TRB

Friday, 8 March 2019

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு நடத்தியது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்ச்சிபெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப் புக்கும் அழைக்கப்பட்டனர். இந்நிலையில் 196 பேர் வினாத் தாளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. அதன் காரணமாக இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2018 பிப்.8 அன்று உத்தரவிட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என தீர்ப்பளித்தார். ஆனால் இதே கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘குற்றச்சாட்டுக் குள்ளான 196 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தேர்ச்சி யடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். மேல்முறையீடு சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதி பதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத் தரவை நாங்கள் உறுதி செய்கி றோம். மேலும் இந்த நடைமுறைகளை வரும் ஏப். 30-க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 4 March 2019

RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 223 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2019. இணைய முகவரி : www.rcf.indianrailways.gov.in

RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 223 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2019. இணைய முகவரி : www.rcf.indianrailways.gov.in | ரெயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 223 பேர் தேர்வு செய்யப்படுகிறாா்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் ரெயில்பெட்டி தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 223 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், பெயின்டர், கார்பெண்டர், மெக்கானிக் (மோட்டார் வெகிகிள்), எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஏ.சி. அண்ட் ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிக் போன்ற பிரிவில் பயிற்சிப் பணிகள் உள்ளன. பணி வாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 23-2-2019-ந் தேதியில் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்ப தாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 23-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். 28-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.rcf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 814 | விண்ணப்பம் துவக்கம் : 20.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2019. இணைய முகவரி : http://trb.tn.nic.in/

TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 814 | விண்ணப்பம் துவக்கம் : 20.03.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.04.2019. இணைய முகவரி : http://trb.tn.nic.in/ தமிழக பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணிக்கு 814 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இவை கிரேடு -1 தரத்திலான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு முதுநிலை பட்டப்படிப்புடன், பி.எட் படித்தவா்கள் அல்லது பிஏ.&பி.எட், பி.எஸ்.சி.& பி.எட். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது மற்றும் பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 10-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET 2019 | தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு | விண்ணப்பம் துவக்கம் : 15-3-2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2019 | இணைய முகவரி : trb.tn.nic.in

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ம் வகுப்புவரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்பு பெறலாம். 6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு 15-3-2019-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் 5-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 35,277 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : http://www.rrcb.gov.in/rrbs.html

RAILWAY RECRUITMENT 2019 | RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 35,277 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2019. இணைய முகவரி : http://www.rrcb.gov.in/rrbs.html ரெயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 35 ஆயிரத்து 277 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய ரெயில்வே துறை உலகில் அதிகமானவர்களை கொண்டு செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். சமீபத்தில் ரெயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு சுமார் 30 ஆயிரம் இடங்கள் என ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொழில்நுட்பம் சாராத பணிகள் தற்போது தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான முழுமையான காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மொத்தம் 35 ஆயிரத்து 277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக காலியிட விவரம் : ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 4 ஆயிரத்து 319 இடங்கள், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 760 இடங்கள், ஜூனியர் டைம் கீப்பர் பணிக்கு 17 இடங்கள், டிரெயின்ஸ் கிளார்க் பணிக்கு 592 இடங்கள், கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 4 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இவை பட்டப்படிப்புக்கு கீழான கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களாகும். இவை தவிர டிராபிக் அசிஸ்டன்ட் பணி - 88 இடங்கள், கூட்ஸ் கார்டு பணிக்கு 5 ஆயிரத்து 748 இடங்கள், சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 5 ஆயிரத்து 638 இடங்கள், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 2 ஆயிரத்து 873 இடங்கள், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 3 ஆயிரத்து 164 இடங்கள், சீனியர் டைம் கீப்பர் 14 இடங்கள், ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு 6 ஆயிரத்து 865 இடங்கள், கமர்சியல் அப்ரண்டிஸ் 259 இடங்கள் உள்ளன. இவை பட்டதாரிகளுக்கான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்... வயது வரம்பு பட்டதாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு 33 வயதுக்கு உட்பட்டவர்களும், பிளஸ்-2 தரத்திலான பணியிடங்களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-7-2019-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு கணக்கிடப்படும். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள், கமர்சியல் டிக்கெட் கிளார்க், டிரெயின்ஸ் கிளார்க், ஜூனியர் டைம் கீப்பர், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்கள் டிராபிக் அசிஸ்டன்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க், கமர்சியல் அப்ரண்டிஸ், ஸ்டேசன் மாஸ்டர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், தட்டச்சு படித்தவர்கள் ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட், சீனியர் டைம் கீப்பர், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் , சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஏப்ரல் 5-ந் தேதி வரை கட்டணம் செலுத்தலாம். முதல் நிலை கணினித் தேர்வு ஜூன் முதல் செப்டம்பா் மாத இடைவெளிக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 554 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 554 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.03.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பணி களுக்கு 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, நாட்டின் கடல்எல்லை பாதுகாப்பில் ஈடு படுகிறது. இந்த படைப்பிரிவில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது ‘குரூப்-சி’ பிரிவு அலுவலக பணியிடங்களான டிரேட்ஸ்மேன் மேட் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 554 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை கமாண்டிங் அலுவலகத்திற்கு 46 இடங்களும், மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்படை கமாண்டிங் தலைமையகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களுக்கு 502 பேரும், கொச்சி தெற்கு கமாண்டிங் அலுவலகத்தில் 6 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 15-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தோ்ச்சி பெற்று, குறிப்பிட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்து சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் இன்றி விண்ணப்பிக்கலாம். இவர்கள் தவிா்த்த மற்றவர்கள் ரூ.205 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை அதிகப்படியான விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்பு பணி நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற மாா்ச் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தொிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in, www.indiannavy.nic.in ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.