TRB

TNTET

Thursday, 21 November 2019

17 ஆண்டாக எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா பாடப்பிரிவை  அங்கீகாரம் பெறாமல் நடத்தும் அண்ணா பல்கலை டிஆர்பி தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) பாடப்பிரிவு பட்டியலில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி - எலக்ட்ரானிக் மீடியா (எம்எஸ்சி-இஎம்) இடம்பெற வில்லை. இதனால் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) சார்பில், 1980-களில் நாட்டின் பல பல்கலைக்கழகங் களில் எலக்ட்ரானிக் மல்டிமீடியா ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறைந்த தால், அதன் சார்பில் 2002-ம் ஆண்டு எம்எஸ்சி-இஎம் பாடப் பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பத்திரிகை உலகில் தொலைக்காட்சி ஊடகங் களுக்கு கிடைத்த பெரும் வர வேற்பே இதற்குக் காரணமானது. இதில், 12-ம் வகுப்பு முடித்தவர் களுக்கென 5 ஆண்டு ஒருங் கிணைந்த எம்எஸ்சி படிப்பும், ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்காக 2 ஆண்டு எம்எஸ்சி படிப்பும் இருந்தது.

இவ்விரு படிப்புகளுக்கும் கட்டணம் மிக அதிகமாக வசூ லிக்கப்பட்டு, அக்கல்விகளுக்கான நிதி சமாளிக்கப்பட்டது. இதில் இணைந்து பட்டம் பெற்ற மாணவர்கள் பலரும் இன்று நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து அதே பாடப்பிரிவில் முனைவர் பட்டத்துக்கான கல்வியும் தொடங்கப்பட்டது.

இதைப் பயின்ற பலர், பல்வேறு மத்திய, மாநில அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். எனினும், எம்எஸ்சி-இஎம் பாடப்பிரிவுக்கு என யூஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தமிழக அரசு என எதனிடமும் அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை அங்கீகாரம் பெற வில்லை.

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட டிஆர்பி தேர்வுக் கான அறிவிப்பில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா பாடப்பிரிவு இடம்பெற வில்லை. இதில், 2 ஆண்டு எம்எஸ்சி-இஎம் கல்வியை மட்டும் தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. இதனால், ஒருங்கிணைந்த எம்எஸ்சி-இஎம்-ன் இந்நாள், முன்னாள் மாணவர்கள் மற்றும் அதன் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மல்டி மீடியா ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஏபிஜே ஸ்த்யா பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியருமான முனைவர். ஆர்.தர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “இதழியல் போல் அல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்ற தொழில்நுட்பமும் அவசியமாகிறது. எனவேதான் இதுதொடர்பான பாடப்பிரிவு பொறியியல் பல்கலைக்கழகத் தில் தொடங்கப்பட்டது.

இன்று செய்தியைப் பொறுத்த வரை பொதுமக்கள் இடையே தொலைக்காட்சி ஊடகங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. எனவே, தமிழக அரசு இப் பாடப்பிரிவை டிஆர்பி தேர்வில் சேர்ப்பதுடன் அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் அவசியமாகும்” என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி-இஎம் பாடப்பிரிவில் தற்போது 200 மாணவர்களும், சுமார் 20 பேராசிரியர்களும் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கினால் வருமானவரி விலக்கு  பள்ளி வளர்ச்சிக்கு உதவ தமிழக அரசு அழைப்பு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக் காக நடப்பு ஆண்டில் ரூ.28,757 கோடியை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கினாலும் அரசுப் பள்ளிகள் தரத்தை மேம்படுத்த அனைவரும் உதவ முன்வர வேண்டும்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பவர்களுக்காக தமிழக அரசால் பிரத்யேக இணையதளம் (https://contribute.tnschools.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் முன்வந்து அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அழைப்பு விடுக்கிறோம்.

அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நல்ல உள்ளங்கள், மேற்கண்ட இணையதளத்தின் மூலம் எந்தப் பள்ளிக்கு நிதியுதவி வழங்க விருப்பமோ வழங்கலாம். அவர்கள் வழங்கும் நிதியின் மூலம் நடைபெறும் பணிகளையும் அந்த இணையதளம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எல்லாப் பணிகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். நிதியுதவி அளிப்பவர்களுக்கு உடனடி பற்றுச் சீட்டு வழங்கப்படும். அதைக் கொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அந் தொகைக்கு உரிய வருமானவரி விலக்கையும் பெறலாம். அரசின் பணியோடு மக்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறப்படையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை ஜனவரி மாதம் வழங்க பள்ளிக்கல்வித் துறை திட்டம்

மாணவர்களைப் போல அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் க்யூஆர் கோடு வசதி கொண்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள், 8,357 அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 69 லட்சம் மாணவர்கள் படித்து வருகின் றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் க்யூஆர் கோடு வசதி கொண்ட ஸ்மார்ட் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு க்யூஆர் கோடு உடன் கூடிய ஸ்மார்ட் அடை யாள அட்டை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் செங்கோட்டை யன் அறிவித்திருந்தார். இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட முழு விவரங்கள் மற்றும் புகைப்படத்தை நவம்பர் 25-ம் தேதிக்குள் கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் பணிகளை செய்ய தவறும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்ட பணிகளை முடித்து ஆசிரி யர்களுக்கு ஜனவரி மாதத்தில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன்பதவியேற்பு

பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக பள்ளிக்கல்வியில் துறை இயக்குநர்களை கண் காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத் துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன்
ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன்
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நேற்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு கல்வித்துறை இயக்குநர் கள், அதிகாரிகள், ஆசிரிய சங்க நிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித் தனர். இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வியின் புதிய அலுவலக கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டிடத்தில்தான் ஆணையருக்கு பிரத்யேக அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் அருகே ஆணையருக்கு தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வியின்கீழ் உள்ள 10 இயக்குநரகங்களையும் மேற் பார்வையிடுதல், திட்டங்களுக்கு நிதி பெற்று தருதல் உட்பட பணிகளை ஆணையர் மேற்கொள் வார் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி வரம்புகள் வெளியீடு

புதிய ஆணையருக்கான பணி வரம்புகள் குறித்த அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலா ளர் பிரதீப் யாதவ் நேற்று வெளி யிட்டார். அதில், ‘‘பள்ளிகளின் கற் பித்தல் செயல்பாட்டை மேம்படுத் தவும், பள்ளிக்கல்வியில் நடை முறையில் உள்ள திட்டங்கள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் முறையாக செயல் படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்கவும் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆணையரான சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவார்.

பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத் துறை ஆகிய 4 இயக்குநரகங்களை ஒருங்கிணைத்து சீரான நிர்வாகத்தை ஆணையர் வழங்குவார். பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதுடன், துறை சார்ந்த வழக்குகள் இனி ஆணையர் மூலமாகவே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘மகிழ்ச்சியான பள்ளி’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்

சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘மகிழ்ச்சியான பள்ளி’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நிறைவுபெற்ற திட்டப் பணிகளை பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். அருகில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘மகிழ்ச்சியான பள்ளி’ திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நிறைவுபெற்ற திட்டப் பணிகளை பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறார். அருகில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி உள்ளிட்டோர் உள்ளனர்.
அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தன் னார்வ அமைப்புகள், நிறுவனங் களின் சார்பில் ரூ.30 லட்சத்தில் கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய ரோட்டரி சங்கம் சார்பில் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டிடங்களை புதுப்பித்தல், மழை நீர்த் தொட்டிகள் அமைத்தல், மாணவிகளுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடக்கவிழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. திட்டங்களை தொடக்கி வைத்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன் பேசும்போது, ‘‘பொருள தாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப் பள்ளி களை மேம்படுத்த தன்னார்வ அமைப்புகள் உறுதுணையாக இருப்பது பாராட்டத்தக்கது. இதே போல், இதர அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தவும் தன்னார்வலர்கள் ஆதரவளிக்க வேண்டும்’’என்றார்.

ரோட்டரி சங்க நிர்வாகி சந்திரமோகன் கூறும்போது,‘‘இந்த பள்ளியில் நிறைவு பெற்ற பணிகள் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெறுவர். தொடர்ந்து தொழில் மேம்பாட்டு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி கள் மாணவிகளுக்கு வழங்கப் படும். அடுத்தகட்டமாக 26 அரசுப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்துள் ளோம்’’ என்றார். விழாவில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக தொல்லியல் துறையில் உள்ள  100 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்  அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு 

தமிழக தொல்லியல் துறையில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார்.

சென்னையில் நேற்று கீழடி புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கண்காட் சியை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

கீழடி புகைப்படக் கண்காட்சி மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இக்கண் காட்சியை நடத்த விரும்பும் கல்லூரி களிலும் இது நடத்தப்படும். கீழடியில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.12 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கியுள்ளார். அடுத்த ஓராண்டில் இப்பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அருங்காட்சியகத்துக்கான இடமும், வடிவமைப்பும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. திறந்த வெளி அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் தமிழர் பண் பாட்டுப் பெட்டகமாகத் திகழும்.

கீழடி கண்டுபிடிப்புக்குப் பிறகு தொல்லியல் துறை தொடர்பாக மாணவர்களிடம் மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு வரும் ஜனவரி 15-ம் தேதி தொடங்க வுள்ளது. கீழடி மற்றும் அதைச் சேர்ந்த மணவூர், கொந்தவை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இடங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நெல்லை மாவட்டம் சிவகளை ஆகிய 4 இடங்களி லும் ஆழமான அகழாய்வுப் பணி களை மேற்கொள்ள ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறையில் காலியாக வுள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்படும்.

பிரதமர் மோடி, சீன அதிபரின் மாமல்லபுரம் சந்திப்புக்கு பிறகு, அந்த இடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாமல்லபுரத்தில் சிற்பக் கலையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. மாமல்லபுரத்தை மையமாகக் கொண்டு சிற்பக் கலையை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ.100 கோடி கேட்டுள்ளோம்.

பள்ளி மாணவர்களை ஆண்டுக்கு ஒருமுறை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அறிவியல் ஆய்வகம் போல, அருங்காட்சியகங்கள் வரலாற்று ஆய்வகமாக உருவாக்கப்படு கின்றன. இயற்கை வரலாறு, சமூக வரலாறு, அரசியல் வரலாறு, பொருளாதார வரலாறு உள்ளிட்ட 6 விதமான வரலாறுகளை அங்கு ஆவணப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை கடந்த செப்டம்பரில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 3,833 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நவ.8, 9-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 12 பாடங்களுக்கு தற்காலிக மாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தேர்வு வாரியத் தின் http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதர பாடங்களில் தேர்வானவர்கள் விவரம் ஓரிரு நாட்களில் வெளியாகும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 20 November 2019

தேர்வு பணிகளில் கணினி ஆசிரியர்கள் 

பொதுத்தேர்வு பணிகளில் கணினி ஆசிரியர்களை ஈடுபடுத்த தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பணிச்சுமையை தவிர்க்கவும், வேலையை விரைவாக முடிக்க வும் அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் களை தேர்வுப் பணிகளில் ஈடு படுத்த தேர்வுத் துறை முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத் தில் இருந்து சேகரிக்க வேண்டும். அதன்பின் தேர்வுத் துறையின் வலைதளத்தில் மாணவர் விவரங் களை பிழையின்றி பதிவேற்றம் செய்ய கணினி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் சுமார் 80 கணினி ஆசிரி யர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக் கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திற னாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு, தமிழகம் முழுவதும் 514 மையங்களில் கடந்த 3-ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வுகளை சுமார் 1.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்நிலையில், திறனாய்வு தேர்வு சம்பந்தமான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதன் விவரங்களை மாணவர்கள், பெற்றோர் நாளைக்குள் (நவ.21) ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி தமிழக அரசு திட்டம்

தமிழக பள்ளிக் கல்வியின் கீழ் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளில், 2 லட்சத்து 30 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கல்வித்துறையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் உபரியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கலந்தாய்வு மூலம் கணிசமான உபரி ஆசிரியர்கள் கடந்த ஜூலை மாதம் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

சில ஆசிரியர்களுக்கு மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்று பணி வழங்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 12 ஆயிரத்து 109 பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து 1996-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் உபரியானவர்களின் விவரப்பட்டியலை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடவாரியாக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு மாற்றுப்பணி இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 November 2019

30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும் - கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும் - கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

LKG, UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை!

LKG, UKG வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் இல்லை என்ற கல்வித் துறை அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி. எல்.கே.ஜி, யு.கே.ஜிக்கு மாற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகாளுக்கு இடமாறுதல் இல்லை என்று கல்வித்துறை அறிவித்துள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும்?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம் கெடு உள்ளாட்சி தேர்தல் நடத்தாத தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள் பின்வருமாறு.. உச்சநீதிமன்றம் : உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறதா ? உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த விரும்பவில்லையெனில், உச்சநீதிமன்றமே முன்னின்று நடத்த தயாராக இருக்கிறது. தேர்தல் ஆணையம் :தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் : உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டு வருகின்றன. ஆகையால் டிசம்பர் 2வது வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் வழக்கறிஞர் ஜெய் சுகின் : இன்னும் 9 மாவட்டங்களில் உரிய மறுவரையறை செய்யப்படாமல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கின் பின்னணி தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து,வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிட்டு அதன் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்து இருந்தது. ஆனால், அதை தற்போது மீறும் வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். அதனால் உறுதியளித்தபடி தேர்தலை நடத்தாத தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் தான் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்.  இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்....

ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.

22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு தகுதியானவர்களின் விவரம் கேட்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பெரும்பாலானவர்கள் உரிமை விடல் செய்துவிட்டதால் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போதுமாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பட்டியலில் இருப்பவர்கள் பதவி உயர்வுபெற தகுதியானவர்களா என்பதையும், ஒழுங்கு நடவ டிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே பதவி உயர்வு கலந்தாய்வு முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணினி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு

பொது தேர்வு பணிகளை கவனிக்க, 32 மாவட்டங்களிலும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப் படுகிறது.

தேர்வு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வுக்கான மாணவர் விபரங்களை திரட்டுதல், தேர்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், 'பார்கோடு' உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், அரசு தேர்வு துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தேர்வு துறை பணியாளர்கள் தரப்பில், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது.எனவே, பள்ளி கல்வி துறையினருக்கு, தேர்வு பணிகள் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளன. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மாணவர்களின் விபரங்களைசேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என, கணினி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதில், 64 கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இன்னும் பல்வேறு பணிகளுக்கு, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணி வழங்க, தேர்வு துறை முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர் விபரத்தில் தவறு இருந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: தேர்வு துறை எச்சரிக்கை

பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் தவறு இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தேர்வு துறை எச்சரித்துள்ளது. பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு பொது தேர்வில், அரசு தேர்வு துறை வழங்கும் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, மாணவர்களின் மற்ற தேர்வுகளுக்கும் சான்றிதழ் வழங்கப் படுகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு துறை, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு துறை பணிகளுக்கும், பத்தாம் வகுப்பு சான்றிதழின் விபரங்களே கணக்கில் எடுக்கப்படும். எனவே, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கு, தவறின்றி மாணவர் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்படும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, அரசு தேர்வு துறை சேகரித்து வருகிறது. பள்ளிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விபரங்களை, சரிபார்க்க அவகாசமும் அளிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியாக, அரசு தேர்வு துறை, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், மாணவர்களின், 'இனிஷியல்' எனப்படும், பெற்றோர் பெயரின் முதல் எழுத்து, ரத்தப்பிரிவு என, அனைத்து விபரங்களையும், தவறின்றி பதிவு செய்ய வேண்டும். பத்தாம்வகுப்பு சான்றிதழ்களின் அடிப்படையில், விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அளிக்கும் விபரங்களிலும், தவறுகள் இருந்தால், தலைமை ஆசிரியர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • TNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித்  துறை  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் .
TNRD Recruitment District Wise Vacancies Details:
DistrictRoleVacanciesLast DateNotification Link
Erode DistrictOffice Assistant/ Driver/ Watchman/Record Clerk1702.12.2019Details
Tiruchirappalli DistrictOffice Assistant/ Driver430.11.2019Details
Nagapattinam DistrictPanchayat Secretary/ Driver2225.11.2019 & 27.11.2019Details
Thoothukudi DistrictOffice Assistant/ Driver/ Panchayat Secretary1025.11.2019 & 26.11.2019Details
Madurai DistrictPanchayat Secretary/ Office Assistant/ Watchman1925.11.2019 & 26.11.2019Details
Ariyalur DistrictPanchayat Secretary1125.11.2019Details
Salem DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman3425.11.2019Details
Ramanathapuram DistrictPanchayat Secretary/ Record Clerk/ Driver/ Watchman1825.11.2019Details
Dharmapuri DistrictPanchayat Secretary925.11.2019Details
Thiruvarur DistrictPanchayat Secretary1025.11.2019Details
Theni DistrictPanchayat Secretary825.11.2019Details
Krishnagiri DistrictPanchayat Secretary1925.11.2019Details
Thanjavur DistrictOffice Assistant/ Driver/ Watchman4525.11.2019Details
Sivagangai DistrictPanchayat Secretary1125.11.2019Details
Kancheepuram DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman4925.11.2019Details
Vellore DistrictPanchayat Secretary/ Office Assistant/
Watchman
4925.11.2019Details
Thiruvannamalai DistrictPanchayat Secretary/ Office Assistant/
Record Clerk/Driver
4125.11.2019Details
Pudukkottai DistrictOffice Assistant225.11.2019Details
Karur DistrictPanchayat Secretary/ Office Assistant/ Driver/ Watchman2123.11.2019Details
Cuddalore DistrictPanchayat Secretary/ Driver2522.11.2019Details
Tiruvallur DistrictPanchayat Secretary422.11.2019Details
Virudhunagar DistrictPanchayat Secretary/ Record Clerk/ Driver/ Office Assistant2322.11.2019Details
Namakkal DistrictPanchayat Secretary/ Driver1622.11.2019Details
Viluppuram DistrictPanchayat Secretary2721.11.2019Details
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 November 2019

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி., செக்யூரிட்டி ஆபீசர், ரிஸ்க் மேனேஜர், பினான்சியல் அனலிஸ்ட், கிரெடிட் ஆபீசர், எக்னாமிஸ்ட், சீப் டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்கிடெக்ட், சி.ஏ. உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுகிறது. அதிகபட்சம் 45 வயதுடையவர் களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைச நாளாகும். ரூ.550 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 21-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விரிவான விவரங்களை https://www.centralbank.net.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப்பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு 380 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஓ.சி.எல். பைப்லைன் டிவிஷன்களில் பயிற்சிப் பணியிடங்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 17 மாநிலங்களில் 380 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் 19 பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு 18 முதல் 24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கும், பட்டதாரிகள் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கும், 12 படித்தவர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 22-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 8-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விரிவான விவரங்களை https://plis.indianoilpiplines.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி

தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் என்.ஐ.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற மத்திய கல்வி நிறு வனங்களான இவை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது திருச்சி யில் உள்ள என்.ஐ.டி. கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்கிடெக்சர் மற்றும் அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் உள்ளன. மொத்தம் 147 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணியிடங்கள் உள்ள பாடத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இதுபற்றிய விரிவான விவரங்களை www.nitt.edu மற்றும் https://recruitment.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்ப பதிவு டிசம்பர் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 16-ந்தேதிக்குள் நகல் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எரிசக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 235 காலியிடங்கள்

மத்திய எரிசக்தி நிறுவனத்தில் அதிகாரி மற்றும் தொழில்நுட்பனர் உள்ளிட்ட பணியிடங் களுக்கு 235 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

எரிசக்தி தேவைகளுக்கான மதிப்பிடல் மற்றும் ஆராய்ச்சி திட்டம் வகுத்தல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் மத்திய அரசு நிறுவனம் இ.இ.எஸ்.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெபுடி மேனேஜர், என்ஜினீயர், அசிஸ்டன்ட் மேனேஜர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 235 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் என்ஜினீயர் (டெக்னிக்கல்) பணிக்கு 105 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கணிசமான பணி யிடங்கள் உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் முதுநிலை டிப்ளமோ படிப்பு, முதுநிலை இதழியல், ஆபீஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். நவம்பர் 30-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://eeslindia.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒளிபரப்பு நிறுவனத்தில் 3,895 பணிகள்

இந்திய ஒளிபரப்பு பொறியியல் நிபுணத்துவ நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் திறன் சார்ந்த (ஸ்கில்டு மேன்பவர்) பணிக்கு 1402 இடங்களும், திறன் சாராத (அன்ஸ்கில்டு) பணிக்கு 2 ஆயிரத்து 493 பணியிடங்களும் உள்ளன. மொத்தம் 3 ஆயிரத்து 895 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எலக்ட்ரிக்கல், வயர்மேன் சார்ந்த ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் திறன்சார் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணி அனுபவம் அவசியமாகும். 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திறன் சாராத பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 55 வயதுடையவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எலக்ட்ரிக்கல் கருவிகளுடன் கூடிய பணியிடத்தில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். தேவையான சான்றுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க இன்று (18-ந்தேதி) கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.beciljobs.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாகப்பட்டினத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

நாகப்பட்டினத்தில் ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆள் சேர்ப்பு முகாம்

சென்னை ராணுவ ஆள்சேர்க்கும் தலைமைச் செயலகம், திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் வழியாக, ராணுவ வீரர் களுக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜனவரி மாதத்தில் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்தவர்களில் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மத போதகர்) பணிக்கு விண்ணப்பித்தவர்களும், ஹவில்தார் சர்வேயர் ஆட்டோமேட்டட் கார்டோகிராபர் பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களும் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

உடல்தகுதி தேர்வு

சோல்ஜர் டெக்னிக்கல், (Soldier Technical), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty), சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman) போன்ற பிரிவுகளில் தகுதியான இளைஞர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

நேரடி நேர்காணல் மூலம் இந்த பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்க இருக்கிறது. அப்போது உடல் அளவுத் தேர்வு, உடல் உறுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய தேர்வுகள் பின்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல்

விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும் அனுமதிச்சீட்டுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். அப்போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும். அனுமதிச் சீட்டில் நேர்காணல் நாள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நேர்காணல் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

8,10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் 17½ வயது முதல் 23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பிரிவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 1-10-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நாளை (19-ந் தேதி) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ராணுவ தளவாட தொழிற்சாலையில் 4,805 பயிற்சிப் பணிகள்

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 4 ஆயிரத்து 805 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்கள், ஆயுதங்கள், டாங்கிகள், உடைகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பல்வேறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் ஆவடியில் ராணுவ டாங்கி மற்றும் உடை தொழிற்சாலை செயல்படுகிறது. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவும், பயிற்சிப்பணியிடங்களை நிரப்பவும் தனியே தேர்வு வாரியம் உள்ளது.

நாக்பூரில் செயல்படும் இந்த தளவாட தொழிற்சாலை ஆட்தேர்வு மையத்தில் இருந்து தற்போது பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான்-ஐ.டி.ஐ. தரத்திலும், ஐ.டி.ஐ. படிப்பு தரத்திலும் பயிற்சிப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4 ஆயிரத்து 805 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 3 ஆயிரத்து 210 இடங்களும், ஐ.டி.ஐ. சாராததற்கு 1595 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு

இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு சலுகை அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் கடைசி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக் கிடப்படுகிறது.

கல்வி தகுதி

10-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ. சாராத தொழிற்பிரிவில் சேரலாம். குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் ஐ.டி.ஐ. தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பப் பதிவு டிசம்பர் மாதத்தில் தொடங்கும். இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரங்களை அறிய விரும்புபவர்கள் www/apprenticeship.gov.in மற்றும் www.ofb.gov.in என்ற இணைய தளங்களை பின்தொடரலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாரத் உயர்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை மாணவர்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித்தொகையும் அறிவிப்பு

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகமான பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர, பொறியியல் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பப் படிவம், சுலபமாக பெறுவதற்கு வசதியாக அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சேலையூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தாம்பரம் அஞ்சலக பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் எஸ்.வி.சுந்தரி தொடங்கிவைத்தார்.

பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த், துணை வேந்தர் வி.கனகசபை, இணை துணை வேந்தர் ஆர்.எம்.சுரேஷ், கூடுதல் பதிவாளர் ஆர்.ஹரிபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விண்ணப்ப படிவத்திற்கு தபால் நிலையங்களில் ரூ.1,200 ரொக்கமாக பணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஆராய்ந்து தகுதியின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறவுள்ள பி.இ.இ.இ.-2020 நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., “பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த கல்வித்தொகை வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற பிளஸ்-2 அரசுத் தேர்விலும், பி.இ.இ.இ.-2020 நுழைவுத்தேர்விலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கு தேவைதானா இந்த நேர்முகத் தேர்வு...?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளுக்கு தேவைதானா இந்த நேர்முகத் தேர்வு...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை, புகார்கள், குறைகளுக்கு இடமின்றி, மிக நேர்த்தியாக நடத்தி தொழிற்முறை நிபுணத்துவத்தை (professionalism) தொடர்ந்து நிரூபித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி.

தற்போது, குரூப் 2 பணிக்கான ‘நேர்காணல்' தேர்வு நடைபெற்று வருகிறது. 1000 பணியிடங்கள் - சுமார் 2000 பேருக்கு அழைப்பு.

ஆமாம்..., ‘நேர்காணல்' முறை தேவைதானா...?

முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி போன்றோர், நேர்காணல் முறைக்கு எதிராகப் பலமுறை குரல் கொடுத்து இருக்கிறார்கள். சுமார் அரை மணி நேரப் பொழுதில், ஒருவரின் தகுதி, திறனை, எடை போட்டு விட முடியுமா..?

2017 ஆகஸ்ட்15 - சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, ‘‘இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய முடிகிற உளவியல் நிபுணரை நான் பார்த்ததே இல்லை. ஊழலுக்கு இடம் தருகிற தளங்களில் ஒன்று - பணியமர்வு நடைமுறை. ‘நேர்காணல் பகுதியில் உள்ள ஊழல் காரணமாக, தங்கள் வேலைவாய்ப்பை இழந்து விடுகின்றனர் பலர்'' என்றார்.

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது:

எழுத்துத் தேர்வு, வாய்வழித் தேர்வு இரண்டும் கொண்ட பணி களுக்கு நபர்களைத் தேர்ந்தெடுக்க, டிஎன்பிஎஸ்சியில், ‘வாய்வழித் தேர்வுத் துறை' (Oral Test Department) இருக்கிறது.

வாய்வழித் தேர்வு நாளன்று, தேர்வர்களின் மூல சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்; பலவகைப் பணி யிடங்களுக்கான தேர்வு எனில், தேர்வர்களின் விருப்பங்கள் பெறப் படும்; முடிவில், ஒருங்கிணைக் கப்பட்ட மதிப்பெண் பட்டியல் (Consolidated Mark List (CML) தயாரிக்கப்படும்.

எல்லாம் சரிதான். ஆனால்.... வாய்வழித் தேர்வின்போது தேர்வர்களிடம் என்ன எதிர்பார்க்கப் படுகிறது...? இதற்கு எந்த பதிலும், தெளிவும் எங்கும் இல்லை.

ஏற்கெனவே எழுத்துத் தேர்வில் அறிவுத் திறன் சோதிக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றுதான் நேர்காணலுக்கு வருகிறார்கள்.

நன்னடத்தை, அர்ப்பணிப்புணர்வு, நடு நிலையான பார்வை, மனிதா பிமான அணுகுமுறை ஆகியன இருக்கின்றனவா என்று சோதிக்கப் போகிறார்களா...? என்னதான் கேட்டு, எப்படித்தான் தேர்வு செய்யப் போகிறார்கள்...?

திடமான தீர்க்கமான வழிமுறை இருக்கிறது என்றால், அது என்ன என்று தேர்வர்களுக்கு சொல்லப்பட வேண்டாமா...?

ஒரு நபருக்கு 29; மற்றவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படுமானால் எந்த அடிப்படையில் எந்த அளவு கோல் வைத்து இந்த வித்தியாசம் நியாயமானது ஆகும்...? யார் கேள்வி கேட்பது...? யார் பதில் சொல்வார்..?

‘தோன்றியது', அளித்தோம் என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன விளக்கம் இருக்க முடியும்...? எல்லாருக்கும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடைகிறது எழுத்துத் தேர்வு.

ஆனால் நேர்காணல் அப்படி இல்லை. ஒருவர், காலையில் முதல் ஆளாக இருப்பார்; மற்றவரோ, வெளியூரில் இருந்து இரவுப் பயணம் செய்து வந்து, நாள் முழுதும் பதற்றத்துடனே அமர்ந்து விட்டு, கடைசி நபராக மாலையில் உள்ளே நுழைவார். இருவரையும் பிரித்துப் பார்க்கிற சாத்தியம் இருக்கிறதா...?

கடந்த சில நாட்களாக, ‘மாதிரி நேர்காணல்' (mock interview) பயிற்சிக்கு வருகிற, பெரும்பாலான தேர்வர்களுக்கு ஏற்படும் ஐயங் களும், ‘விற்பன்னர்கள்' தருகிற விளக்கங்களும், அதிர்ச்சி தருவன.

என்ன உடை அணியலாம்..? ‘போர்டு' உறுப்பினர்களுக்கு எவ்வாறு வணக்கம் தெரிவிப்பது..? நாற்காலியில் எப்படி அமர்வது..? ‘தெரியாது' என்று பதில் கூறலாமா கூடாதா..? ‘உண்மை'யைப் பேச லாமா..? அடைமொழி இல்லாமல் தலைவர்களின் பெயர் சொல்ல லாமா..? எத்தனை கேள்விகள்! என்ன வொரு பரிதாப நிலை!

இவை குறித்து கவலைப்பட வேண்டாம்; இதுதான் எமது எதிர்பார்ப்பு என்று தெளிவாக அறி விப்பதில் என்ன சங்கடம் இருக் கிறது...?

நேர்காணல் எனப்படும் வாய்வழித் தேர்வு இருந்துதான் ஆகவேண்டும் என்றால், வருகிற தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே வகுப்பு, விளக்கம், வழிகாட்டுதல் தந்து உதவலாமே...?

அதிகார வர்க்கத்தின் அர்த்தமற்ற அணுகுமுறைக்கு வலு சேர்ப்பதைத் தவிர, நேர்காணல் முறை என்ன சாதித்துவிடப் போகிறது...?

எத்தனை முறை சொன்னாலும் இதுதான் உண்மை - ‘பயிற்று விக்கப்படுகிற' தேர்வர்களுக்கு, ஏற்கெனவே அதிகார வர்க்கத் துடன் ‘உறவு' இருக்கிறவர்களுக்கு, ‘நேர்காணல்' நிச்சயமாக சாதகம்;

‘யாரையும்' அறியாத. ‘பேசத் தெரியாத' முதல் தலைமுறை, கிராமத்துப் பட்டதாரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்; பாதகம்.

என்ன நடக்கும்... எப்படித் தேர்வு செய்யப்படுவோம்... ஒருவருக்கு மதிப்பெண் கூடவோ குறையவோ என்ன காரணம் என்று தெரிந்து கொள்கிற உரிமை, தேர்வர்களுக்கு இருக்கிறதா இல்லையா...? சற்றும் ஐயத்துக்கு இடமின்றி மிகத் துல்லியமாகத்தான் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது...?

டிஎன்பிஎஸ்சியின் நேர்மையான செயல்பாட்டில், நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அதையே இன்னமும் சிறப்பானதாக செய்யலாமே... ஏன் கூடாது..?
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு தகுதியானவர்களின் விவரம் கேட்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆசிரியர்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பெரும்பாலானவர்கள் உரிமை விடல் செய்துவிட்டதால் காலி யிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற் போது மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், பட்டியலில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெற தகுதியானவர்களா என்பதையும், ஒழுங்கு நடவ டிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா உள்ளிட்ட விவரங்களை பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பதவி உயர்வு கலந்தாய்வு முடிவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE