Thursday, 30 August 2018

போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்

தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப மனுக்களை www.tnusrbonline.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப மனுக்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 28-9-2018 ஆகும். விண்ணப்ப மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள இதர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் செயல்படும். உதவி மையத்தை 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 9789035725 போன்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்களில் பேசலாம். மேற்கண்ட தகவல்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 27 August 2018

வேலை - கால அட்டவணை - 27 AUGUST 2018


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசர்வ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்

ரிசர்வ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை ‘கிரேடு-பி’ தரத்திலான ஒப்பந்த பணியிடங்களாகும். நிதி, டேட்டா அனலைடிக்ஸ், ரிஸ்க் மாடலிங், பாரன்சிக் ஆடிட், புரபெசனரி காப்பி எடிட்டிங், எச்.ஆர்.எம். போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1984 மற்றும் 1-8-1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எம்.பி.ஏ. (நிதி), புள்ளியியல் முதுநிலை படிப்பு, இதர முதுநிலை படிப்புடன் பணி சார்ந்த டிப்ளமோ படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.850, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான தேர்வு 29-9-2018-ந் தேதி நடக்கிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.org.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 147 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். ராணுவத்திற்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 81 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 50 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 3 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 13 இடங்களும் உள்ளன. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு: 1-9-2018 அன்று 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள்

எல்.ஐ.சி.யின் துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. இதன் கீழ் செயல்படும் துணை நிதி நிறுவனம் எல்.ஐ.சி. ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் உதவி மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 100 இடங்களும், அசோசியேட் பணிக்கு 50 இடங்களும், அசிஸ்டன்ட் பணிக்கு 150 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-1-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1990 மற்றும் 1-1-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. கல்வித்தகுதி எம்.பி.ஏ. படித்தவர்கள் மற்றும் இந்த முதுநிலைப் படிப்புடன் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 6-9-2018-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 6,7-ந் தேதிகளில் நடக்கிறது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.lichousing.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை ராணுவத்தில் 390 பணியிடங்கள்

இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று ஐ.டி.பீ.பி. இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையான இந்த அமைப்பில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 17 இடங்களும், ெஹட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 155 பேரும், கான்ஸ்டபிள் பணிக்கு 218 இடங்களும் உள்ளன. இவை டெலிகாம் பிரிவு பணிகளாகும். இவற்றில் பெண்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.200-ம், மற்ற பணிகளுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு 4-9-2018-ந் தேதி தொடங்குகிறது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க 31-10-2018-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் பட்டதாரிகள் சேர்ப்பு

இந்திய கடற்படையில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளித்து பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். தற்போது பைலட், அப்சர்வர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர் போன்ற அதிகாரி தரத்திலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ்வரும் பணிவாய்ப்பாகும். இந்த பயிற்சியில் மொத்தம் 22 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 2-7-1995 மற்றும் 1-7-2000-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கு பணிகள் உள்ளன. ஏர்டிராபிக் கண்ட்ரோல் பணிக்கு 2-7-1994 மற்றும் 1-7-1998 தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். நுண்ணறிவுத்திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 14-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான நேர்காணல் நவம்பர் 2018 மற்றும் மார்ச் 2019-ல் நடைபெறும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரி நிறுவனத்தில் 619 ஆபரேட்டர் வேலை

நிலக்கரி நிறுவனத்தில் ஆபரேட்டர் பணிக்கு 619 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். வடக்கு மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஆபரேட்டர் டிரெயினி பணிக்கு 619 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரிவு வாரியாக உள்ள காலியிட விவரம் : டம்பர் ஆபரேட்டர் - 213, டோஸர் ஆபரேட்டர் - 121, மைன் ஆபரேட்டர் - 28, பே லோடர் ஆபரேட்டர் - 21, கிரேன் ஆபரேட்டர் - 34, கிரேடர் ஆபரேட்டர் - 38, ஷோவல் ஆபரேட்டர் - 56, டிரில் ஆபரேட்டர் - 48, டிராக்லைன் ஆபரேட்டர் - 60 இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங் களைப் பார்க்கலாம். வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 24-9-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் பணியிடங்கள் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 10-9-2018-ந் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 24-9-2018-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 15-10-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும, விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nclcil.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 668 பணியிடங்கள்

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 668 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதன் மருத்துவ மையங்களும், கல்லூரியும் செயல்படுகிறது. தற்போது ரிஷிகேஷில் செயல்படும் எய்ம்ஸ் கிைளயில் நர்சிங் ஆபீஸர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 668 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக நர்சிங் ஆபீஸர் பணிக்கு 611 இடங்கள் உள்ளன. ஆபீஸ் அசிஸ்டன்ட், பெர்சனல் அசிஸ்டன்ட், பிரைவேட் செகரட்ரி, புரோகிராமர், ரேடியோகிராபிக் டெக்னீசியன், ரேடியோ தெரபி டெக்னீசியன், சீனியர் புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு சீனியர் புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் போன்ற பணிகளுக்கு, 40 வயதுடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதர பணிகளில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. நர்சிங் ஆபீசர் பணிக்கு 21 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள், நர்சிங் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் முதுநிலை படிப்பு படித்தவர்கள், ரேடியோகிராபி டிப்ளமோ படித்தவர்கள், எம்.சி.ஏ., டி.சி.ஏ. படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் ஒரு சில பிரிவில் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித் தகுதி, வயது வரம்பை இணைய தளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.3000 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 14-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://aiimsrishikesh.edu.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற ஆசையா?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் கணிசமான அளவில் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்...) காலியிடங்களை நிரப்பி வருகிறது. ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். போன்ற இந்திய ஆட்சிப் பணிகளில் அமர்வது இளைஞர்கள் பலருக்கும் கனவாக இருக்கலாம். அதில் பலருக்கு அதிகம் செலவு செய்து அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசு, ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமாக வழங்குதற்காக தனியே பயிற்சி அகாடமி ஒன்றை நடத்தி வருவதை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழ்நாடு அரசு, அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் எனப்படும் இந்த அமைப்பு தற்போது, வருகிற 2019-ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்களை பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெற தமிழக மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 1-8-2019 அன்று 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் முழுமையைான விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 19-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். நவம்பர் 18-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ச்சி பெறுபவர்கள் தங்கும் வசதியுடன், முழுநேர பயிற்சியை பெறலாம். தங்கும் வசதியின்றி பகுதி நேரமாக பயிற்சி பெறும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தகுதியான நபர்கள் மட்டுமே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முழு நேர பயிற்சியில் 225 பேரும், பகுதி நேர பயிற்சிக்கு 100 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். இடஒதுக்கீடு பிரிவு வாரியாக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கையை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இலவச பயிற்சியான இதற்கு காப்பு கட்டணமாக (Caution Deposit) ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. முழு நேர பயிற்சிக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் இந்த கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுவிடும். இது பற்றிய விரிவான விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 20 August 2018

வேலை - கால அட்டவணை - 20 AUGUST 2018


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள விரிவுரையாளர், இளநிலை தொழில்நுட்ப அதிகாரி போன்ற 34 பணியிடங்கள்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், விரிவுரையாளர், இளநிலை தொழில்நுட்ப அதிகாரி போன்ற பணிகளுக்கு 34 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயிரியல், இயற்பியல், வேதியியல், மெட்டலர்ஜி, மரைன் என்ஜினீயர் உள்ளிட்ட அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான, கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-8-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஷிப்பிங் கார்ப்பரேசன் இந்தியாவில் 50 பணியிடங்கள்

