TRB

TNTET

Monday, 25 February 2019

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 896 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2019. இணைய முகவரி : www.upsc.gov.in யூ.பி.எஸ்.சி. அமைப்பு மத்திய அரசின் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.சி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு 896 இடங்களும், வனத்துறை (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு 90 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 21 முதல் 32 வயதுடைய பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 18-ந்தேதி கடைசி நாளாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு 02-06-2019-ந் தேதி நடத்தப்படுகிறது. இது பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in.

SSC RECRUITMENT 2019 | SSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1601 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019. இணைய முகவரி : www.ssc.gov.in. பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1601 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதிகமாக எல்லை சாலை கழகத்தில் 767 பணியிடங்கள் உள்ளன. டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இன்று (25-ந் தேதி) விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in.

FCI RECRUITMENT 2019 | FCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4103 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.03.2019. இணைய முகவரி : www.fci.gov.in. இந்திய உணவு கழகத்தில் 4103 வேலைவாய்ப்புகள் இந்திய உணவுக் கழக நிறுவனத்தில் 4 ஆயிரத்து 103 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய உணவு கழக நிறுவனம் சுருக்கமாக எப்.சி.ஐ. (FCI) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டல கிளைகளிலும் ஜூனியர் என்ஜினீயர், டைப்பிஸ்ட், அசிஸ்டன்ட் (கிரேடு2, கிரேடு-3) மற்றும் ஸ்டெனோ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 103 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக தெற்கு மண்டலத்தில் 540 பணியிடங்களும், வடக்கு மண்டலத்தில் 1999 பணியிடங்களும், கிழக்கு மண்டலத்தில் 538 பணியிடங்களும், மேற்கு மண்டலத்தில் 735 பணியிடங்களும், வடகிழக்கு மண்டலத்தில் 291 பணியிடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிப்பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஸ்டெனோ பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் என்ஜினீயர் மற்றும் அசிஸ்டன்ட் கிரேடு-2 பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், அசிஸ்டன்ட் கிரேடு 3 பணிக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1-1-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். கல்வித்தகுதி ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயாிங் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், குறிப்பிட்ட அளவில் சுருக்கெழுத்து தட்டச்சுத்திறன் பெற்றவர்கள் ஸ்டெனோ (கிரேடு 2) பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தி தட்டச்சுத் திறன் பெற்றவர்கள் டைப்பிஸ்ட் பணிக்கும், இதர பட்டப்படிப்புகள் மற்றும் பி.இ., பி.டெக் படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் கிரேடு 3 பணியில் வாய்ப்புகள் உள்ளன. கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு வருகிற ஏப்ரல்- மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.fci.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in

NYKS RECRUITMENT 2019 | NYKS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அக்கவுண்ட்ஸ் கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 12000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.03.2019. இணைய முகவரி : www.nyks.nic.in இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் நேரு யுவகேந்திரா இளைஞர் மேம்பாட்டு அமைப்பில் 12 ஆயிரம் தன்னார்வலர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- நேரு யுவகேந்திரா அமைப்பு 1972-ல் தொடங்கப்பட்டது. 1987-ல் நேரு யுவகேந்திரா சங்கேதன் என்ற பெயர் மாற்றத்துடன், தன்னாட்சி அமைப்பாக செயல்பட ஆரம்பித்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது. இளைஞர் மேம்பாட்டிற்காக செயல்படும் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக இது விளங்குகிறது. தன்னார்வத்துடன் கூடிய பல்வேறு சமூக பணிகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்கிறது. தற்போது இந்த அமைப்பில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தன்னாா்வலா்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளன. மொத்தம் 12 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 18 வயது நிரம்பியவராகவும், 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். மார்ச் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 15-ந் தேதி தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அவர்கள் மார்ச் 18-ந் தேதிக்குள் தன்னார் வலர் பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் தேசத்தின் பல்வேறு அரசு திட்டப்பணிகளின்போது தன்னார்வலர்களாக பணி செய்யலாம். பணிக்கான மதிப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இது பற்றிய விவரங்களை www.nyks.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 February 2019

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019.

AIIMS RECRUITMENT 2019 | AIIMS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பெர்சனல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 247 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப் படுகிறது. இதன் கிளைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் கிளையில் ஸ்டெனோகிராபர், பார்மசிஸ்ட், பிரைவேட் செகரட்ரி, பெர்சனல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 132 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 16 இடங்களும் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி பார்மசிஸ்ட், எம்.ஏ., எம்.எஸ்.சி, ஜெனரல் நர்சிங், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் ஸ்டெனோகிராபி உள்ளிட்ட பலதரப்பட்ட படிப்பு முடித்தவர் களுக்கும் பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய அறிவிப்பு பிப்ரவரி 9-15 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான விவரங்களை www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019.

PNB RECRUITMENT 2019 | PNB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 325 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.03.2019.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. தற்போது இந்த வங்கியில் சீனியர் மேனேஜர், மேனேஜர் அண்ட் ஆபீசர் (ஐ.டி.) போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 325 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 165 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 84 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 51 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 25 இடங்களும் உள்ளன. பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள்: கிரெடிட் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 51 பேரும், மேலாளர் பணிக்கு 26 பேரும், சட்டப் பிரிவில் முதுநிலை மேலாளர் பணிக்கு 55 பேரும், மேலாளர் பணிக்கு 55 பேரும், எச்.ஆர்.டி. மேலாளர் பணிக்கு 18 பேரும், ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 120 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபீசர் (ஐ.டி.) பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளில் அதிகபட்சம் 37 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை படிப்புகளுடன் குறிப்பிட்ட முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், சட்டம் பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.இ., பி.டெக், எம்.சி.ஏ. படித்தவர்கள் ஆகியோருக்கு பணிவாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-3-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் தேர்வு மார்ச் 24-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.pnbindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019.

NITT RECRUITMENT 2019 | NITT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 134 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2019. திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது இந்த என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். வயது - கல்வித்தகுதி இந்த பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 500-ம், மற்றவர்கள் ரூ.1000-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-2-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.nitt.edu/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CEWACOR RECRUITMENT 2019 | CEWACOR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 571 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2019.

CEWACOR RECRUITMENT 2019 | CEWACOR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி :ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 571 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2019. மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- சென்டிரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேசன் எனப்படும் மத்திய பண்டகசாலை கழகம், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உணவுப்பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளை பராமரித்து வருகிறது. மத்திய விவசாயத்துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் சூப்பிரண்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 571 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிக பட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 238 இடங்களும், ஜூனியர் சூப்பிரண்டென்ட் பணிக்கு 155 பணியிடங்களும், சூப்பிரண்டென்ட் (ஜெனரல்) பணிக்கு 88 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு ‌ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணி களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 16-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி வேளாண்மை பட்டப்படிப்பு அல்லது உயிரியல், வேதியியல், உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.காம், பி.ஏ. வணிகவியல், சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன. கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. தேர்வு செய்யும் முறை ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஆன்லைன் தேர்வு ஏப்ரல்-மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் பற்றிய கடிதம் பின்னர் அனுப்பப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://cewacor.nic.in/index.php என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு

அரசு பள்ளிகளில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி, தமிழக அரசு, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி கட்டாயமாகும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும்.தமிழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், 1998ல், அறிமுகம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற, கணினி அறிவியல் படிப்புக்கு, முதலில், கம்ப்யூட்டர் டிப்ளமா முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.பின், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அதன்பின், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.அதேநேரத்தில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்கள், 'டெட்' தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்கள், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணையை, தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் விதிகளின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, ஆசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.அரசு பள்ளிகளில், 2,689 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களில், 814 இடங்கள் காலியாக உள்ளன.அவை, புதிய கல்வித்தகுதி அடிப்படையில், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு - 1' என்ற பதவியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. தற்போது பணியாற்றுவோர், 'கம்ப்யூட்டர் பயிற்றுனர், கிரேடு - 2' என, அழைக்கப்படுவர்.கிரேடு - 2 பதவியில் உள்ளவர்கள், குறைந்த பட்சம், எட்டு ஆண்டுகள் அனுபவத்துடன், முதுநிலை கல்வித்தகுதி பெற்றிருந்தால், எதிர்காலத்தில், கிரேடு -1 நிலைக்கு பதவி உயர்வு பெறுவர். அதேபோல, கிரேடு - 2ல் பணியாற்றுவோரின் பணியிடங்கள், ஓய்வு, மரணம் உள்ளிட்ட, காரணங்களால் காலியானால், அந்த இடம், கிரேடு - 1 ஆக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE