TRB

Saturday, 7 July 2018

தமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

சென்னைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஆய்வி யல் நிறைஞர் (எம்.ஃபில்)மற்றும் தமிழ் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்ட வகுப்பு, திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்புகள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான முழுநேரத் தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுகலை பட்ட வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பாண்டு முதல் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு அரசால் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் படும். விண்ணப்பங்களை சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலே அல்லது www.ulakaththamizh.org என்ற இணைய முகவரியிலோ பதிவிறக்கம் செய்து பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 8-ம் தேதி நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரியில் அல்லது 044-22542992 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.


No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.