TRB

Monday, 29 April 2019

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் 

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர் கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ல் தொடங்கி 29-ம் தேதியுடன் முடி வடைந்தது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர் கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர் வர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளுக்கு மின் னஞ்சல் மூலமும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந் தகவல் (எஸ்எம்எஸ்) மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலு வலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை அறிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலை மையாசிரியர் மூலம் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப் பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து மாணவர்கள் மே மாதம் 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மே 3, 4-ம் வாரத்தில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு 
சிபிஎஸ்இ 12, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 3, 4-வது வாரங்களில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 21-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தது. இந்த ஆண்டு 18 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். மறுபுறம் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கிடையே கடந்த ஆண்டு வினாத்தாள் இணையதளங்களில் வெளியீடு என பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறின. ஆனால், சிபிஎஸ்இ பின்பற்றிய கடும் கட்டுப்பாடுகளால் நடப்பாண்டு எந்தவித முறைகேடுகளும் இன்றி தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் உயர்நிலை படிப்புகளுக்கு தயாராக ஏதுவாக பொதுத்தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட முன்கூட்டியே வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதன்படி 12-ம் வகுப்புக்கு மே 3-வது வாரமும், பத்தாம் வகுப்புக்கு மே 4-வது வாரமும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதுதவிர இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை சான்றிதழுடன் சேர்த்து வழங்கவும் முடிவு செய்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.