ஷிப்பிங் கார்ப்பரேசன் இந்தியா எனப்படும் பொதுத்துறை ஏற்றுமதி நிறுவனத்தில் மெஷினிஸ்ட் மெக்கானிக்கல், டிரெயினி மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்கள், பிட்டர் என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 30-8-2018 அன்று நடைபெறும் நேர்காணலில் தேவையான சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மும்பை ஷிப்பிங் நிறுவன வளாகத்தில் இதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை http://www.shipindia.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய கல்வி வாரிய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.) தனது கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு சி.டி.இ.டி. எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கும், பட்டப்படிப்புடன், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பணிகளுக்கும், விண்ணப்பிக்கலாம். தாள் 1 அல்லது தாள் 2 இவற்றில் ஏதேனும் ஒன்றை எழுதும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.700-ம், இரண்டு தாளையும் எழுதுபவர்கள் ரூ.1200-ம், மற்ற பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ.350-ம், இரண்டு தாள் களுக்கு ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-8-2018-ந் ேததியாகும், கட்டணம் செலுத்த கடைசி நாள் 30-8-2018-ந் தேதியாகும். தேர்வுக்கான தேதி் பின்னர் அறிவிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வழியாக முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நேரு தொழில்நுட்ப மையத்தில் 92 பணியிடங்கள்

அலகாபாத்தில் செயல்படும் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் சீனியர் மெடிக்கல் ஆபீசர், மெடிக்கல் ஆபீசர், டெக்னிக்கல் மேன்பவர், அகடமிக் சப்போர்ட் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 92 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், முதுநிலை தோட்டக்கலை படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக 27-8-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://www.mnnit.ac.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8339 பணிகள்

மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பள்ளி அமைப்பு கேந்திரிய வித்யாலயா. இந்த அமைப்பின் கீழ் 1183 பள்ளிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. 3 பள்ளிகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. 1962 முதல் இந்த பள்ளி கல்வி அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் பணிக்கு 76 பேர், துணை முதல்வர் பணிக்கு 220 பேர், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 592 பேர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1900 பேர், நூலகர் பணிக்கு 50 பேர், ஆரம்பநிலை ஆசிரியர் பணிக்கு 5 ஆயிரத்து 300 பேர், இசை ஆசிரியர் பணிக்கு 201 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 8 ஆயிரத்து 339 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் 24-8-2018-ந் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://kvsangathan.nic.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஐ.டி. காரக்பூர் அலுவலக பணியிடங்கள்

இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளில் தற்போது அலுவலக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கோரக்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.பி.ஏ., எம்.பி.ஏ, சிவில் என்ஜினீயரிங், லைபிரரி சயின்ஸ், உடற்கல்வி மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. பிளஸ்-2 படித்தவர்களுக்கும் சில பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.iitkgp.ac.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடல்சார் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் சார்ந்த பணி

இந்திய மாரிடைம் யுனிவர்சிட்டி எனப்படும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை சோழிங்கநல்லூரில் செயல்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது பல்வேறு கடல்சார் படிப்புகளை வழங்குவதுடன், பல்வேறு ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தற்போது கற்பித்தல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பணிக்கு 16 பேர், இணை பேராசிரியர் பணிக்கு 31 பேர், உதவி பேராசிரியர் பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மரைன் என்ஜினீயரிங், நாட்டிகல் சயின்ஸ், நேவல் ஆர்கிடெக்சர், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், ஹார்பர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், போர்ட்- ஷிப்பிங் மேனேஜ்மென்ட், சப்ளை செயின் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.imu.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

ஏர் இந்திய விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நேர்காணலில் பங்கேற்க விரும்புபவர்கள் பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், ஓ.பி.சி. பிரிவினர் 38 வயதிற்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 1-9-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. ஏ.எம்.இ. டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். விருப்பமுள்ள பொது மற்றும் ஓ..பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000, கட்டணத்தை டி.டி.யாக எடுத்து தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராகலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் 4-9-2018-ந் தேதியும், ஏ.எம்.இ. படித்தவர்களுக்கு 6-9-2018-ந் தேதியும், முன்னாள் படைவீரர்கள் 10-9-2018-ந் தேதியும் நேர்காணலில் பங்கேற்கலாம். புதுடெல்லி நியூ கஸ்டம்ஸ் ஹவுசில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://aiesl.airindia.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில், துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

துணை ராணுவ படையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் போன்ற பணிகளுக்கு 181 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நர்சிங், பார்மசி போன்ற துணை மருத்துவம் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று சசாஸ்திரா சீமா பல். சுருக்கமாக எஸ்.எஸ்.பி. என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஹெட்கான்ஸ்டபிள் தரத்திலான துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 181 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணிகளுக்கு நர்சிங் படித்த பெண்கள் 23 பேரும், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் (பார்மசிஸ்ட்) - 18 இடங்களும், ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன்- 2 இடங்களும், டென்டல் டெக்னீசியன்-2 இடங்களும், ரேடியோகிராபர் 8 இடங்களும், ஸ்டெனோகிராபர்-54 இடங்களும் உள்ளன. ஹெட்கான்ஸ்டபிள் பிரிவில் 74 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஒவ்வொரு பிரிவு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. 9-9-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. கல்வித்தகுதி பிளஸ்-2 படிப்புடன் ஜெனரல் நர்சிங், பார்மஸி, ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன், டென்டல் ஹைஜீனிஸ்ட், ரேடியோ டயக்னாஸிஸ் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தரத்தி லான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள், ஸ்டெனோகிராபர் மற்றும் ெஹட்கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் சப்-இ்ன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, திறமைத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-9-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ssbrectt.gov.in. என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 4102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு 4102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 4102 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- “இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)” அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இதைக் கொண்டு இந்த தேர்வை அனுமதிக்கும் 20 பொதுத்துறை வங்கிகளில் பணி வாய்ப்பை பெறலாம். தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 8-வது பொது எழுத்து தேர்வு (CRP- PO/MT-VIII) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 20 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 4 ஆயிரத்து 102 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவுக்கு 2033 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 1185 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 599 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 285 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளில் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-8-1988-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1998-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணைய தளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கியத் தேதிகள்: ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 4-9-2018 முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 13, 14, 20 மற்றும் 21-ந் தேதிகள் முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 18-11-2018 பொது நேர்காணல் நடைபெறும் காலம் : ஜனவரி/பிப்ரவரி 2019 மேலும் விரிவான விவரங்களை ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தெற்கு ரெயில்வேயில் சுகாதார ஆய்வாளர் பணிகள்

தெற்கு ரெயில்வேயில் நர்சிங் சூப்பிரண்டன்ட் மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- சென்னையை தலைமை இடமாக கொண்டு தெற்கு ரெயில்வே செயல்படுகிறது. தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்தில் நர்சிங் சூப்பிரண்டன்ட், சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர், டயாலிசிஸ் டெக்னீசியன், ரேடியோகிராபர், பார்மசிஸ்ட், இ.சி.ஜி. டெக்னீசியன், லேப் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிவாரியான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பார்மசிஸ்ட் பணிக்கு 35 வவயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. நர்சிங்- மிட ்வைபரி படித்தவர்கள், துணை மருத்துவ பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் பி.எஸ்.சி., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-8-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் rrcmas.in மற்றும் http://www.sr.indianrailways.gov.in/ ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 16 August 2018

அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள  2 ஆயிரம் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார். 200 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளா கம், தனியார் பள்ளிகள் மற்றும் அமைப்புகள் மூலம் புனரமைக் கப்பட்டு மாதிரிப் பள்ளியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பள்ளியின் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாதிரிப் பள்ளியின் ஆய்வுக்கூடம், நூலகத்தை திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், இப்பள்ளியில் படித்து தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் பவானி சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர் களிடம் செங்கோட்டையன் கூறிய தாவது: நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி தரப் படவில்லை. எனவே, இந்தாண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் முழுப் பாதுகாப்புக்காக இந்தியா விலேயே முதன்முறையாக உதவி தொலைபேசி எண் (14417) வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் “ஸ்மார்ட் வகுப்புகள்” தொடங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பிளஸ் 2-வுடன் 12 புதிய பாடத்திட்டங்கள் இணைக்கப்படும். அரசுப் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சமூக நலத்துறையுடன் இணைந்து அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் அங்கான்வாடி மையங்களில் எல்.கே.ஜி.., யு.கே.ஜி. ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 13 August 2018

டி.என்.பி.எஸ்.சி. 1199 குரூப்-2 பணிகள்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,199 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு வி்ண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சில பணிகளுக்கு 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். 9-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். செப்டம்பர் 11-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நவம்பர் 11-ந் தேதி நடைபெறும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கப்பல் பணிமனையில் 318 பயிற்சிப் பணிகள்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று மும்பையில் செயல்படுகிறது. மும்பை நேவல் டாக்யார்டு எனப்படும் இந்த பணிமனையில் தற்போது ‘அப்ரண்டிஸ் டிரெயினி’ பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 318 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், பிளம்பர், மாசன், மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், பவுண்டரி மேன், பைப் பிட்டர், ஷிப்ரைட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இது சார்ந்த பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சமீபத்தில் ஐ.டி.ஐ. முடித்த விண்ணப்பதாரர்களுக்கு பிரெஷர் குறிப்பிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர்கள் 1-4-1999 மற்றும் 31-3-2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் படைப்பிரிவு பணியாளர் களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனும், பார்வைத்திறன் 6/6 முதல் 6/9 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.www.bhartiseva.comஎன்ற இணையதளம் வழியே 17-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான இடத்தில் குறிப்பிட்ட சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரெயில்டெல் நிறுவனம்

மத்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்று ரெயில்டெல் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட். இது ரெயில்வே தொடர்பான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் ெஜனரல் மேனேஜர் (டெக்னிக்கல்), சீனியர் மேனேஜர்/ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம் சீனியர் மேனேஜர் (சர்வீஸ் அஸ்யூரன்ஸ்), அசிஸ்டன்ட் மேனேஜர் (டெக்னிக்கல்) போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 37 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. பி.இ., பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணியிடங்கள் தொடர்பான என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-8-2018-ந் தேதி வி்ண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.railtelindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மெக்கான். உலோகவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான இது மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உருக்கு நிறுவனமான ‘செயில்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது உதவி திட்ட பொறியாளர், திட்ட பொறியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, முதுநிலை திட்ட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 205 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை காண்டிராக்டு அடிப்படையிலான ஒப்பந்த பணியிடங்களாகும். என்ஜினீயரிங் மற்றும் பி.டெக், ஆர்கிடெக் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 39 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது, மதிப்பெண் சதவீதம் போன்றவற்றில் அரசு விதிகளின்படி தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.meconlimited.co.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 20-8-2018-ந் தேதியாகும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை

அகில இந்திய அறிவியல் மருத்துவ மையம், எய்ம்ஸ் எனப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. தற்போது ேஜாத்பூர் மற்றும் புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜோத்பூர் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதுடெல்லி கிளையில் சீனியர் பயோ கெமிஸ்ட், சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்புகள், மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஜோத்பூர் கிளையில் பணியிடங்கள் உள்ளன. பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 24-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.aiimsjodhpur.edu.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். பயோகெமிஸ்ட்ரி முதுநிலை படிப்பு, சைகா லஜிஸ்ட் முதுநிலைப் படிப்புடன் ஆராய்ச்சி படிப்பு, சிவில் டிப்ளமோ என்ஜினீயரிங், பிஸியோதெரபி பட்டப்படிப்பு, ஸ்பீச்அண்ட் ஹியரிங் பிஎஸ்.சி. படிப்பு படித்தவர்களுக்கு புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, 30-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.aiims.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மெட்ரோ, ரெயில்டெல் நிறுவனங்களில் வேலை

பெங்களூரு மெட்ரோ மற்றும் ரெயில் டெல் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பி.எம்.ஆர்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ரெயில்வே நிறுவனத்தில் ‘அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர்’ மற்றும் ‘அசிஸ்டன்ட் என்ஜினீயர்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 99 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிகளுக்கு 31 இடங்களும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கு 68 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயரிங் தொடர்பான பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணியிடங்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பி.இ., பி.டெக் படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். அசிஸ்டன்ட் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-8-2018-ந் தேதிக்குள் பெங்களூரு, மெட்ரோ ரெயில் நிறுவன முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முப்படை அதிகாரி பணிகளுக்கு 414 இடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவ அகாடமிகளில் 414 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி களுக்கான தேர்வு (சி.டி.எஸ்.-2018(2) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 414 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 100 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும், சென்னை ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் 237 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-7-1995 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் 1-7-2019 தேதியில் 20 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி : ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் சேரும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் சேருபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத்திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முக்கிய தேதிகள் : ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 3-9-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 18-11-2018 அன்று நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை பார்க்க www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரி நிறுவனத்தில் 480 பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 480 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று ‘சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்’. பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது மைனிங் சர்தார் மற்றும் எலக்ட்ரீசியன் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 480 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் மைனிங் சர்தார் பணிக்கு 269 இடங்களும், எலக்ட்ரீசியன்/ டெக்னீசியன் பணிகளுக்கு 211 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 10-8-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மைனிங் சர்தார் சான்றிதழ் பெற்றவர்கள் மைனிங் சர்தார் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள், 20-9-2018-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.centralcoal fields.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 6 August 2018

நாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன மத்திய மந்திரிகள் தகவல்

வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலைவிரித்தாடும் நிலையில், நாடு முழுவதும் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அரசுப்பணிகளில் காலியிடங்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய மந்திரிகள் பதில் அளித்தனர். அதில் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மொத்தம் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2 லட்சத்து 24 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் காவல் துறையில் 5 லட்சம் பணியிடங்களும், ரெயில்வே மற்றும் சுகாதாரத்துறையில் 4 லட்சம் பணியிடங்களும் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ராணுவத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும், நீதித்துறையில் நீதிபதிகள் உள்பட 5 ஆயிரம் பணியிடங்களும், அங்கன்வாடி மையங்களில் 2 லட்சத்து 20 ஆயிரம் பணியிடங்களும், தபால் துறையில் 54 ஆயிரத்து 263 இடங்களும் காலியாக இருப்பதாக மத்திய மந்திரிகள் தெரிவித்து உள்ளனர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலை - கால அட்டவணை - 06 AUGUST 2018

வேலை - கால அட்டவணை - 06 AUGUST 2018

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அணுசக்தி மையத்தில் 224 வேலைகள்

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 224 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மும்பையில் செயல்படுகிறது. மத்திய அரசு நிறுவனமாக இதில் தற்போது ஸ்டிபென்டியரி டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 224 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கேட்டகரி 1 பிரிவில் 86 இடங்களும், கேட்டகரி 2 பிரிவில் 138 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 22 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்கள் கேட்டகரி 1 பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் கேட்டகரி 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

கேட்டகரி 1 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.150-ம், கேட்டகரி 2 பணி விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும்் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.





விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பயிற்சிப்பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட். தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், மெஷினிஸ்ட், டர்னர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லேப் அசிஸ்டன்ட், அட்டன்ட் ஆபரேட்டர், அக்கவுண்டன்ட், பேக் ஆபீஸ் அசிஸ்டன்ட், எக்சிகியூட்டிவ், செக்யூரிட்டி கார்டு போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

8,10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.எஸ்சி., பி.காம், பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., பி.ஜி.டிப்ளமோ, எம்.சி.ஏ, சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., எம்.எப்.சி. போன்ற படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.cpcl.co.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தெற்கு ரெயில்வேயில் 257 பணிகள்

தெற்கு ரெயில்வேயில் 257 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

மத்திய ரெயில்வேயின் கீழ், சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வே மண்டலம் செயல்படுகிறது. தற்போது இந்த மண்டலத்தில் ‘சபாய்வாலா’ பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது கீழ்நிலை அலுவலக பணிகளாகும். மொத்தம் 257 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 130 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 69 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 19 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந்தேதியில் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-8-2019-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அதிகாரி வேலை

என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, கடல் எல்லையை பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேருவதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும், தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது.

தற்போது எக்சிகியூட்டிவ் பிராஞ்ச் மற்றும் டெக்னிக்கல் பிராஞ்ச் -ஜூன் 2019 பயிற்சியில் சேர, பட்டதாரி என்ஜினீயர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். ேநவல் ஆர்கிடெக்சர் பிரிவில் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 115 பேர் இந்த பயிற்சி சேர்க்கையில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் எக்சிகியூட்டிவ் பிரிவில் 43 இடங்களும், டெக்னிக்கல் பிரிவில் 72 இடங்களும் உள்ளன. இவை ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும், குறுகிய கால பணிவாய்ப்பாகும்.

இந்த பயிற்சியில் சேர விரும்பும், விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 19½ முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் பி.இ., பி.டெக் துறை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

டெக்னிக்கல் பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட குறிப்பிட்ட என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எக்சிகியூட்டிவ் மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் இந்த படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். எக்சிகியூட்டிவ் விண்ணப்பதாரர்கள் பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) மூலம் இதற்கான தேர்வு முறைகள் நடத்தப்படும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரரின் தகுதிகள் சோதிக்கப்படும். நுண்ணறிவுத் தேர்வு, படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை நடைபெறும்.

இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இது 14 ஆண்டுகள் பணிக்காலத்தைக் கொண்ட ஷாட் சர்வீஸ் கமிஷன் பணியாகும். அதற்கு பின்னர் விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் பணி நீடிப்பு பெற முடியும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலுக்கு அழைக்கப்படும்போது விண்ணப்பம் மற்றும் சான்றுகள் எடுத்துச் செல்ல வேண்டும்.

முக்கியத் தேதி:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-8-2018. மேலும் விரிவான விவரங்களை www.joinindiannavy.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் வங்கியில் 417 புரபெசனரி அதிகாரி பணிகள்


இந்தியன் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 417 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 212 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 112 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 62 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 31 இடங்களும் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதுநிலை வங்கி மற்றும் நிதிப் பணிகளுக்கான ஓராண்டு டிப்ளமோ பயிற்சி வழங்கப்படும். மணிப்பால் வங்கிப்பணி பயிற்சி கல்லூரியில் இதற்கான டிப்ளமோ பயிற்சி வழங்கப்படுவதுடன் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-8-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தனிநபர் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டு பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசிநாள் 27-8-2018-ந் தேதி ஆகும்.

முக்கியத் தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் 1-8-2018

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-8-18

முதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 6-10-2018

ஆன்லைன் மெயின் தேர்வு நடைபெறும் நாள் : 4-11-2018

நேர்காணல் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.indianbank.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவ நிறுவனத்தில் 494 தொழில்நுட்ப பணியிடங்கள்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனத்தில் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு 494 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் “சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட்-பி” பணியிடங்களை நிரப்ப “செப்டம்” எனப்படும் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் 494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 260 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 130 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 68 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 36 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுடையவர்களாக இருக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது ஏதேனும் ஒரு அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக் கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 29-8-18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை | தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 10, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து 1 ஆண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தொகை மற்றும் குடும்ப ஆண்டு வருமானம், உச்சவரம்பு ஏதுவுமில்லை. இவ்வாறு சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச் செல்வன் தெரிவித்து உள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 3 August 2018

பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உள்பட சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடைத்தாள் நகல்கள் வெளியிடப்படுகின்றன. அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுதுறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE