Monday, 16 July 2018

மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள்

தாது வள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் மத்திய தாதுவள நிறுவனத்தில் 245 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். (MECL) என்று அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர், அசிஸ்டன்ட், மெக்கானிக், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 245 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக டெக்னீசியன் டிரிலிங் பணிக்கு 41 இடங்களும், மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும், அசிஸ்டன்ட் (எச்.ஆர்.) பணிக்கு 29 இடங்களும், டிரைவர் பணிக்கு 30 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப் படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங்-தொழில்நுட்ப படிப்புகள், எம்.எஸ்சி., எம்.டெக். படித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்புகள், ஐ.டி.ஐ., தட்டச்சு தெரிந்தவர்களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்குமான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி, பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப்பதிவு இன்று (16-7-2018) தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் 16-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mecl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


No comments: