TRB

TNTET

Monday, 24 December 2018

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு 150 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் சுருக்கமாக பி.எஸ்.என்.எல். என அழைக்கப்படுகிறது. பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான இதில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 76 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 40 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 11 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-8-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. முதுநிலை படித்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல், குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிாிவினர் ரூ.220-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.110-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஜனவரி 26-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு முறைகள் மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsnl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

No comments: