TRB

TNTET

Wednesday, 12 June 2019

TRB RECRUITMENT 2019 | 2144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  • TRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
  • பதவி : முதுகலை ஆசிரியர்
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144
  • ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019
  • இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in

TRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்
காலி பணியிடங்கள்: 2144
தமிழ் : 319
ஆங்கிலம் : 223
கணிதம்: 279
இயற்பியல் : 210
வேதியியல் : 356
தாவரவியல் : 154
விலங்கியல் : 144
வரலாறு : 104
புவியியல் : 11
பொருளியியல்: 211
வணிகவியல் : 99
Political science : 14
Physical education : 16
Bio chemistry : 1
Micro biology : 1
Home science : 1
Indian culture : 1
கல்வித் தகுதி : PG with B.Ed.,

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 9 June 2019

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி - கால அட்டவணை

DSE PG DISTRICT LEVEL TRAINING | பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட நூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் பயிற்சி நடைபெற உள்ளது அதற்கான கால அட்டவணை

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 June 2019

ஆன்லைன் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தொடக்கம் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியாகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று தொடங்கியது. தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டு வரை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளான நேற்று 12 ஆயிரத்து 584 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மாணவ-மாணவிகள் ஆன்லைனில் அனுப்பிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரியில் 21-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத 11 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி வெளியிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகம் கவுன்சிலிங் நடத்துகிறது. முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 4-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதன்மைக் கல்வி அலுவலரே தகுதிகாண்பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்கலாம்

இ.நி.உ க்கு 5 ஆண்டுகளுக்குள் பவாணி சாகர் பயிற்சி, DOM தேர்ச்சி பெற்றிருந்தால் முதன்மைக் கல்வி அலுவலரே தகுதிகாண்பருவம் முடித்தமைக்கான ஆணை வழங்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு...
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SPOUSE CERTIFICATE

SPOUSE CERTIFICATE | SPOUSE CERTIFICATE This is to certify that Sri/Smt -------------------------------------------W/O or H/O ------------------------------------ ------------------------------------------------------- has been working as --- ----------------------------------------- in the office of ------------------------------------------------------------------------------------------- since ----------- ----- ---------------------------.It is also further certified that She/He has not availed Spouse priority For Transfers for the last ______ years.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-4 தேர்வு அறிவிப்பு ஜூன் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஒரேநாளில் 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சாதனை புரிந்துள்ளது. அதில், 4 தேர்வுகளின் முடிவு கள் ஒரே மாதத்தில் வெளியிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடந்த ஜனவரி 27-ம் தேதி நடைபெற்ற இளநிலை கூட்டுறவு ஆய்வாளர் தேர்வு, மார்ச் 2-ல் நடந்த தொழில் மற்றும் வணிகத் துறை விலை மதிப்பீட்டு உதவியா ளர் தேர்வு, ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சித்துறை விடுதி கண்காணிப் பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் மே 4-ம் தேதி நடந்த மீன்வள உதவி ஆய்வாளர் தேர்வு, மே 5-ல் நடைபெற்ற கருவூலம் மற்றும் கணக்குத் துறை கணக்கு அலுவலர் தேர்வு, அதே நாளில் நடத்தப்பட்ட தொழில் வணிகத்துறை வேதியியலர் தேர்வு மற்றும் சமூகப்பாதுகாப்புத் துறை உதவி கண்காணிப்பாளர் தேர்வு ஆகிய 7 போட்டித்தேர்வுகளின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியா ழக்கிழமை ஒரேநாளில் வெளியிட் டது. இதில் 4 தேர்வுகளின் முடிவு கள் ஒரே மாதத்தில் வெளியிடப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட தேர்வுகளில் அடுத்த நிலைகளான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டி யல் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் தெரிவித்துள்ளார். குரூப்-4 தேர்வு இதற்கிடையே, குரூப்-4 தேர் வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதன்படி, குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம். இதுதொடர்பான முழு விவ ரங்கள் அடங்கிய அறிவிக்கை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.

பணிகள் :
1)கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ)
2)இளநிலை அலுவலர்
3)பில் கலெக்டர்
4)தட்டச்சர்
உள்ளிட்ட குரூப் 4 பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

முக்கிய தேதிகள் :அறிவிப்பாணை வெளியான தேதி : 07.06.2019
ஆன்லைனில்
விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி : 14.06.2019

விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 14.07.2019

தேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.tnpsc.gov.in

அல்லது www.tnpsc.exams.net

அல்லது www.tnpsc.exams.in என்னும் இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 7 June 2019

D.ELE.ED ADMISSION 2019 | தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24 ஜூன் 2019

D.ELE.ED ADMISSION 2019 | தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24 ஜூன் 2019
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் www.tnpsc.gov.in விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
விஏஒ (VAO)
ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant)
பில் கலெக்டர் (Bill Collector)
தட்டச்சர் (Typist)
உள்ளிட்ட பல்வேறு பணிகள்

முக்கிய தேதிகள்:
நாளிதழில் அறிவிப்பாணை வெளியான தேதி: 07.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 14.06.2019
கடைசி தேதி: 14.07.2019
தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2019

கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்ற இந்த தேர்வு பற்றிய பல்வேறு தகவல்களை www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.net அல்லது www.tnpsc.exams.in - என்ற இணையதளங்களில் 14.06.2019 ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 3 June 2019

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி. தற்போது இந்த கல்வி அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், இளநிலை ஆசிரியர் மற்றும் சிஸ்டம் அட்மின் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 370 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு 128 இடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 172 இடங்களும், பகல்டி கம் சிஸ்டம் அட்மின் பணிக்கு 70 இடங்களும் உள்ளன. முதுநிலை படிப்புடன், பி.எட். படித்தவர்கள் முதுநிலை ஆசிரியர் பணிக்கும், இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட். படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பட்டதாரிகள், சிஸ்டம் அட்மின் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 5-6-2019-ந் தேதியாகும். இதற்கான சான்றிதழ் சரி பார்த்தல் 17-6-2019-ந் தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை navodaya.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உருக்கு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

உருக்கு ஆலை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு கேட் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் ((SAIL) எனப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள செயில் நிறுவன தலைமை இடத்தில் இருந்து, இதன் கிளைகளில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேட்-2019 தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம் : மெக்கானிக்கல் - 66, எலக்ட்ரிக்கல் - 41, மெட்டலர்ஜிகல் - 7, கெமிக்கல் - 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 15, மைனிங்-3 இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 14-6-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜூன் 14-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.sailcareers.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்

விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களில் ஆண்- பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 242 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

விமானப்படை நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் ‘கமிஷன்டு ஆபீசர்’ பணியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்கேட் (AFCAT 2/2019) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. என்.சி.சி. வீரர் களுக்கான சிறப்பு நுழைவின் அடிப்படையிலும் குறிப்பிட்ட பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்திய குடியுரிமை பெற்ற ஆண்/ பெண் பட்டதாரிகள் இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம். மொத்தம் 242 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்கள் கீழே...

வயது வரம்பு:

பிளையிங் பிரிவில் சேரும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1996 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். பைலட் பயிற்சி பெற்றவர்கள் 26 வயதுடையவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

டெக்னிக்கல் பிரிவு மற்றும் கிரவுண்ட் டியூட்டி விண்ணப்பதாரர்கள் 20 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந் திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

கல்வித்தகுதி:

பிளையிங் பிரிவு பணிக்கு 3 ஆண்டு கால அளவு கொண்ட பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10, 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். பி.இ., பி.டெக். படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஏரோனாட்டிகல் என்ஜினீயரிங் மற்றும் இது சார்ந்த பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள் டெக்னிக்கல் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு விதமான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, சி.ஏ. போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் பணிகள் காத்திருக்கின்றன.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற் தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.

கட்டணம் :

தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

இணையதளம் வழியாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். careerindianairforce.edac.in மற்றும் afcat.cdac.in என்ற இணையதள முகவரியில் முழுமையான விவரங்களை படித்தறிந்து கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முன்னதாக புகைப்படத்தை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் : 30-6-2019

இதற்கான ஆன்லைன் தேர்வு ஆகஸ்டு 24,25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலை செய்து கொண்டே ராணுவ சேவை செய்யலாம் பிராந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்ப்பு

பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்பவர்கள் வேறு வேலை பார்த்துக் கொண்டே ராணுவ அதிகாரியாக சேவை செய்யலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் தரைப்படை, கடற்படை, விமானப்படை எனும் முப்பிரிவுகளாக செயல்படுகிறது. சர்வதேச அளவில் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரா வண்ணம் இந்த படைப்பிரிவுகள் காத்து கடமையாற்றுகின்றன. உள்நாட்டிற்குள் ஏற்படும் சமூக விரோத செயல்களை அடக்குவதற்காக துணை ராணுவ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ராணுவ அமைப்புகளுக்கு உதவிகரமாக செயல்படும் வகையில் ‘டெரிட்டோரியல் ஆர்மி’ எனும் ‘பிராந்திய ராணுவ’ அமைப்பு இயங்குகிறது. காவல்துறைக்கு உதவியாக ஊர்க் காவல் படையினர் செயல்படுவதுபோல, ராணுவத்தின் ஓர் உதவி அமைப்பாக இந்த பிராந்திய ராணுவம் செயல்படுகிறது. ராணுவப் பணியை விரும்பும் இளைஞர்கள், தாங்கள் செய்யும் வேலைக்கு இடையூறு இல்லாமல், இருக்கும் இடத்திலேயே குறிப்பிட்ட கால பயிற்சி பெற்று பிராந்திய ராணுவத்தில் சேவையாற்றலாம். அரசு பணி, தனியார் பணி, சுயதொழில் என எந்த தொழிலில் இருப்பவர்களும் இதில் சேரலாம். ஆனால் காவல்துறை, ஆயுதப்படை, துணை ராணுவ பிரிவுகளில் பணியில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. பணிக்காலத்தில் ராணுவ அதிகாரிகள் பெறும் ஊதியம் மற்றும் சலுகைகளையும் பெறலாம். விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலர், இந்த பிரிவில் கவுரவ ராணுவ சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு பட்டதாரிகளை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருவதற்கான மேலும் சில தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 25-6-2019-ந் தேதியில் 18 வயது முதல் 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் 2 ஆண்டுகளுக்கு அவ்வப்போது ராணுவ பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் அவர்கள் வழக்கமாக செய்யும் பணியில் நீடித்துக் கொண்டே ராணுவ அதிகாரியாக பணியாற்றலாம். லெப்டினன்ட் அதிகாரியாக பணி பெறும் அவர்கள் பணிக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவை இணைக்க வேண்டும். முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-6-2019 எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 28-7-2019 இது பற்றிய மேலும் விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : www.jointerritorialarmy.gov.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரெயில்வேயில் அதிகாரி வேலை

தெற்கு ரெயில்வேயில் எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது, மொத்தம் 95 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 48 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் உள்ளன. இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இந்த பணிகளுக்கு 1-1-2019-ந் தேதியில் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ். ஆபீஸ் மென்பொருள் பயிற்சி சான்றிதழ் அறிந்திருப்பது அவசியம். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-6-2019-ந் தேதியாகும். விரிவான விவரங்களை www.rrcmas.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர் பணிகள்

மத்திய நிதி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பிராவிடன்ட் பண்ட் எனப்படும் ஊழியர்கள் வருவாய் நிதி கழக நிறுவனம் சுருக்கமாக இ.பி.எப்.ஓ. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த மத்திய அரசு நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 25-6-2019-ந் தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 25-6-2019-ந் தேதியாகும். ஜூலை 10-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கலாம். இதற்கான முதல்நிலைத் தேர்வு (பேஸ்-1) ஜூலை 30,31-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு (பேஸ்-2) தேதி முதல்நிலைத் தேர்வு முடிவுக்குப் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான தேர்வு 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது

தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன் மூலம் 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு அரசுப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அமைப்பாக விளங்குகிறது. அரசுத் துறைகளில் ஏற்படும் என்ஜினீயரிங் தொடர்பான பணியிடங்களை நிரப்ப ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ எனும் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்புகிறது. தற்போது 475 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பணிவாரியாக உள்ள காலியிட விவரம் : அசிஸ்டன்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் -10, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (அக்ரி) - 93, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில்) - 193, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்) - 13, அசிஸ்டன்ட் டைரக்டர் (இண்டஸ்ட்ரியல் சேப்டி அண்ட் ஹெல்த்)- 26, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில்-ஹைவே) - 123, அசிஸ்டன்ட் என்ஜினீயர் (சிவில் மாரிடைம்) - 2, ஜூனியர் ஆர்கிடெக்ட்-15. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்... எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்சன், அக்ரி, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அசிஸ்டன்ட் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் பணிக்கு 39 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதி களின்படி இட ஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பப் பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ. 200 செலுத்தி விண்ணப்பிக்கலாம். சில பிரிவினருக்கு இதில் விதிவிலக்கு அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்டு 10-ந் தேதி நடைபெறுகிறது. இவை பற்றிய கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 2 June 2019

தமிழக அரசை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை

கோபிசெட்டிபாளையம்ஜூன் 3 ம் தேதி பள்ளி திறக்கப்படும். தமிழக அரசை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வி.ஓ.வி.டி : அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புதிய பாடதிட்டத்தை முதலமைச்சர் நாளை மறுதினம் வெளியிடுகிறார்.

புதிய பாடதிட்டத்தின்படி 210 நாட்களும் விடுமுறை இல்லாமல் பள்ளியை  நடத்தினால் மட்டுமே முழுமையாக மாணவர்கள் கற்க முடியும்.

தற்போது  210 நாட்கள் தான் பள்ளி நடைபெறுகிறது. இதில் இயற்கை மாற்றங்களுக்காக விடுமுறை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.

210 நாட்கள்  பாடம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளதால் தான் 3 ம் தேதி பள்ளி திறக்க இயக்குனர் மூலம்  அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பெற்றோர்களும், மாணவர்களும் பிரகாசமான எதிர்காலத்திற்கு 3 ம் தேதி பள்ளி திறப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இதை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.

புதிய கல்வி கொள்கையை பொறுத்த வரை முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் இருமொழிக்கொள்கையை தான் பின்பற்றி வந்தனர்.

அவர்கள் வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இருமொழிக்கொள்கையை பின்பற்றி வருகிறார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கூட இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 1 June 2019

புதிய கல்விக் கொள்கை

மொத்தம் 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை  வெளியிட்டது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையானது ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனுக்கேற்ப தமிழக அரசு புதிய பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து இருப்பதாலும், 210 நாட்கள் வேலை நாட்களாக உள்ளதாலும், விடுமுறையை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார்.

 விடுமுறையை அதிகரிக்கும் பட்சத்தில், பாடத்தை முழுமையாக மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்றும்

தமிழகத்தில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE