வேண்டும். இதை மேம்போக்காகக் கருதாமல் மாணவர்களின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும். தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் (பள்ளிக்குச் சென்று படிக்காதவர்கள்) நீட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. ஏழை மாணவர்கள் பலர் பால் பாக்கெட் போட்டும் வீடு வீடாக நாளிதழ்களை போட்டும் பள்ளிக் குச் செல்லாமல் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுகின்றனர். அவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே தனியாகப் படிக்கின்றனர். அப்படி இருப்பவர்களை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க என்ன காரணம். இவ்வளவு மணி நேரம் பள்ளியில் இருக்க வேண்டும், அறிவியல் பாடங்களில் செய்முறை அறிவு பெற்றிருக்க வேண் டும் என்பதால், அந்த மாணவர் கள் நீட் தேர்வை எழுத விடாமல் தடுக்கப்படுகின்றனரா? பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதி பெறும் மதிப்பெண்கள் மட்டும் முக்கியமல்ல, இதுபோல் தனியாகப் படிக்கும் மாணவர்களையும் அரசும் கல்வி அமைப்புகளும் ஊக்கப்படுத்த வேண்டும். தனித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புகிறது. இந்த வழக்கில் மொழி மாற்றத் தில் தவறு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் 2 வாரத்தில் புதிய தரவரி சைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும் கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். இந்த வழக்கில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


No comments: