Sunday, 8 July 2018

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். படம்: பிடிஐ மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, ஐஐடிகளில் சேருவதற்கான ஜெஇஇ நுழைவுத்தேர்வு ஆகியவை அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். மேலும் சிபிஎஸ்இ-க்கு பதிலாக புதிய அமைப்பு இந்த தேர்வுகளை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள் ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறி யதாவது: நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் இத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும். இந்த நுழைவுத்தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும். அதன்படி, நீட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி, மே ஆகிய மாதங்களில் நடைபெறும். ஜெஇஇ (மெயின்ஸ்) நுழைவுத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி-களே தொடர்ந்து நடத்தும். தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும். ஆன்லைனில் தேர்வு நீட்-ஐ பொறுத்தவரை இரு தேர்வுகளையும் மாணவர்கள் எழுதலாம். ஒரு மாணவர் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதுவே சேர்க்கைக் கான தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இதே நடைமுறை ஜெஇஇ தேர்வுக்கும் பொருந்தும். இரு நுழைவுத் தேர்வுகளும் ஆன்லைனில் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும். அதன்படி 4 முதல் 5 நாட்கள் வரை தேர்வு நடத்தப்படலாம். மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தேதிகளை தேர்வு செய்யலாம். நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம், இதர நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கட்டணமும் உயர்த்தப்படாது. சர்வதேச தரத் தில் நுழைவுத் தேர்வுகள் இருக்கும். தேர்வுத் தாள் முன்கூட்டியே வெளியாவது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தேர்வு அட்டவணை மத் திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சக இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்படும். நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்காக நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை சார்பில், பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மாதம் முதல் இந்த பயிற்சி கணினி வாயிலாக அளிக் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்களை அமைக்க மாவட்ட அளவில் இடங்கள் தேர்வு செய்யப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) மத்திய அமைச்சரவை கடந்த 2017 நவம்பரில் ஒப்புதல் அளித்தது. இந்த அமைப்பு நீட், ஜெஇஇ, நெட் தேர்வை தவிர்த்து இதர உயர் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை யும் நடத்த திட்டமிட்டுள்ளது. என்டிஏ அமைப்புக்காக மத்திய அரசு ரூ.25 கோடியை ஒதுக்கி யுள்ளது.


No comments: