Tuesday, 27 November 2018

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mntfreeias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 26 November 2018

வேலை - கால அட்டவணை - 26 NOVEMBER 2018

வேலை - கால அட்டவணை - 26 NOVEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஐ.டி.யின் கான்பூர் கிளையில் திட்ட உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர் பணி

இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் கான்பூர் கிளையில் திட்ட உதவியாளர், முதுநிலை திட்ட உதவியாளர் 12 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://www.iitk.ac.in/ இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2018-ந் தேதி ஆகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக என்.ஏ.ஆர்.ஐ. என அழைக்கப்படுகிறது. புனேயில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. டிப்ளமோ நர்சிங் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.300க்கு டி.டி. எடுத்து இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. நேர்காணலின் போது எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் நடத்தப்படுகிறது. 30-11-2018 மற்றும் 4-12-2018 ஆகிய தேதிகளில் இதற்கான தேர்வுமுறைகள் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://www.nari-icmr.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணி

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நிறுவனங்களில் ஒன்றான பேங்க் நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் என்விரான்மென்டல் என்ஜினீயர், இண்டஸ்ட்ரியல் ஒர்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஐ.டி.ஐ, மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஒர்க்மேன் பணிக்கும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்விரான்மென்டல் என்ஜினீயர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப் பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் 10-12-2018-ந் தேதியில் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். விரிவான விவரங்களை www.bnpmindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கனரா வங்கியில் மேனேஜர் தரத்திலான செக்யூரிட்டி அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 300 கிளைகள் இந்த வங்கிக்கு உள்ளன. தற்போது இந்த வங்கியில் மேனேஜர் தரத்திலான செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-11-2018-ந் தேதியில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். ராணுவம் அல்லது துணை ராணுவத்தில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் முழுமையான விவரத்தை www.canarabank.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். 27-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்துவிட்டு, 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணி

முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணியிடங்களுக்கு 38 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைஸ் பிரசிடென்ட், அசிஸ்டன்ட் வைஸ் பிரசிடென்ட், மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் பல பிரிவுகளில் பணிகள் உள்ளன. பி.இ., பி.டெக், சி.ஏ., சி.எப்.ஏ., எம்.பி.ஏ., முதுநிலை புள்ளியியல், எச்.ஆர். முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவம் வேறுபடுகிறது. எனவே அந்தந்த பணிக்கான சரியான தகுதி விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், மற்றவர்கள் ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 6-12-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் 372 வேலைவாய்ப்புகள்

இந்திய விமான ஆணைய நிறுவனம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஓன்று ஏ.ஏ.ஐ.கிளாஸ் என்பதாகும். விமான சரக்குகளை கையாளும் நிறுவனமான இதில் தற்போது செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 372 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மதுரை, திருப்பதி, புவனேஸ்வர் உள்பட பல்வேறு விமான தள அலுவலகங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. மதுரையில் 32 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு விமான தளங்களில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தி், ஆங்கிலம் மொழி அறிவு அவசியம். விண்ணப்பதாரர் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு உடல் தகுதி சோதிக்கப்படும். எழுத்துத் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 15-12-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை aaiclas-ecom.org. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிப்பணி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்று விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 173 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாாியாக உள்ள பணியிட விவரம் : ஏரோநாட்டிக்கல், - 15. கெமிக்கல் - 10, சிவில் - 12, எலக்ட்ரிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 40, மெக்கானிக்கல் - 40, மெட்டலர்ஜி - 6, புரோடக்சன் - 6, லைபிரரி அண்ட் இன்பர்மேசன் சயின்ஸ் - 8, கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் - 4 .

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உடப்ட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 33 வயதுக்கு உட்பட்டவர்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் உள்ள பிரிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், லைபிரரி சயின்ஸ் பட்டப்படிப்பு, கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு 30-11-2018-ந் தேதியும், லைபிரரி சயின்ஸ், ஓட்டல்மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு 1-12-2018-ந் தேதியும் நேர்காணல் நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் www.sdcentre.org மற்றும் mhr.nats.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்துவிட்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். விரிவான விவரங்களையும் மேற்குறிப்பிடட்ட இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் வேலை

உருக்கு ஆலை நிறுவனத்தில் ஆபரேட்டர் மற்றும் அட்டன்டன்ட் பணிக்கு 156 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய உருக்கு ஆணைய நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா சுருக்கமாக செயில் (SAIL) என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட நாடு முழுவதும் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது மேற்கு வங்காள மாநிலம் பர்ன்பூரில் செயல்படும் செயில் நிறுவன கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 156 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் பணிக்கு 126 இடங்களும், அட்டன்ட் பணிக்கு 30 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு:-

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 14-12-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள் ஆபரேட்டர் பணிக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் அட்டன்டன்ட் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250-ம், அட்டன்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கும இந்த பிரிவினர் ரூ.150-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு/பணித்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 14-12-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.sail.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசர்வ் வங்கியில் 270 பணிகள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரிசர்வ் வங்கியில் செக்யூரிட்டி கார்டு பணிக்கு 270 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு-

வங்கிகளின் தலைமை வங்கி என அழைக்கப்படுவது ரிசர்வ் வங்கி. சுருக்கமாக ஆர்.பி.ஐ. என அழைக்கப்படும் இந்த வங்கியில் பணிவாய்ப்பைப் பெறுவதை இளைஞர்கள் கவுரவமாக கருதுவது உண்டு. தற்போது இந்த வங்கியில் செக்யூரிட்டி கார்டு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 18 கிளைகளுக்கு மொத்தம் 270 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சென்னைக்கு 19 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மும்பையில் 80 இடங்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 151 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 52 இடங்களும், எஸ்.சி. பிரிவினர் 30 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 37 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-11-2018-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.பி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 30 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 30-11-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 November 2018

வேலை - கால அட்டவணை - 19 NOVEMBER 2018

வேலை - கால அட்டவணை - 5 NOVEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பயிற்சிப் பணி

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-11-2018-ந் தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படும்.

வணிகவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள், சி.ஏ. இன்டர்மீடியட் அளவிலான தேர்வை எதிர்கொண்டவர்கள் இந்த பயிற்சிப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் 27-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இது பற்றிய விவரங்களை https://nationalinsuranceindia.nic.co.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பெட்ரோலியம் நிறுவனத்தில் 147 பணிகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 147 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சுருக்கமாக பீ.பி.சி.எல். (BPCL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் கெமிஸ்ட் டிரெயினி, ஆபரேட்டர் டிரெயினி, ஜெனரல் ஒர்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் வாரியாக காலியிட விவரம் : ஜெனரல் ஒர்க்மேன் (கெமிக்கல்) - 63, மெக்கானிக்கல் - 32, இன்ஸ்ட்ருமென்டேசன் - 17, கெமிஸ்ட் டிரெயினி - 13, ஆபரேட்டர் டிரெயினி - 12 பேர்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2018-ந் தேதியில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பணியிடங்கள் உள்ள பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.எஸ்.சி. வேதியியல் படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 26-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.bharatpetroleum.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் ஆயில் கழக நிறுவன அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி

இந்தியன் ஆயில் நிறுவனம் | இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. இதன் மேற்கு மண்டலத்தில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 307 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மகாராஷ்டிராவில் 177 இடங்களும், கோவாவில் 9 இடங்களும், குஜராத்தில் 118 இடங்களும், உத்தரகாண்டில் 3 இடங்களும் உள்ளன.இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 27-11-2018-ந் தேதியில் 18 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கும், 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் அக்கவுண்டன்ட் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். https://www.iocl.com/ என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களை பார்த்து விட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேளாண் அதிகாரி பணிகளுக்கான நெட் தேர்வு அறிவிப்பு

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணிகளை நெட் தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேசிய தகுதி தேர்வு எனப்படும் இந்த நெட் தேர்வை (NET) எழுதுபவர்கள், வேளாண் கல்லூரி - பல்கலைக்கழகங்களில் இந்த பணியிடங்களை பெறலாம். அறிவியல் பட்டமேற்படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டுக்கு 2 முறை நெட் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான 2-வது நெட் ஐ.சி.ஏ.ஆர். அமைப்பால் அறிவிக்கப்பட்டு உள்ளது. 1-7-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வை எழுத உச்ச வயது வரம்பு தடையில்லை.

எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள் வேளாண் சார்ந்த முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 29-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.asrb.org.in மற்றும் http://www.icar.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி

பால்மெர் லாவ்ரி கோ லிமிடெட் நிறுவனம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிபொருள் நிறுவனமாகும். தற்போது இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நிறுவனம் கொல்கத்தாவில் செயல்பட்டு வருகிறது.

மினிரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர் ஆபரேஷன்ஸ், டெபுடி மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் போன்ற பணிகளுக்கு மொத்தம் 106 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது.

எம்.பி.ஏ., மேனேஜ்மென்ட் முதுநிலை படிப்புகள், லாஜிஸ்டிக்ஸ், ஆபரேசன்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்புகள், சட்டப் படிப்புகள், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கேட்கப்பட்டு உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை www.balmerlawrie.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22-11-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, முற்போக்கு கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (சி.டி.ஏ.சி.). நொய்டாவில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது திட்ட மேலாளர், மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 96 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக திட்ட என்ஜினீயர் பணிகளுக்கு 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும், திட்டமேலாளர் போன்ற பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக், எல்.எல்.எம்., எல்.எல்.பி., எம்.சி.ஏ., மற்றும் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 1-12-2018-ந் தேதியில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்க இருக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய நிறுவனங்களில் பயிற்சிப் பணிகள்

முன்று மத்திய நிறுவனங்களில் ஏராளமான பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பணிமனை ஒன்று விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. இந்த பணி மனைக்கான பயிற்சி மையமும் அங்கு இயங்குகிறது. நேவல் டாக்யார்டு அப்ரண்டிஸ் ஸ்கூல் எனப்படும் அந்த பணிமனையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுகளுக்கான பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 275 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரீசியன், எலக்ட்ரோபிளேட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், டூல் மெயின்டனன்ஸ், பெயிண்டர், பேட்டன் மேக்கர், ஆர் அண்ட் ஏ.சி. மெக்கானிக், வெல்டர், கார்பென்டர், பவுண்டரிமேன், போர்ஜர், ஹீட் டிரீட்டர், மெக்கானிக், ஷீட் மெட்டல் ஒர்க்கர், பைப்பிட்டர் போன்ற பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பிரிவுக்கு மான பணியிட எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பயிற்சிப்பணியில் சேர விரும்புபவர்கள் 1-4-1998 மற்றும் 1-4-2005 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 1-4-1993-க்கு பின்னர் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு அதன் நகலுடன், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை கப்பல் தள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 5-12-2018-ந் தேதி கடைசிநாளாகும். நகல் விண்ணப்பம் 12-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.indiannavy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி வேலைகள்

கெயில் கியாஸ் நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விவரம் வருமாறு:இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் சுருக்கமாக கெயில் (GAIL) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர், போர்மேன், ஜூனியர் கெமிஸ்ட், ஜூனியர் சூப்பிரண்டன்ட், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் வாரியான காலியிட விவரம் : போர்மேன் - 55 பேர், டெக்னீசியன் - 51, மார்க்கெட்டிங் அசிஸ்டன்ட் - 21, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டன்ட் -10 , ஜூனியர் சூப்பிரண்டன்ட் - 7, ஜூனியர் கெமிஸ்ட் - 10 பேர், ஜூனியர் என்ஜினீயர் - 3, அசிஸ்டன்ட் - 3.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30-11-2018-ந் தேதியில், 26 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

டிப்ளமோ என்ஜினீயர், இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை வேதியியல் படிப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கு சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.இது பற்றிய விரிவான விவரங்களை http://gailonline.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை

இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம்.இது பற்றிய விவரம் வருமாறு:-இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப் படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் (ஆண்-பெண்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கனை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1-7-1994 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1994 மற்றும் 30-6-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர் காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-11-2018-ந் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் பணி

ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் ஏராளமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி., நாட்டின் புகழ்பெற்ற கல்வி மையங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள இதன் கிளை கல்வி மையங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி கிளையில் சீனியர் லேபரேட்டரி அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது. வேதியியல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், கணிதவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட 27 பிரிவுகளில் 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் முதுநிலை படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-12-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விவரங்களை www.iitd.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதேபோல ஐ.ஐ.டி. காரக்பூர் கிளையில் பிரின்சிபல் புராஜெக்ட் அதிகாரி பணிக்கு 5 பேர், முதுநிலை திட்ட அதிகாரி பணிக்கு 10 பேர், திட்ட வழிகாட்டி அதிகாரி 13 பேர், முதுநிலை திட்ட அதிகாரி, திட்ட அதிகாரி, இளநிலை திட்ட அதிகாரி பணிகளுக்கு 22 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.iitkgp.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி ஐ.ஐ.டி. மும்பை கிளையில் திட்ட உதவியாளர், பாதுகாப்பு உதவி அதிகாரி பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை http://www.iitb.ac.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு 7-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். திருச்சி என்.ஐ.டி. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான என்.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளிலும் ஏராளமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. திருச்சிராப்பள்ளியில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னீசியன் மற்றும் டிரேடு, பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 34 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை https://www.nitt.edu என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 26-11-2018-ந் தேதியாகும். இதேபோல என்.ஐ.டி. மணிப்பூரில் நர்ஸ், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூ‌னியர் என்ஜினீயர் போன்ற பணிகளுக்கு 47 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். நர்ஸ் டிப்ளமோ படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை http://www.nitmanipur.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 5-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். என்.ஐ.டி. குருசேத்ராவில் தொழில்நுட்ப அதிகாரி, சூப்பிரண்டன்ட், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 65 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், பிளஸ்-2 படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணி யிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://nitkkr.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 14-12-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 12 November 2018

தமிழக அரசு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலை வாய்ப்புகள் | தமிழக அரசு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. எனப்படுகிறது. தமிழக அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை இந்த அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக அதிகாரி (கிரேடு-4) பணிக்கு 65 பேரையும், கிரேடு-3 நிர்வாக அதிகாரி பணிக்கு 55 பேரையும் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.கிரேடு-4 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-2018-ந் தேதியில் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. வயது வரம்பு தளர்வு பெறும் பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு 17-2-2019-ந் தேதி நடைபெற உள்ளது.கிரேடு-3 தரத்திலான நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 1-7-2018-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கான எழுத்துத் தேர்வு 16-2-2019-ந் தேதி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

கூட்டுறவுத் துறை

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, கூட்டுறவுத் துறையில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிளஸ்-2 படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 21-11-2018-ந் தேதியாகும்.

நகர வடிவமைப்புத் துறை

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம், கிரேடு 3 தரத்திலான டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 53 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நகர வடிவமைப்பு திட்டத் துறையில் இந்த பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். டிப்ளமோ சிவில், ஆர்கிடெக்ட் அசிஸ்டன்ட், டவுன்-கண்ட்ரி பிளானிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in இணைய தளத்தில் பார்த்துவிட்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

கோர்ட்டில் வேலை

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், கணினி ஆபரேட்டர், ஜெராக்ஸ் எந்திர ஆபரேட்டர், இரவு காவலாளி, சுகாதார பணியாளர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 80 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடிப்படை கல்வி அறிவு பெற்றவர்கள் முதல், பட்டப்படிப்பு வரை பலதரப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. முன்னாள் படைவீரர்கள் 53 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேனி மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 30-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை https://districts.ecourts.gov.in/theni என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கெயில் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர், சீனியர் அதிகாரி பணி

இந்திய எரிவாயு ஆணைய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர், சீனியர் அதிகாரி போன்ற பணிகளுக்கு 55 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 31 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., எம்.எஸ்சி., படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://gailonline.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். மற்றொரு அறிவிப்பின்படி முதுநிலை மேலாளர், முதுநிலை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 38 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டப்படிப்பு, சி.ஏ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 21-11-2018-ந் தேதி கடைசிநாளாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்.ஐ.டி.யின் மணிப்பூர் கிளையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், நர்ஸ், ஜூனியர் என்ஜினீயர், அக்கவுண்டன்ட் போன்ற கற்பித்தல் சாராத அலுவலக பணி

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் மணிப்பூர் கிளையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், நர்ஸ், ஜூனியர் என்ஜினீயர், அக்கவுண்டன்ட் போன்ற கற்பித்தல் சாராத அலுவலக பணிகளுக்கு 47 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிளஸ்-2 படிப்புடன் தட்டச்சு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங், பி.டெக். படித்தவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை http://www.nitmanipur.ac.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் அனுப்பலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 5-12-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவி

ரிசர்வ் வங்கி வங்கிகளின் வங்கி எனப்படும் ரிசர்வ் வங்கியில் ஆராய்ச்சியாளர் பதவிக்கு 14 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ‘பி-கிரேடு’ தரத்திலான இந்த பணிக்கு பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

ஸ்டேட் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 47 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ., பட்டப்படிப்புடன் முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு, கட்டணம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 22-11-2018-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உருக்கு ஆலை நிறுவனத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணி

உருக்கு நிறுவனத்தில் வேலை உருக்கு ஆலை நிறுவனத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்களுக்கு 205 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உருக்கு ஆணை நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகிறது. தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள உருக்கு ஆலையில் ஜூனியர் மேனேஜர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பாய்லர் ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூனியர் மேனேஜர் சேப்டி பணிக்கு 7 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 170 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர் ஆபரேட்டர்) பணிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 4-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஜூனியர் மேனேஜர் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதுக்கு உட்பட்டவர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒடியா மொழியறிவு அவசியம். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பவர்பிளான்ட், புரொடக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் ஜூனியர் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கும், பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர்கள் ரூ.500-ம், டெக்னீசியன் மற்றும் பாய்லர் ஆபரேட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இந்த பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 4-12-2018-ந் தேதி கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.sailcareers.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

என்ஜினீயரிங் பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்ப்பு ராணுவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப் படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது 129-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவுத் திட்டத்தில் (டி.ஜி.சி.-129, ஜூலை 2019) பட்டதாரிகளை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த பயிற்சி நுழைவில் 40 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேருவதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1992 மற்றும் 1-7-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு டேராடூன் ராணுவ அகாடமியில் ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். இது 18 நிலை வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கொண்ட பணிவாய்ப்பாகும். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 28-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் கழக நிறு வனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. இதன் வடக்கு மண்டல மார்க்கெட்டிங் பிரிவில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 228 இடங்களும், டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 295 இடங்களும் உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 31-10-2018-ந் தேதியில் 18 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கும், 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழில்நுட்பம் சாராத பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். https://www.iocl.com/ என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய அனல்மின் கழக நிறுவனம் ( என்.டி.பி.சி) நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர் டிரெயினி, ஐ.டி.ஐ. டிரெயினி, லேப் அசிஸ்டன்ட் டிரெயினி, அசிஸ்டன்ட் டிரெயினி போன்ற பணி

மின்சார நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை தேசிய அனல்மின் கழக நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர் டிரெயினி, ஐ.டி.ஐ. டிரெயினி, லேப் அசிஸ்டன்ட் டிரெயினி, அசிஸ்டன்ட் டிரெயினி போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிப்ளமோ என்ஜினீயர் பணிக்கு 55 இடங்களும், ஐ.டி.ஐ. டிரெயினி பணிக்கு 42 இடங்களும், லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 6 இடங்களும், அசிஸ்டன்ட் டிரெயினி பணிக்கு 4 இடங்களும் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர் பணிக்கு 24-11-2018 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், இ.இ.இ., மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், பி.எஸ்சி. வேதியியல், இண்டஸ்ட்ரியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 24-11-2018-ந் தேதியாகும். இணையதள தேர்வு டிசம்பர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.ntpc.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப் படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேருவதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 41-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்41, ஜூலை 2019) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருபவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 41-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படு கிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 1-1-2000 மற்றும் 1-1-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 27-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை(ஐ.டி.பீ.பி.). படைப்பிரிவில் கான்ஸ்டபிள்(டெலிகாம்)பணி

துணை ராணுவத்தில் வேலை வாய்ப்பு துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று இந்திய திபெத்திய எல்லைக்காவல் படை(ஐ.டி.பீ.பி.). தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள்(டெலிகாம்)பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 218 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பெண்களுக்கும் பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கு185இடங்களும், பெண்களுக்கு33 இடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 110 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 33 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்திருந்தால் விருப்பத்தகுதியாக கொள்ளப்படும். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வு, தனிநபர் நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல், உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 27-11-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் வாரங்கல் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணி

உதவி பேராசிரியர் வேலை தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் வாரங்கல் கிளையில் தற்போது பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தவிர கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். உதவி பேராசிரியர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். பி.டெக்., பி.எஸ்சி., பி.ஏ., பி.காம், எம்.ஏ., எம்.காம், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக், பி.எச்.டி. போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்க கடைசிநாள் 5-12-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.nitw.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 5 November 2018

வேலை - கால அட்டவணை - 5 NOVEMBER 2018

வேலை - கால அட்டவணை - 8 OCTOBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை 400 பணியிடங்கள்

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர், ஜூனியர் கன்சல்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு 210 இடங்களும், ஜூனியர் கன்சல்டன்ட் பணிகளுக்கு 190 இடங்களும் உள்ளன. ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-9-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஜூனியர் கன்சல்டன்ட் பணி விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளி களுக்கும் வயது வரம்பில் தளர்வு பின்பற்றப்படுகிறது. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் அவசியம். தேவையான பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் ஜூனியர் கன்சல்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணல் அடிப்படையில் ஜூனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எழுத்துத் தேர்வின் மூலம் ஜூனியர் கன்சல்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புதுடெல்லி போன்ற இடங்களில் நேர்காணல் நடக்கிறது. நவம்பர் 6-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை இதற்கான நேர்காணல்- தேர்வு நடக்கிறது. எந்த நாளில் எந்த இடத்தில் நேர்காணல்- தேர்வு நடக்கிறது என்பதை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை எடுத்துச் சென்று நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.ecil.co.in. என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 771 பணியிடங்கள்

தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு கழக நிறுவனம் சுருக்கமாக இ.எஸ்.ஐ. கழகம் எனப்படுகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தின் மருத்துவமனை-கல்லூரிகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த மருத்துவ மனைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சமீபத்தில் புதுடெல்லி இ.எஸ்.ஐ. தலைமையகத்தில் இருந்து பல்வேறு கிளைகளிலும் இன்சூரன்ஸ் மெடிக்கல் ஆபீசர் (கிரேடு 2- அலோபதி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 771 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 338 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 122 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 59 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 252 இடங்களும் உள்ளன. மாநில வாரியாக 17 மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் 11 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 10-11-2018-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், துறை பணியாளர்கள் ரூ.250-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 13-11-2018-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம். இவை பற்றிய விவரங்களை www.esic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு

மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூ‌னியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், ஜூ‌னியர் டிரான்ஸ்லேட்டர், சீனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் மற்றும் இந்தி பிரத்யாபக் போன்ற பணிகளுக்கான தேர்வு-2018 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மூலம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது விரும்பு விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்ட வராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி மொழிசார்ந்த பாடங்களில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், பட்டப் படிப்புடன் மொழி பெயர்ப்பு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், மொழி பெயர்ப்பு பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 19-11-2018-ந் தேதியாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசிநாள் 26-11-2018-ந் தேதியாகும். இதற்கான கணினி அடிப்படையிலான (தாள்1) தேர்வு 12-1-2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 படித்தவர்களுக்கு கடற்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி

கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடற்படை, தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வுசெய்து அவர்களை குறிப்பிட்டகால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்து வருகிறது. தற்போது பிளஸ்-2 படித்தவர்களை அதிகாரி பணிக்கு நியமிக்கும் ‘பி.டெக் கேடட் என்ட்ரி ஸ்கீம்- ஜூலை 2019’ என்ற பயிற்சித் திட்டத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டு காலம் பி.டெக் பயிற்சி வழங்கப்படும். பி.டெக் படித்ததற்கான சான்றி தழும் கிடைக்கும். பின்னர் அவர்கள் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பெர் மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணிவாய்ப்பாகும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் இனி... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-2000 மற்றும் 1-7-2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே. கல்வித் தகுதி: மேல்நிலைக் கல்வியை 10+2 முறையில் முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இவர்கள் எஸ்.எஸ்.பி. அமைப்பு நடத்து ஜே.இ.இ. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடையளவு பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6,6/9 என்ற அளவுக்குள்ளும், கண்ணாடியுடன் 6/6,6/6 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் வியாதி இருக்கக்கூடாது. தேர்வு செய்யும் முறை: சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) அமைப்பால் தேர்வுகள் நடத்தப்படும். ஸ்டேஜ்1, ஸ்டேஜ்2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதில் நுண்ணறிவுத் திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர் காணல் மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்திலும் தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், இணைய தளம் வழியாக விண்ணப்பம் அனுப்பலாம். 22-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு 1599 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. மொத்தம் 1599 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது. இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத்துறை வங்கிகளின் பணியிடங்களில் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம். தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு 8-வது சிறப்பு அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் ஸ்கேல்-1 தரத்திலான 1599 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான பணியிடங்கள் விவரம்: ஐ.டி. ஆபீசர் - 219 பேர், அக்ரிகல்சரல் பீல்டு ஆபீசர்- 853 பேர், ராஷ்டிரபாஷா அதிகாரி - 69 பேர், சட்ட அதிகாரி - 75 பேர், எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி- 81 பேர், மார்க்கெட்டிங் அதிகாரி 302 பேர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-11-2018 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-11-1988 மற்றும் 1-11-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஐ.டி. அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்., அக்ரிகல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோஆபரேசன், கோ ஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அக்ரிகல்சர் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ராஷ்டிரபாஷா அதிகாரி பணிக்கும், இதேபோல சட்டப்படிப்பு, எச்.ஆர். மற்றும் அது சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணைய தளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு நிலைகளாக நடத்தப்படுகிறது. அதன் மூலம் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளில் பணிவாய்ப்பை பெறலாம். கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே அவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். முக்கியத் தேதிகள்: ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் : 6-11-2018 ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 26-11-2018 முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் உத்தேச நாட்கள் : 29-12-2018, 30-12-2018 முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம் : 27-1-2019 நேர்காணல் நடைபெறும் காலம் : பிப்ரவரி 2019 மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய ராணுவ அகாடமிகளில் 417 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

முப்படை அதிகாரி பணிகளுக்கு 417 இடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் இந்திய ராணுவ அகாடமிகளில் 417 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு (சி.டி.எஸ்.-2019(1) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 417 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப் படுகிறது. இதில் இந்திய மிலிட்டரி அகாடமியில் 100 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும், சென்னை ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் 240 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பணி விண்ணப்பதாரர்கள் 2-1-1996 மற்றும் 1-1-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் 1-1-2019 தேதியில் 20 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித்தகுதி : ராணுவ மிலிட்டரி அகாடமி மற்றும் சென்னை ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் சேரும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படையில் சேருபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். கட்டணம் : எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முக்கிய தேதிகள் : ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 26-11-2018-ந் தேதியாகும். இதற்கான தேர்வு 3-2-2019 அன்று நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE