TRB

Saturday, 8 September 2018

தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்  அமைச்சர் தொடங்கி வைத்தார் 

தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை திருநெல்வேலியில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக, கேரளாவில் வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட் களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 22 லாரிகள் மூலம் அமைச் சர் செங்கோட்டையன் கொடி யசைத்து அனுப்பி வைத்தார். விடுமுறை நாட்களில் பயிற்சி பின்னர் அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. இருப்பினும், நீதிமன்ற உத்தரவால் நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, தமிழகம் முழு வதும் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் படு கிறது. இந்த மையங்கள் வெள்ளிக் கிழமை முதல் செயல்படத் தொடங்கின. விடுமுறை நாட்களில் காலை, மாலையில் 3 மணி நேரம் இங்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். பள்ளி முடிந்ததும் மாலை நேரங்களிலும் பயிற்சி வகுப்பு நடத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பயிற்சி அளிக்க உள்ளனர். 1,000 பள்ளிகள் தயார் கடந்த ஆண்டு 1,472 அரசுப் பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 24 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்காவது மருத்துவக் கல்வி யில் சேர இடம் கிடைக்கும் நிலை உருவாக்கப்படும். பிளஸ் 1 பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் டேப் மூலம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். பெண் ஆசிரியர்கள் பாலி யல் ரீதியான பிரச்சினைகளுக்கு 14417 என்ற இலவச தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர் குறித்த விவரங் கள் பற்றி ரகசியம் காக்கப்படும் என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-4 தேர்வுக்கு மருத்துவ சான்றிதழ்  மாற்றுத்திறனாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மாற்று ஏற்பாடு

குரூப்-4 தேர்வில் மருத்துவ சான் றிதழை ஆன்லைனில் சமர்ப் பிக்க இயலாத மாற்றுத்திற னாளிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மாற்று ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அவர்கள் மருத்துவ சான்றிதழுக்குப் பதிலாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டையை பதிவேற்றம் செய்யலாம். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் தரவரிசை பட்டி யல் ஜூலை 30-ம் தேதி வெளி யிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக் கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் ஆகஸ்டு 27-ம் தேதி தேர்வாணை யத்தின் இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. அவர்கள் அரசு இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இ-சேவை மையங் களின் பட்டியலும் இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவக் குழுவி டம் உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று பதிவேற்றம் செய்ய வேண் டும் என்று முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவ தால் மருத்துவச் சான்றிதழ் பெறு வதில் சிரமம் இருப்பதாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அக்கூட்டமைப்பின் கோரிக் கையை ஏற்று மாற்றுத்திறனாளி களுக்கு தளர்வு அளிக்கப்படு கிறது. அதன்படி, மருத்துவக் குழுவிடமிடமிருந்து பெறப் பட்ட சான்றிதழ் இல்லையெ னில் அவர்கள் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதோடு, அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட் டால் அப்போது உரிய மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கிறேன் என்று உறுதிமொழி கடிதம் எழுதி அதையும் பதிவேற்றம் செய்திட வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய் யாத விண்ணப்பதாரர்கள் அல்லது கலந்தாய்வின்போது மருத்துவக் குழுவிடமிருந்து உரிய மருத்துவச்சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க தவறும் விண் ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு பரிசீலிக் கப்பட மாட்டார்கள். இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 25300337 ஆகிய தொலைபேசி எண்களிலும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 5 September 2018

தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு செப்டம்பருக்கு பதில்  ஜூலை மாதம் மட்டுமே துணைத் தேர்வு  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் 

வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வில் தோல்வியடையும் மாணவர் களுக்கு செப்டம்பருக்கு பதில் ஜூலை மாதம் மட்டுமே துணைத்தேர்வு நடத் தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் 363 ஆசிரியர்களுக்கு இன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படு கின்றன. இதுதவிர, தூய்மைப் பள்ளி விருதும் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாளை (இன்று) மாலை 3.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில், தமிழ் வழியில் படித்த 960 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை, ஆங்கில வழியில் படிக் கும் மாணவர்களுக்கும் சேர்த்து ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. அதை மாற்றி தற்போது முழுமையாக தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தன்று 363 ஆசிரியர் களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை அடங்கும். தூய்மைப் பள்ளி விருது இது தவிர, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்ட 40 பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளி விருதுகள் வழங்கப்பட உள்ளன. துணைத் தேர்வு முறையில் அடுத் தாண்டு முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தனித்தேர் வர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத்தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இந்தாண்டு மட்டும் செப்டம்பரில் இந்த துணைத் தேர்வு நடக்கும். அடுத்தாண்டு முதல், ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்று அவர்கள் கல்லூரி களில் சேரலாம். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: பிறமொழி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளதே? தற்போது பிறமொழி மாணவர் களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மலை யாள மொழி பாடப் புத்தகங்கள் தான் மொழிபெயர்ப்பு காரணமாக தாமதமாகியுள்ளது. ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும். அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பல்வேறு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளோம். விரைவில் அவர்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்படும். பள்ளிகளை தத்தெடுக்க விரும்புவோர், அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் 24 மணி நேரத்தில் தேவையான பணிகள் முடித்து தரப்படும். பள்ளி மாணவர்கள் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார்கள் வந்துள்ளனவா? தொடர்பு எண் 14417-ல் இதுவரை 300 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேசிய நல்லாசிரியர் விருது எண்ணிக்கை உயர்த்தப்படுமா? வரும் ஆண்டு முதல் 22 ஆக உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்திக்க டெல்லி செல்கிறேன். முதல்வரிடமும் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 September 2018

‘கேட்’ தேர்வு அறிவிப்பு

2019-ம் ஆண்டுக்கான ‘கேட்’ (GATE-2019) தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம், மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்கி போன்ற இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்ப மைய (ஐ.ஐ.டி.) கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பு (எம்.டெக்), மற்றும் பிஎச்.டி. படிப்பதற்கு இது ஒரு தகுதித் தேர்வாக பின்பற்றப்படுகிறது. அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்த தகுதித் தேர்வை அடிப்படையாகக் கொண்டு தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களை நிரப்புவது உண்டு. பல தனியார் நிறு வனங்களும், கல்வி மையங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எனவே வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் ஒரு தேர்வாகவும் இந்த தேர்வு மதிப்பு பெறுகிறது. இனி இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்... கல்வித் தகுதி: என்ஜினீயரிங்/ தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் பட்டப்படிப்புகள், முதுநிலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் எழுதலாம். தேர்வு முறை: இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும். கட்டணம். இந்த தேர்வை எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750-ம் மற்றவர்கள் ரூ.1500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். gate.iitm.ac.in என்ற பக்கம் வழியாக அறிவிப்பின் முழு விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்ப பதிவை தொடங்கவும். தேவையான சான்றுகளை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். முக்கிய தேதிகள் : இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 21-9-2018 தேர்வு நடைபெறும் நாட்கள் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2,3, மற்றும் 9,10-ந் தேதிகள் இது பற்றிய விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.