TRB

TNTET

Wednesday, 31 July 2019

‘படிக்கும் காலத்தில் ஹீரோ.. இப்போது ஜீரோ’ எதிர்காலத்தை தொலைத்த முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்கள் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ தயாரிப்பு

கல்லூரியில் படிக்கும் காலத்தில் அடிதடி, ரகளை, மோதலில் ஈடுபட்டு எதிர்காலத்தை இழந்த முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களின் இன்றைய நிலையை தொகுத்து போலீஸார் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வீடி யோவை ஓரிரு நாளில் வெளியிட உள்ளனர். சென்னையில் சில கல்லூரி களின் மாணவர்கள் ஆண்டுதோறும் ‘பஸ் தினம்’ என்ற பெயரில் மாநகரப் பேருந்தை சிறைபிடித்து, மேள தாளங்கள் முழங்க ஆட்டம் போடுவது வழக்கமாக இருந்தது. இதனால், பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஸ் தினத் துக்கு சென்னை காவல் துறை தடை விதித்தது. இந்த சூழலில், பேருந்து, ரயில்களில் எந்த வழித்தடத்தில் (ரூட்) வரும் மாணவர்கள் உயர்ந் தவர்கள் என்பது தொடர்பாக மாண வர்கள் இடையே மோதல் ஏற்பட் டது. இதில் எல்லை மீறும் மாண வர்களை போலீஸார் கைது செய் தனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக கடந்த 23-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை விரட்டி அரிவாளால் வெட்டினர். பயணிகள், பொதுமக் களை பதறவைத்த இந்த காட்சி வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, சென்னை யில் ‘ரூட் தல’ என்ற அடையா ளத்துடன் சுற்றும் 58 மாணவர்களை போலீஸார் கண்டறிந்து, ‘இனி மோதலில் ஈடுபடமாட்டோம்’ என்று அவர்களிடம் பிரமாணப் பத்திரத் தில் எழுதி வாங்கினர். இதற்கிடை யில், தாக்குதலில் ஈடுபட்ட 2 மாண வர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு வந்த இடத்தில் கீழே விழுந்து கையை முறித்துக் கொண்டதால், கையில் கட்டு போட்ட நிலையில், அவர்களது புகைப்படமும் வெளியானது. இதையடுத்து, கடந்த சில நாட்க ளாக மாணவர்கள் மிகவும் அமைதி யாக கல்லூரிக்கு சென்று வருகின் றனர். இந்நிலையில், கல்லூரி மாண வர்கள் யாரேனும் ‘ரூட் தல’ என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக் கைகள், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் பற்றிய தகவலை வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டரில் தெரிவிக்கலாம் என்று காவல் துறை அறிவித்து, அதற்கான எண், முகவரியை வெளியிட்டுள்ளது. நந்தனம், பச்சையப்பன், மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரியின் தகவல் பலகைகளிலும் இந்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி கற்கும் வயதில் மோதலில் ஈடுபட்டால் எதிர்காலம் என்ன ஆகும் என்பதை புரியவைக்கவும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்களின் தற்போதைய நிலையை ஒரு வீடியோவாக போலீஸார் தயாரித்துள்ளனர். அதில் பேசும் முன்னாள் ‘ரூட் தல’ மாணவர் ஒருவர், ‘‘கல்லூரி காலத்தில் அரிவாளை தூக்குவது கெத்தாக தெரிந்தது. நண்பர்களுடன் சேர்ந்து எதிர் தரப்பினரை தாக்கினோம். இதனால், போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏராளமான அரியர் வைத்தேன். என்னுடன் படித்த மாணவர்கள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளனர். என் எதிர்காலம் பாழாகிவிட்டது. தற்போது கூலி வேலை செய்கிறேன். அன்று ஹீரோவாக இருந்த நான் இன்று ஜீரோ. எனவே, மாணவர்கள் யாரும் மோதலில் ஈடுபட வேண்டாம். மோதலில் ஈடுபட்டால் எனது நிலைதான் உங்களுக்கும்’’ என்று கூறியுள்ளார். இன்னொரு மாணவர் கூறும் போது, ‘‘நானும் ‘ரூட் தல’யாக இருந்து, அடிதடி, மோதல் என்று ஈடுபட்டவன்தான். பிறகு, அரசு வேலைக்காக விண்ணப்பித்தேன். ஆனால், என் மீது வழக்கு இருந் ததால் அரசு வேலைக்கு போக முடியவில்லை. தனியார் நிறுவனங் கள்கூட வேலைக்கு எடுக்க யோசித்தன. இதனால் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன்’’ என்று அழுதபடி கூறுகிறார். இதுபோல 10-க்கும் மேற்பட்ட முன்னாள் ‘ரூட் தல’ மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து தங் களது இன்றைய நிலை குறித்து பேட்டி அளித்துள்ளனர். அவர்களது முகத்தை மறைத்து இந்த வீடியோ ஓரிரு நாளில் வெளியிடப் பட உள்ளது. ரகளையில் ஈடுபட்டு, மற்றவர்கள் மத்தியில் தங்களை ஒரு ஹீரோ போல காட்டிக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த வீடியோ நிச்சயம் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று போலீஸார் கூறினர்.

No comments: