TRB

TNTET

Monday, 24 December 2018

வேலை - கால அட்டவணை - 24 DECEMBER 2018

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 150 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான இதில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை படித்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிாிவினர் ரூ.220-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.110-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஜனவரி 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு முறைகள் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsnl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கெயில் நிறுவனத்தில் அதிகாரி பணி

கியாஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கியாஸ் நிறுவனமான கெயில் நிறுவனத்தில் அதிகாரி பணிகளுக்கு 176 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ‘கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் சுருக்கமாக கெயில் (GAIL) என்று அழைக்கப்படுகிறது. இந்திய கியாஸ் ஆணைய நிறுவனமான இதில் தற்போது சீனியர் என்ஜினீயர், ஆபீஸர், சீனியர் ஆபீஸர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 176 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எப் அண்ட் எஸ், சி அண்ட் பி, பி.ஐ.எஸ்., சிவில், டெலிகாம், மார்க்கெட்டிங், எச்.ஆர்., சட்டம், கார்ப்பரேட் கம்யூனிகேசன், மெடிக்கல் சர்வீசஸ், ஆபீசியல் லாங்வேஜ், லேபரேட்டரி போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிப்பிரிவு வாரியான காலியிடங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. 31-12-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், சட்டம், இந்தி, எம்.பி.ஏ., எச்.ஆர்., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதியை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://gailonline.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நேரு யுவகேந்திராவில் வேலை

நேரு யுவகேந்திராவில் வேலை நேரு யுவகேந்திரா சங்கேதன் அமைப்பு இளைஞர் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட மத்திய நிறுவனமாகும். இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இளைஞர்களின் திறன்களை ஊக்குவித்தல், மேம்படுத்துதல் தொடர்பான செயல்திட்டங்களை இந்த அமைப்பு செயல் படுத்துகிறது. தற்போது இந்த அமைப்பில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 228 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 101 இடங்களும், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 75 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 52 இடங்களும் உள்ளன. முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், தட்டச்சு, கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ஸ்ட் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணிக்கு விண்ணப்பிக்கலாம். மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணபப்பம் சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 31-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 15-ந் தேதி வரை விண்ணப்பத்தை பிரிண்ட் செய்ய முடியும். இது பற்றிய விரிவான விவரங்களை http://nyks.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து விட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயர்களுக்கு வேலை

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (சி.இ.எல்.) மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தற்போது இந்த நிறுவனத்தில் டெபுடி என்ஜினீயர் பணிக்கு 57 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘கேட்’ தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-12-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.இ., பி.டெக் படித்து, கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணுடன், இதற்கான இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 29-ந் தேதி வரை இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.celindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய ரிசர்வ் போலீசில் 359 பணி

விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் பணிக்கு 359 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய ரிசர்வ் போலீஸ் படை சுருக்கமாக சி.ஆர்.பி.எப். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் ஹெட் கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி), கான்ஸ்டபிள்(ஜெனரல் டியூட்டி) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 359 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களாகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 13-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைபவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பணிகளுக்கும், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆக்கி, கால்பந்து, கபடி, வில்வித்தை, தடகளம், பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தண்ணீர் விளையாட்டுகள், கைப்பந்து, டேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், கூடைப்பந்து, ஹேண்ட்பால், கராத்தே, பாடி பில்டிங் போன்ற விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும்முறை விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். வயதுக்கேற்ற உயரம், எடையளவு சரிபார்க்கப்படும். பார்வைத்திறன் மற்றும் உடல் திறனும், விளையாட்டுத் திறனும் சோதிக்கப்படும். மருத்துவ பரிசோதனைக்குப் பின் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பம் DIG, Group Centre, CRPF, Jharoda Kalan, New Delhi-110072” என்ற முகவரிக்கு 13-1-2019-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். அஞ்சல் முகப்பில் APPLICATION FOR THE RECRUITMENT OF SPORTSPERSON IN CRPF AGAINST SPORTS QUOTA-2018” என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.crpf.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விளையாட்டு வீரர்களுக்கு பணி

தெற்கு ரெயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு அடிப்படையில் 21 பேர் சேர்க்கப்படுகிறார்கள். 10,12-ம் வகுப்பு படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள், விளையாட்டுகளில் குறிப்பிட்ட சாதனை படைத்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி 14-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங் களையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஸ்டேட் வங்கியில் டெபுடி மேனேஜர் (இன்டர்னல் ஆடிட்) பணி

ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் டெபுடி மேனேஜர் (இன்டர்னல் ஆடிட்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சிறப்பு அதிகாரி தரத்திலான இந்த பணிகளுக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-9-2018-ந் தேதியில் 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சி.ஏ. படித்து குறிப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 28-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற ஜனவரி 27-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பரோடா மற்றும் ஸ்டேட் வங்கிகளில் 952 பணி

பரோடா வங்கி மற்றும் ஸ்டேட் வங்கிகளில் 952 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங் களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 913 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவை எம்.எம்.ஜி-ஸ்கேல் 2,3 மற்றும் ஜே.எம்.ஜி.-ஸ்கேல்-1 தரத்திலான பணிகள் ஆகும். பணிப் பிரிவு வாரியான காலி யிட விவரம் வருமாறு: சட்டம் - 60 பேர், சேல்ஸ் - 850 பேர், ஆபரேசன்ஸ் - 3 பேர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-11-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுவதால் அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி இளநிலை பட்டப்படிப்பு, நிர்வாகம், சேல்ஸ் சார்ந்த முதுநிலை படிப்பு அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர் காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 26-ந் தேதியாகும். 10-1-2019-ந் தேதி வரை அப்ளிகேசனை பிரிண்ட் எடுக்க முடியும். விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/bobsplnov18/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். கூடுதல் விவரங்களை www.bankofbaroda.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தெற்கு ரெயில்வேயில் 4,450 பயிற்சி பணி

தெற்கு ரெயில்வேயில் 4 ஆயிரத்து 450 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ., மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- தெற்கு ரெயில்வே மண்டலம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை, திருச்சி, கோவை டிவிஷன்களில் ஏராளமான பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சென்னை டிவிஷனில் 924 இடங்களும், கோவை டிவிஷனில் 2 ஆயிரத்து 652 இடங்களும், திருச்சி டிவிஷனில் 853 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர தெற்கு ரெயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப் படையில் 21 பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 ஆயிரத்து 450 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், பெயிண்டர், பிளம்பர், ரேடியாலஜி, பேதாஜி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனுக்கு உள்பட்ட பல்வேறு ரெயில் முனையங்கள், டெப்போக்கள், ஷெட்களிலும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த டெப்போ /ஷெட் வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பயிற்சிப் பணியில் சேர தேவையான தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ்-2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கட்டணம் விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும்முறை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர் காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை சுயசான்றொப்பம் செய்து தேவையான இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதி யில் கட்டணம் செலுத்தி, பூர்த்தியான விண்ணப்ப படிவத்தை கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 13-1-2019-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 18 December 2018

1,338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 228 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 1,338 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வை கடந்த மாதம் 11-ந் தேதி நடத்தியது. மொத்தம் 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4 லட்சத்து 62 ஆயிரத்து 697 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதன்படி, முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதங்களிலும், முதன்மை தேர்வு முடிவு 2 மாதங்களிலும், எழுத்து தேர்வு முடிவு 3 மாதங்களிலும் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில், குரூப்-2 முதல்நிலை தேர்வு நடந்து முடிந்த 36 நாட்களில் திருத்தும் பணியை நிறைவு செய்து, தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் 23-ந் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட இருக்கிறது. முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 194 விண்ணப்பதாரர்கள், தங்களுடைய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கான கட்டணத்தையும் வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 10-ந் தேதி வரை www.tnps-c-ex-ams.net என்ற இணையதளம் வழியே செலுத்த வேண்டும். சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத, விண்ணப்ப கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற இருப்பதால், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த நூலகர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேறு ஒருநாளில் நடத்தப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம், சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மத்திய-மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. அந்தவகையில், தற்போது தேர்வு முடிவு வெளியாகி இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கு என்றும் இலவச பயிற்சியை அளித்தது. இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதியவர்களில் 228 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இதில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம், 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை-35 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம். இந்த தகவலை மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 17 December 2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018 (மதுரை,விருதுநகர்,சிவகங்கை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018

TN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018 (கோவை, திருப்பூர், சேலம், குன்னூர், ஈரோடு மற்றம் நாமக்கல்)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலை - கால அட்டவணை - 17 DECEMBER 2018

வேலை - கால அட்டவணை - 17 DECEMBER 2018
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணி

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி.ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 566 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது டெக்னீசியன், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 422 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக அசிஸ்டன்ட் டெக்னீசியன் (புரொடக்சன் பணிக்கு 108 இடங்களும், ஜூ‌னியர் அசிஸ்டன்ட் (பி அண்ட் ஏ) பணிக்கு 31 இடங்களும், ஜூனியர் ரஸ்அபவுட் பணிக்கு 42 இடங்களும் உள்ளன. சிமென்டிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளிலும் அசிஸ்டன்ட் டெக்னீசியன் பணிக்கு கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், பெட்ரோலியம், கெமிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், வேதியியல் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு முடித்து, பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ரூ.370 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-1-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஜனவரி இறுதி வாரத்தில் இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

115 இடங்கள்

மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் ஜூ‌னியர் அசிஸ்டன்ட், மெடிக்கல் அசிஸ்டன்ட், சூப்பிரவைசர் போன்ற பணிகளுக்கு 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங், பார்மசி, ஆப்டோமெட்ரி டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன.

பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்கள், பி.எஸ்சி. வேதியியல், ஜியாலஜி படித்தவர்களுக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசிநாள் டிசம்பர் 27-ந் தேதியாகும். இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவை பற்றிய விரிவான விவரங்களை www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணி

உயிரியல் பூங்காவில் ஊழியர்கள் வேலை தேசிய உயிரியல் பூங்காக்களில் மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய வன உயிரியல் பூங்காக்கள் செயல்படுகின்றன. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில், ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குரூப்-சி’ பிரிவின் கீழ் வரும் இந்த பணிகளுக்கு மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. டிக்கெட் கலெக்டர், பூங்கா காவலர், பூங்கா வழிநடத்துனர், அட்டன்டன்ட், கேங்மேன், பியூன் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் The Ministry of Environment, Forest, and Climate Change, National Zoological Park, New Delhi என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 6-1-2019-ந் தேதியாகும். இதுபற்றிய விவரங்களை www.envfor.nic.in என்று இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி பணி

பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் (BECIL) எனப்படும் ஒலிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் (பேஷன்ட் கேர்), கோஆர்டினேட்டர் (பேஷன்ட் கேர்) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், கோஆர்டினேட்டர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். லைப் சயின்ஸ் பட்டப்படிப்புடன், ஹாஸ்பிட்டல்/ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லைப்சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் கோஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விமானப்படையில் ஏர்மேன் வேலை டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம்

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப் படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்’ (குரூப்-எக்ஸ்) டெக்னிக்கல், ‘குரூப் ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... கல்வித் தகுதி: குரூப் எக்ஸ், விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 (10+2 முறையில்)/ இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பிரிவில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சில் சேர விரும்பு பவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 19-1-1999 மற்றும் 1-1-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். உடற்தகுதி: குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடையளவு குறைந்தபட்சம் 55 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை தேவையான அளவுக்குள் இருக்கிறதா? என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு கால பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு செய்ய முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 2-1-2019 முதல் 21-1-2019-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற மார்ச் 14 முதல் 17-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்படையில் 400 பேர் சேர்ப்பு 10-ம் வகுப்பு படிப்பு தகுதி

கடற்படையில்10-ம் வகுப்புபடித்தவர் களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி களின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

தற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். மற்றும் ஏ.ஏ. ஆகஸ்டு 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் மாலுமி பணியில் ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிளஸ்-2 படித்த 3 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான அறிவிப்பை பார்த்தோம். தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்கள் ‘செய்லர் பார் மெட்ரிக் ரெக்ரூட் (எம்.ஆர். அக்டோபர் 2019)’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகளை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-1998 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தேர்வு முறைகள் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு இந்த கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் : 14-12-2018-ந் தேதி

விண்ணப்பிக்க கடைசிநாள் : 30-12-2018

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindian navy.gov.in என்ற முகவரியைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE