TRB

TNTET

Monday, 27 May 2019

LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581 விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019

  • LIC RECRUITMENT 2019 | LIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : டெவலப்மென்ட் ஆபீசர் உள்ளிட்ட பணி
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,581
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.06.2019
  • இணைய முகவரி : www.licindia.in

எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சிப் பணிகள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரி பயிற்சி பணிகளுக்கு 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இதில் டெவலப்மென்ட் ஆபீசர் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 581 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மண்டலம் வாரியாக சென்னையை தலைமை இடமாக கொண்ட தெற்கு மண்டலத்தில் 1257 இடங்கள், மத்திய மண்டலத்தில் 525 இடங்கள், கிழக்கு மண்டலத்தில் 922 இடங்கள், கிழக்கு மத்திய மண்டலத்தில் 701 இடங்கள், தெற்கு மத்திய மண்டலத்தில் 1251 இடங்கள், வடக்கு மண்டலத்தில் 1130 இடங்கள், வடக்கு மத்திய மண்டலத்தில் 1042 இடங்கள், மேற்கு மண்டலத்தில் 1753 இடங்கள் உள்ளன. இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் மே 1-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ், ஏதேனும் ஒரு கல்விப் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ம் மற்றவர்கள், ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜூன் 9-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஜூலை 6 மற்றும் 13-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மை தேர்வு ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெறும். விண்ணப்பிக்கவும், இவை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.licindia.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர் வுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவிறக் கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 ஜூன் 8-ம் தேதியும் தாள்-2 ஜூன் 9-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக் கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத் தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப் பதாரர்கள் தங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வர்கள் தேர்வறைக்கு செல்லும்போது ஹால்டிக் கெட்டை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. 6 லட்சம் பேர் விண்ணப்பம் தகுதித்தேர்வில் தாள்-1 இடைநிலை ஆசிரியர்களுக் கான தேர்வு. இத்தேர்வுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2-க்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (150-க்கு 90) எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி போன்றோர்) எனில் 55 சதவீத மதிப்பெண் (150-க்கு 82) பெற வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 21 May 2019

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஆணை

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு போல... தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்படுவது வழக்கம். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை உயர்த்தி வழங்கும்போதும் தமிழக அரசும் அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி அளிக்கிறது. தேர்தலால் அறிவிப்பு தாமதம் ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அறிவித்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வெளியிடவில்லை. தற்போது தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 12 சதவீதமாக உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இப்போது 9 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி 12 சதவீதமாக உயர்த்தி அளிக்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அளிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நிலுவைத்தொகைகள் உடனடியாக சம்பளக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெறுவோர் யார்? உயர்த்தப்பட்டுள்ள அக விலைப்படி, அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், மதிய உணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 15 May 2019

ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 | தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை - தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET 2019 DATE OF EXAMINATION ANNOUNCED | PAPER I - 08-06-2019 - PAPER II - 09-06-2019. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை- 600 006 பத்திரிக்கைச் செய்தி வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019-க்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.02.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், தாள் 2 - 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரையிலும், எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 8 May 2019

கல்வித்துறைக்கு தனிச்சேனல்: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கல்வித்துறையில் மாற்றம் பழனி முருகன் கோவிலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, சைக்கிள், புத்தகப்பை என 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் தமிழக கல்வித்துறை உள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றமே காரணம். ஸ்மார்ட் வகுப்பறை தமிழகத்தில் இதுவரை 65 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகமான மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை செய்துள்ளது. உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்பட்ட சலுகைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக் கப்படும். 7 ஆயிரம் காலிப்பணியிடங்கள் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறை சிக்கலால் மாணவர்கள் புத்தகங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து மாணவர்கள் மடிக்கணினிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தேர்வு முடிவுகளுக்கு பிறகு கல்வித்துறைக்கு என பிரத்யேகமாக தனிச்சேனல் ஏற்படுத்தப்படும். இதுதவிர ரோபோட்டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வருகிற கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும். சிறப்பு துணைத் தேர்வு 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ்-2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்கள் மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் 8-ந் தேதி (இன்று) மதியம் முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கு உரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பை தேர்வு செய்து வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, 2 நகல்கள் எடுத்து 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்தவேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 6 May 2019

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019.

TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 26 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-5-2019. இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணிக்கு 13 இடங்களையும், ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு 26 இடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு திறன் பெற்றவர்கள் அசிஸ்டன்ட் டிரெயினிங் ஆபீசர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு 20-5-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மைக்ரோ பயாலஜி, பேதாலஜி, அனிமல் பயோடெக்னாலஜி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் ரிசர்ச் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 29-ந் தேதி கடைசிநாளாகும். இவை பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019.

BOAT RECRUITMENT 2019 | BOAT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : தொழில்நுட்ப பயிற்சிப்பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-05-2019. இணைய முகவரி : www.boat-srp.com

பயிற்சிப் பணி முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான அப்ரண்டிசிப் டிரெயினிங் வாரியத்தின், தெற்கு மண்டலத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிப்பணிகளுக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங் பட்டதாரிகள் 40 பேரும், டிப்ளமோ என்ஜினீயர்கள் 50 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய முழுமையான விவரத்தை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 8-5-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/ என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019.

TCIL RECRUITMENT 2019 | TCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 056 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019. இணைய முகவரி : www.tcil-india.com
டெலி கம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) எனப்படும் மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணி களுக்கு 56 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். 30 முதல் 50 வயதுடையவர் களுக்கு பணிகள் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சிவில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், சி.ஏ., சி.எம்.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை www.tcil-india.com இணையதளத்தில் பார்த்துவிட்டு, 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி, மே 14-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019.

NIOS RECRUITMENT 2019 | NIOS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கல்வி அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 086 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.05.2019. இணைய முகவரி : www.nios.ac.in
திறந்தவெளி தேசிய கல்வி மையம் (NIOS), இயக்குனர், கல்வி அதிகாரி, சூப்பிரவைசர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 52 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. முதுநிலை இந்தி, ஆங்கிலம் மொழி படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஹார்டுவேர் என்ஜினீயரிங் முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள், 12-ம்வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 17-ந் தேதி வி்ண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரத்தை www.nios.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019.

GSI RECRUITMENT 2019 | GSI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : டிரைவர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 37 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-6-2019. இணைய முகவரி : www.gsi.gov.in

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் ஜியாலஜிகல் சர்வே அமைப்பில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 26-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை இணையதளங்களில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 027 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2019. இணைய முகவரி : www.careers.bhel.in
பாரத மிகுமின் நிறுவனமான பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் மற்றும் சூப்பிரவைசர் பணிக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்ஜினீயர் பணிக்கும், டிப்ளமோ படித்தவர்கள் சூப்பிரவைசர் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 14-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான நேர்காணல் வருகிற 29-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரங்களை careers.bhel.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019.

BMRC RECRUITMENT 2019 | BMRC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : எக்சிகியூட்டிவ் என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 168 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-5-2019. இணைய முகவரி : www.bmrc.co.in
பெங்களூரு மெட்ரோ ரெயில்வே நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், சீப் என்ஜினீயர், கிராஜூவேட் என்ஜினீயர், ஜெனரல் மேனேஜர், மேனேஜர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. மொத்தம் 168 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே அறிவிப்பும், விண்ணப்ப காலமும் வழங்கப்பட்டிருந்தன. தற்போது இவற்றுக்கான விண்ணப்ப அவகாச காலம் நீடிப்பு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணி களுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று (6-5-2019) மாலை வரை இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.bmrc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019.

ITBP RECRUITMENT 2019 | ITBP அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 121 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21-6-2019. இணைய முகவரி : www.recruitment.itbpolice.nic.in

இந்திய திபெத்திய எல்லை காவல் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய திபெத்திய எல்லைக் காவல்படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படையான இதில் தற்போது விளையாட்டு ஒதுக்கீடு 2019 அடிப் படையில் கான்ஸ்டபிள் (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். மொத்தம் 121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21-6-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தட களம், நீர் விளையாட்டுகள், குத்துச்சண்டை, வுசு, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், வில்வித்தை, பனிச்சறுக்கு, கராத்தே போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 1-1-2017 முதல் 21-6-2019 வரை இடைப்பட்ட காலத்தில் விளையாட்டில் சாதித்தவர்களே விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

முக்கிய தேதிகள்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019.

HAL RECRUITMENT 2019 | HAL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 826 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.05.2019. இணைய முகவரி : www.hal-india.co.in
எச்.ஏ.எல். விமான நிறுவனத்தில் பயிற்சிப் பணிக்கு 826 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு... இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) எனப்படும் விமான நிறுவனம், ராணுவத்திற்குத் தேவையான பல்வேறு உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களை அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 561 இடங்களும், டெக்னீசியன் பிரிவில் 25 இடங்களும், என்ஜினீயரிங் பட்டதாரி மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 240 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். வருகிற 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். ஐ.டி.ஐ. படித்தவர்கள், ஐ.டி.ஐ. பிரிவு பணிக்கும், பிளஸ்-2 அறிவியல் பாடங்களை படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பணிகளுக்கும், என்ஜினீயரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் பட்டதாரிகள்-டிப்ளமோ பிரிவு பயிற்சிப் பணிக்கும் வி்ண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://hal-india.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 274 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019.

FACT RECRUITMENT 2019 | FACT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பொது மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 274 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : www.fact.co.in

உரம் மற்றும் வேதிப் பொருட்கள் நிறுவனத்தில் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 274 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

திருவாங்கூர் உரங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் நிறுவனம் சுருக்கமாக பேக்ட் (FACT) என்று அழைக்கப்படுகிறது. மத்திய நிறுவனமான இதில் தற்போது உதவி பொது மேலாளர், சீனியர் மேலாளர், உதவி கம்பெனி செகரட்ரி, மருத்துவ அதிகாரி, டெபுட்டி மேனேஜர், உதவி மேனேஜர், ஆபீசர், மேனேஜ்மென்ட் டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.மொத்தம் 274 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மேனேஜ்மென்ட் டிரெயினி பணிக்கு 51 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 79 இடங்களும் உள்ளன. கிராப்ட்ஸ்மேன் பணிக்கு 27 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணி வாரியான விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 48 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணி உள்ளது. 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. 1-4-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, எம்.பி.பி.எஸ், சி.ஏ., சி.எம்.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ.ஐ. போன்ற படிப்புகளுடன் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகாரி தரத்திலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. பி.எஸ்சி. (அக்ரி), டிப்ளமோ என்ஜினீயரிங், இதர பட்டப்படிப்புகள் படித்தவர் களுக்கு அலுவலக பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் கீழ்நிலை அலுவலக பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

கட்டணம்

விண்ணப்பதாரர்கள் அதிகாரி தரத்திலான பணிக்கு ரூ.1000-ம், மற்ற பணிகளுக்கு ரூ.500 கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை http://www.fact.co.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ARMY RECRUITMENT 2019 | ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : செய்லர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.05.2019.

ARMY RECRUITMENT 2019 | ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : செய்லர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 000 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.05.2019. இணைய முகவரி : www.joinindiannavy.gov.in

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படை இசைக்குழுவில் பணி.இந்திய கடற்படையில் இசைக்குழு பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சி களின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.தற்போது செய்லர் (மியூசிசியன்) 2-2019 என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களை இசைக்குழு பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமண மாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-1994 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

மெட்ரிக் கல்வி (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இசை அனுபவம் தேவை.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், இசைத்திறன் சோதித்தல், உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 15 வார கால அடிப்படை பயிற்சியும், 26 வார காலம் ராணுவ இசை பயிற்சியும் வழங்கப்படும். இவர்கள் 15 ஆண்டு காலம் பணிவாய்ப்பு பெறலாம். பின்னர் தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் பணி வாய்ப்பு நீடிக்கப்படும்.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : மே 19-ந் தேதி

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 2 May 2019

என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 31-ந்தேதி கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 31-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். 2019-20-ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். பட்டப்படிப்பில் சேர www.tneaonline.in, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக 42 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. சேவை மையங்கள் தொடர்பான தகவல்களை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்பதாரர்கள் ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். 31-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கமிஷனர் விவேகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்ப கல்வி துறை கலந்தாய்வு இணையதளம் தயாராக இருக்கிறது. விண்ணப்ப பதிவு இணையதளத்துக்கான உரிமத்துக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளது. இணையதளம் தயாராக இல்லை என்று வந்த செய்தி தவறானது. மேலும் தகவல்களுக்கு 044 22351014, 22351015 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பம் பதிவு செய்வதற்கு என்னென்ன விவரங்கள் தயார்படுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் வருமாறு:- * இணையதள முகவரிக்கு உள்ளே சென்றதும் மாணவர்கள் முதலில் உள்நுழைவு ஐ.டி. மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறகு மாணவர்கள் தங்கள் பெயர், ஊர், முகவரி, கல்வி நிலை விவரம் (8 முதல் 12-ம் வகுப்பு வரை), பெற்றோர் பற்றிய விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். * மாணவர்களுக்கு செல்போன் எண், சுய மின்னஞ்சல் முகவரி அவசியம். அந்த எண், மின்னஞ்சல் முகவரிக்குத்தான் ரேண்டம் எண், தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான நாள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்படும். * தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதும். எவ்வித சான்றிதழையும் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெளிமாநில மாணவர்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு * முன்னாள் ராணுவத்தினரின் மகன் மற்றும் மகள், விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி என்றால் அதற்குரிய சிறப்பு சான்றிதழ் கட்டாயம். பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் அவசியம். விருப்பம் இருந்தால் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம். முதல் பட்டதாரி என்றால் அதற்குரிய தனிச்சான்று அவசியம். அப்போது தான் அவர்கள் உதவித்தொகை பெற முடியும். * பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் ரூ.250-ம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். * அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூன் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெறும். இந்த பணி அரசின் 42 சேவை மையங்களில் மட்டுமே நடைபெறும். அப்போது விண்ணப்ப பதிவு மேற்கொண்ட அனைவரும் சேவை மையத்துக்கு நேரில் சென்று தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும். தரவரிசை பட்டியல் * ஜூன் 17-ந்தேதி தரவரிசை பட்டியல் www.tne-a-o-n-l-i-ne.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும். தரவரிசை பட்டியலின்படி, ஜூலை 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களின் தரவரிசை எண்ணிக்கைக்கு ஏற்ப எந்த தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்ற தகவல் மின்னஞ்சல் முகவரிக்கும், செல்போன் எண்ணுக்கும் செய்தி அனுப்பப்படும். * மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு கலந்தாய்வு ஜூன் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும். இது சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் நேரடியாக நடைபெறும். * பொதுப்பிரிவு மாணவர்கள் நேரடியாக வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வழி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கால்நடை மருத்துவ படிப்புக்கு 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கு 8-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. கால்நடை மருத்துவ படிப்பு 2019-20-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்.சி.-ஏ.எச்.), உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) 8-ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தலா 80 இடங்கள் என மொத்தம் 360 இடங்கள் இருக்கின்றன. அதேபோல், சென்னை கோடுவளி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் 40 உணவு தொழில்நுட்ப பட்டப்பிடிப்பு இடங்களும், 20 பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 40 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. விண்ணப்பம் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு இடங்களில் 15 சதவீதம் இந்திய கால்நடை மருத்துவ குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல், உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு இடங்களில் 15 சதவீதம் இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது. தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் 8-ந்தேதி காலை 10 மணி முதல் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், தகுந்த சான்றிதழ் நகல்களுடன் ஒவ்வொரு பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக ‘தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-600051’ என்ற முகவரிக்கு ஜூன் 10-ந்தேதி மாலை 5.45 மணிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கலந்தாய்வு தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 24-ந்தேதி வெளியிடப்படும். அயல்நாடுவாழ் இந்தியர், அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த சான்றிதழ் நகல்களுடன் ஜூலை 1-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்பிரிவு கலந்தாய்வும், உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) சிறப்பு பிரிவு கலந்தாய்வும் ஜூலை 9-ந்தேதி நடக்கிறது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு கலையியற் பிரிவு கலந்தாய்வு ஜூலை 10-ந்தேதி நடைபெறுகிறது. உணவு, கோழி, பால்வள தொழில்நுட்ப பட்டப்பிடிப்புகளுக்கு (பி.டெக்) கலந்தாய்வு ஜூலை 11-ந்தேதி நடைபெறும். இத்தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE