TRB

TNTET

Wednesday, 31 July 2019

பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு  இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும்  தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக் கிள் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இந்நிலை யில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, கடந்த 2017-18-ம் ஆண்டுக் கான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் கணக்கு தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இத்திட்டத்துக்கு 2017-18-ம் ஆண்டில் ரூ.16 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டி ருந்தது. இதுதவிர, இந்தாண்டுக் கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்ததே தவிர, நிதி ஒதுக்குவதைப் பற்றிய தகவல்கள் இல்லை. இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதோ என்ற தோற்றத்தை இது ஏற் படுத்தியது. இந்நிலையில், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 87,147 சைக்கிள்கள் அரசு, அரசு நிதியுதவி பெறும், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவர்களுக்கு பொருளா தார உச்சவரம்பின்றி இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து, 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 சைக்கிள்கள் 2018-19-ம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக பிற்படுத்தப் பட்டோர் நலத்துறைக்கு ரூ.73 கோடி, மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.65 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரம் என ரூ.138 லட்சத்து 48 ஆயிரத்து 11 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ் பிளஸ் 1 பயிலும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் தொடர்ந்து இலவச சைக்கிள் வழங்கப்படும். இத்திட்டம் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments: