TRB

TNTET

Wednesday, 31 July 2019

10 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிஸ்கோ நிறுவனம் திட்டம்

2025 ஆண்டுக்குள் 10 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக சிஸ்கோ நிறுவனம் தகவல் தெரிவித்துள் ளது.சிஸ்கோ அமெரிக்காவைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தொழில் நுட்பத் துறையில் இந்திய மாண வர்களின் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியை அளித்துவருகிறது. இதுவரை 3.5 லட்சம் இந்திய மாணவர்களுக்கு இந்நிறுவனம் பயிற்சியளித்துள்ளது.இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைமை தகவல் அதிகாரி வி சி கோபல்ரத்னம் கூறியபோது, 2020 க்குள் 2.5 லட்சம் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று 2016 ஆண்டு முடிவெடுத்து இருந் தோம். ஆனால், தற்போது நிர் ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். எங்கள் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். 2025-க்குள் 10 லட் சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை தற்போதைய நோக்க மாக கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தொழில் பயிற்சி இயக்குனரகம், நாடு முழுவதுமுள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ஐடிஐ) உள்ள 15 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப் பதற்காக சிஸ்கோ, அசெஞ்சர், குவெஸ்ட் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காவலர் தேர்வு நடப்பது எப்போது?  

காவலர் தேர்வு நடப்பது எப்போது?  4 மாதங்களாக காத்திருக்கும் இளைஞர்கள் தமிழகத்தில் காலியாக உள்ள 8,826 காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4 மாதங் களாகியும், தேர்வு தேதி அறிவிக்கப்படாததால், இத்தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிக்கை கடந்த மார்ச் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கு பெண் காவலர்கள் 2,465 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு ஆண் காவலர்கள் 5,962 பேர், இரண்டாம் நிலை சிறை காவலர்கள் (ஆண்கள் 186, பெண்கள் 22) 208 பேர், தீயணைப்பாளர் (ஆண்கள்) 191 பேர் என மொத்தம் 8,826 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வுக்கு 4.25 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இவர்கள் உடனடியாக தனியார் பயிற்சி நிலையங்களிலும், அரசு சார்பில் நூலகங்களில் செயல்படும் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து இரவு பகலாக படித்து வருகின்றனர். ஜூலை 14-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால், அன்று தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது, ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மைய நிறுவனர் எஸ்.பேச்சிமுத்து கூறும்போது, ``தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படாத தால் இளைஞர்கள் சோர்வடைந் துள்ளனர். 3 மாதங்கள் வரை பயிற்சி பெற்ற பலர், தங்களது பயிற்சிகளை கைவிட்டு பிற வேலைகளுக்கு சென்றுவிட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் கேட்டால் முறையான பதில் இல்லை. தேர்வுக்கான தேதியை உடனடியாக வெளியிட வேண்டும். தேர்வு அறிவிக்கை வெளியிடும்போதே தேர்வு தேதியையும் வெளியிட்டால் மாணவர்கள் பயனடைவர்” என்றார் . தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்த போது, “காவலர் எழுத் துத் தேர்வு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கான ஏற்பாடு களை செய்யுமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தில் இருந்து சுற்றறிக்கை வந்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விரைவில் அறிவிப்பு வரும்” என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘படிக்கும் காலத்தில் ஹீரோ.. இப்போது ஜீரோ’ எதிர்காலத்தை தொலைத்த முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்கள் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பு

கல்லூரியில் படிக்கும் காலத்தில் அடிதடி, ரகளை, மோதலில் ஈடுபட்டு எதிர்காலத்தை இழந்த முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களின் இன்றைய நிலையை தொகுத்து போலீஸார் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடி யோவை ஓரிரு நாளில் வெளியிட உள்ளனர். சென்னையில் சில கல்லூரி களின் மாணவர்கள் ஆண்டுதோறும் ‘பஸ் தினம்’ என்ற பெயரில் மாநகரப் பேருந்தை சிறைபிடித்து, மேள தாளங்கள் முழங்க ஆட்டம் போடுவது வழக்கமாக இருந்தது. இதனால், பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஸ் தினத் துக்கு சென்னை காவல் துறை தடை விதித்தது. இந்த சூழலில், பேருந்து, ரயில்களில் எந்த வழித்தடத்தில் (ரூட்) வரும் மாணவர்கள் உயர்ந் தவர்கள் என்பது தொடர்பாக மாண வர்கள் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் எல்லை மீறும் மாண வர்களை போலீஸார் கைது செய் தனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக கடந்த 23-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை விரட்டி அரிவாளால் வெட்டினர். பயணிகள், பொதுமக் களை பதறவைத்த இந்த காட்சி வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சென்னை யில் ‘ரூட் தல’ என்ற அடையா ளத்துடன் சுற்றும் 58 மாணவர்களை போலீஸார் கண்டறிந்து, ‘இனி மோதலில் ஈடுபடமாட்டோம்’ என்று அவர்களிடம் பிரமாணப் பத்திரத் தில் எழுதி வாங்கினர். இதற்கிடை யில், தாக்குதலில் ஈடுபட்ட 2 மாண வர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு வந்த இடத்தில் கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டதால், கையில் கட்டு போட்ட நிலையில், அவர்களது புகைப்படமும் வெளியானது. இதையடுத்து, கடந்த சில நாட்க ளாக மாணவர்கள் மிகவும் அமைதி யாக கல்லூரிக்கு சென்று வருகின் றனர். இந்நிலையில், கல்லூரி மாண வர்கள் யாரேனும் ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக் கைகள், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் பற்றிய தகவலை வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டரில் தெரிவிக்கலாம் என்று காவல் துறை அறிவித்து, அதற்கான எண், முகவரியை வெளியிட்டுள்ளது. நந்தனம், பச்சையப்பன், மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரியின் தகவல் பலகைகளிலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி கற்கும் வயதில் மோதலில் ஈடுபட்டால் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை புரியவைக்கவும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களின் தற்போதைய நிலையை ஒரு வீடியோவாக போலீஸார் தயாரித்துள்ளனர். அதில் பேசும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர், ‘‘கல்லூரி காலத்தில் அரிவாளை தூக்குவது கெத்தாக தெரிந்தது. நண்பர்களுடன் சேர்ந்து எதிர் தரப்பினரை தாக்கினோம். இதனால், போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏராளமான அரியர் வைத்தேன். என்னுடன் படித்த மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனர். என் எதிர்காலம் பாழாகிவிட்டது. தற்போது கூலி வேலை செய்கிறேன். அன்று ஹீரோவாக இருந்த நான் இன்று ஜீரோ. எனவே, மாணவர்கள் யாரும் மோதலில் ஈடுபட வேண்டாம். மோதலில் ஈடுபட்டால் எனது நிலைதான் உங்களுக்கும்’’ என்று கூறியுள்ளார். இன்னொரு மாணவர் கூறும் போது, ‘‘நானும் ‘ரூட் தல’யாக இருந்து, அடிதடி, மோதல் என்று ஈடுபட்டவன்தான். பிறகு, அரசு வேலைக்காக விண்ணப்பித்தேன். ஆனால், என் மீது வழக்கு இருந் ததால் அரசு வேலைக்கு போக முடியவில்லை. தனியார் நிறுவனங் கள்கூட வேலைக்கு எடுக்க யோசித்தன. இதனால் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன்’’ என்று அழுதபடி கூறுகிறார். இதுபோல 10-க்கும் மேற்பட்ட முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து தங் களது இன்றைய நிலை குறித்து பேட்டி அளித்துள்ளனர். அவர்களது முகத்தை மறைத்து இந்த வீடியோ ஓரிரு நாளில் வெளியிடப் பட உள்ளது. ரகளையில் ஈடுபட்டு, மற்றவர்கள் மத்தியில் தங்களை ஒரு ஹீரோ போல காட்டிக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த வீடியோ நிச்சயம் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று போலீஸார் கூறினர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு  இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும்  தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக் கிள் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இந்நிலை யில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, கடந்த 2017-18-ம் ஆண்டுக் கான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் கணக்கு தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இத்திட்டத்துக்கு 2017-18-ம் ஆண்டில் ரூ.16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டி ருந்தது. இதுதவிர, இந்தாண்டுக் கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்ததே தவிர, நிதி ஒதுக்குவதைப் பற்றிய தகவல்கள் இல்லை. இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதோ என்ற தோற்றத்தை இது ஏற் படுத்தியது. இந்நிலையில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 87,147 சைக்கிள்கள் அரசு, அரசு நிதியுதவி பெறும், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு பொருளா தார உச்சவரம்பின்றி இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து, 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 சைக்கிள்கள் 2018-19-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறைக்கு ரூ.73 கோடி, மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.65 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரம் என ரூ.138 லட்சத்து 48 ஆயிரத்து 11 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ் பிளஸ் 1 பயிலும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் தொடர்ந்து இலவச சைக்கிள் வழங்கப்படும். இத்திட்டம் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிளஸ் 2 ஆங்கில புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம் தமிழக கல்வித் துறை உத்தரவு

பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் தமிழின் தொன்மை குறித்த சர்ச்சை கருத்துகள் இடம்பெற்ற பாடம் முழுவதையும் நீக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 கல்வி ஆண்டுகளாக முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டம் மாற்றப்பட்ட நிலையில், முரண்பாடான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அவ்வப்போது சர்ச்சைகளும் உருவாகி வருகின்றன. இவை தொடர்பாக எதிர்ப்புகள் வரும்போது, கல்வித்துறை அப்பகுதிகளை நீக்குவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 19 பிழைகளை திருத்துவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்த தகவல் வெளியானது. குறிப்பாக, தமிழ் மொழியைவிட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற பொருள்படும்படியான கருத்துகள் அதில் கூறப்பட்டிருந்தது. பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல் எழும்பியது. இதுதொடர்பாக உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். தொடர்ந்து, ஆங்கில பாடப்புத்தக தயாரிப்புக் குழுவில் இருந்த 13 ஆசிரியர் களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘புதிய பாடத்திட்டம் பிளஸ் 2 வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், அலகு 5-ல் ‘தி ஸ்டேட்டஸ் ஆஃப் தமிழ் அஸ் எ கிளாசிக் லாங்குவேஜ்’ என்ற பாடம் முழுவதையும் குறிப்பாக பக்கம் 142 முதல் 150 வரை நீக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மை கல்வி அலுவலர்கள் இதை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 30 July 2019

உதவி சுற்றுலா அலுவலர் பணி


தமிழக அரசின் சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பதவியில் 42 காலியிடங்கள் முதல்முறையாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

தகுதி

இப்பணிக்குச் சுற்றுலா, பயணத்தில் இளங்கலை பட்டப் படிப்பு படித்தவர்களும், ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் சுற்றுலாவில் டிப்ளமா முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதோடு கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.), பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது.

தேர்வுமுறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வுசெய்யப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்தில் இருந்து 200 கேள்விகளும் (300 மதிப்பெண்), பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் (200 மதிப்பெண்) அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 500.

தமிழ்வழிக்கு இட ஒதுக்கீடு

உரிய கல்வித் தகுதி உடைய பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மொத்தக் காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியைத் தமிழ்வழியில் படித்திருந்தால் போதும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீட்டு வாரியான காலியிடங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக்கட்டணம், சம்பளம் தொடர்பான விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம். சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவி சுற்றுலா அலுவலர் பணி அருமையான வாய்ப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த வாரம் செய்திகள்

அழிவின் விளிம்பில் 7,000 புதிய உயிரினங்கள்

ஜூலை 19: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் மேலும் 7,000 உயிரினங்கள் சேர்ந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (IUCN). அத்துடன், ஐ.யு.சி.என். சிவப்புப் பட்டியலில் இருக்கும் 1,05,000 உயிரினங்களில் 27 சதவீதமானவை (28,338 உயிரினங்கள்) அழியும் தறுவாயில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சந்திரயான்-2 விண்கலம் வெற்றி

ஜூலை 22: சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. எம்கே III-எம்1 செயற்கைக்கோளில் ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3,840 கிலோ எடைகொண்ட சந்திரயான்-2 விண்கலத்துடன் ‘ஆர்பிட்டர்’, ‘லேண்டர்’ (விக்ரம்), ‘ரோவர்’ (பிரக்யான்) ஆகிய மூன்று கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 அன்று சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள ‘ரோவர்’ நிலவில் மென்மையாகத் தரையிறங்கவிருக்கிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் மென்மையான தரையிறக்கத்தைச் சாத்தியப்படுத்திய நான்காம் நாடாக இந்தியா திகழும்.

பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஜூலை 24: பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டியதை உறுதிப் படுத்தும் பொறுப்புடன் அவர் பதவியேற்றிருக்கிறார். அவர் தலைமையேற்ற பிறகு, பழைய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சரவையில் பாதிக்கும் மேற்பட்ட புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தகவல் அறியும் சட்டத்திருத்த மசோதா

ஜூலை 25: தகவல் அறியும் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரின் கடுமையான எதிர்ப்புக்கும் வெளிநடப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஜூலை 22 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் சட்டத்தை (2005) முற்றிலும் நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

கர்நாடக முதல்வரானார் எடியூரப்பா

ஜூலை 26: கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி தலைமையில் பதினான்கு மாதங்களாக நடைபெற்றுவந்த காங்கிரஸ்-மதச் சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி ஆட்சி ஜூலை 23 அன்று கவிழ்க்கப்பட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. அதனால், ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் முதல்வராக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா பதவியேற்றார்.

54% பொறியியல் இடங்கள் காலி

ஜூலை 29: தமிழ்நாட்டின் பதினொரு அரசுக் கல்லூரிகள், இரண்டு தனியார் கல்லூரிகளில் மட்டுமே பொறியியல் படிப்புக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்காக (TNEA) நடைபெற்ற நான்கு சுற்று ஆன்லைன் கலந்தாய்வில், 479 பொறியியல் கல்லூரிகளின் 54 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூடச் சேரவில்லை. மொத்தம் இருந்த 1,67,101 பொறியியல் இடங்களில் 76,364 (46%) இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. 90,737 (54%) இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன.

எஸ். ஜெயபால் ரெட்டி மறைவு

ஜூலை 28: முன்னாள் மத்திய அமைச்சரும், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினருமான மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெயபால் ரெட்டி உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார்.

இந்தியாவில் 2,967 புலிகள்

ஜூலை 29: சர்வதேசப் புலிகள் நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ‘புலிகள் கணிப்பு அறிக்கை’யை வெளியிட்டார். இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் இருக்கின்றன. உலகின் 70 சதவீதத்துக்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் வசிக்கின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், நாட்டின் புலிகள் வளர்ச்சி சதவீதம் 8.32 சதவீதமாக இருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புற்றுநோய் பாதித்த அரசு ஊழியர்களுக்கு  கீமோ, ரேடியோ தெரபிக்கு 10 நாள் சிறப்பு விடுப்பு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு 

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அவர்கள் பணிக்காலத்தில் அதிக பட்சமாக 540 நாட்கள் மருத்துவ விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒரே நேரத்தில் அந்த விடுப்புகளை எடுத்துக் கொள்ள அனுமதியில்லை. ஆனால், புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் அதிக நாள் விடுப்பு எடுக்க வேண்டி வரும். இதுதவிர கீமோ தெரபி, ரேடியோ தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது, மருத்துவ விடுப்பு எடுப் பதில் சிரமங்கள் ஏற்படும். இப் பிரச்சினையை தவிர்க்கும் வகை யில், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. சின்னம்மை, விஷக்கடி உள் ளிட்ட சில பிரச்சினைகளுக்கு இது போன்ற குறிப்பிட்ட நாட்கள் சிறப்பு விடுப்புகள் வழங்கப்படுகின்றன. சம்பளத்துடன் விடுப்பு அந்த வகையில், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழக பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத் தத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர் களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன், கீமோ தெரபி மற்றும் ரேடியோ தெரபி கிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாட்கள் சிறப்பு விடுப்பு எடுக்கப்படும்’’ என்றார். இந்நிலையில் இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. இந்த அரசாணை யில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பரிந்துரைப்படி, கீமோ தெரபி அல்லது ரேடியோ தெரபி சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கான 10 நாள் சிறப்பு விடுப்பானது. சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாளுக்கு முந்தைய நாள், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நாள் மற்றும் அந்த சிகிச்சையில் இருந்து முழுமையாக குணம் பெற 8 நாட்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 9 July 2019

TRB TET 2019 PAPER 1,2 OFFICIAL KEY | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடை குறிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I, 08.06.2019 மற்றும் தாள் - II, 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 15.07.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும், கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE