TRB

TNTET

Tuesday, 27 August 2019

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER II | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006 பத்திரிகைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 09.06.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 316 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 243 பேர் மற்றும் ஆண்கள் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தேர்வர்கள் 26.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. 


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது.

TNTET - 2019 - SCORE CARD FOR PAPER I | தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006. பத்திரிக்கைச் செய்தி ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு 08.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 20.08.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 551 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் 410 பேர் மற்றும் ஆண்கள் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல் (Score Card) இன்று வெளியிடப்படவுள்ளது. அதனைத் தேர்வர்கள் 22.09.2019 வரை பதிவிறக்கம் செய்திடலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 23 August 2019

16 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு 1-ந்தேதி தேர்வு நடக்கிறது

16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4-ல் அடங்கிய 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு வருகிற 1-ந்தேதி தமிழ்நாட்டின் 301 தாலுகா மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) www.tnps-c-ex-ams.net மற்றும் www.tnps-c-ex-ams.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதியினை உள்ளடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கிடைக்கப்பெறாதவர்கள்... சரியான முறையில் விண்ணப்பங்களை பதிவுசெய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100 செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன், பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (வங்கி அல்லது அஞ்சலகம்), முகவரி ஆகியவற்றை co-nt-a-ctt-n-psc@gm-a-il.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பின்பு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது co-nt-a-ctt-n-psc@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 15 August 2019

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 4 August 2019

2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உடுமலை அமராவதி சைனிக் பள்ளியில் ஜன.5-ல் அகில இந்திய நுழைவுத் தேர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி சைனிக் பள்ளி யில், 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜனவரி 5-ம் தேதி அகில இந்திய நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் நேற்று வெளியிட்டு அறிக்கை:

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தி வரும் அமரா வதி சைனிக் பள்ளியில் 2020-21-ம் கல்வி ஆண்டில் 6 மற்றும் 9- ம் வகுப் புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு 2020 ஜனவரி 5-ம் தேதி நடைபெறும். 9-ம் வகுப்புக்கு ஆங்கில மொழியி லும், 6-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கி லம், இந்தி ஆகிய மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படும்.

6-ம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர், 2020 மார்ச் 31-ம் தேதி யன்று 10 முதல் 12 வயதுக்கு (1.4.2008 முதல் 31.3.2010-க்குள் பிறந்தவராக) உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப் பட்ட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

9-ம் வகுப்பில் சேர 2020 மார்ச் 31-ம் தேதியன்று 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவராக (1.4.2005 முதல் 31.3.2007-க்குள் பிறந்தவராக) இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் சட்ட விதிகளின்படி, ஆண்டுக்கு ரூ.50,000 வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 6-வகுப் புக்கு 90, 9-ம் வகுப்புக்கு 6 இடங் களும் நுழைவுத் தேர்வு மூலமாக நிரப்பப்படும். ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.

9-ம் வகுப்புக்கு உடுமலை, புதுச்சேரி, சென்னையில் தேர்வு நடைபெறும். 6-ம் வகுப்புக்கு உடுமலை அமராவதி நகர் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடைபெறும்.

பொதுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.400, பட்டியல் இனத்த வர் ரூ.250 செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆக.5- முதல் செப்.23-க் குள் பதிவேற்ற வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சியில் சேர மாணவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்தபட்ச காலஅவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உட்பட உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வு களுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 412 மையங்களில், ‘ஸ்பீடு’ என்ற தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

எனினும், அரசின் மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்களில் மிகவும் குறைந்த நபர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களிலும் ஒரு சிலருக்கே மருத்துவக் கல்லுாரிகளில் சேர இடம் கிடைப்பதால் அரசு பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து நடப்பு ஆண்டு போட்டித்தேர்வுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்களை கல்வித் துறை செய்துள்ளது. முதல் கட்டமாக பயிற்சி மையங்களின் எண்ணிக்கை 412-ல் இருந்து 506 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசின் இலவச பயிற்சிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்பு களுக்கு தேர்வான மாணவர் களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி அவரவர் பள்ளிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கான வினாக்கள் விடைக்குறிப்புடன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தகுதித்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-க்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

தொடர்ந்து மாணவர்களை திறம்பட தயார் செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் வாரந் தோறும் வெள்ளிக்கிழமை குறுந் தேர்வு நடத்தப்படும். இதற்கான வினாத்தாள், விடைக்குறிப்புகள் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தபட்ட பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலம் வினாத் தாள்களை அனுப்ப வேண்டும்.

குறுந்தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுத லாம். நடப்பு கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் குறுந்தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இதுகுறித்த அறி வுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசின் பயிற்சிக்கு தகுதியற்ற மாணவர்கள் அதிக அளவில் வந்துவிடுவதால் அதன் நோக்கம் சிதைபட்டு வருகிறது. பள்ளிகளும் திறமையுள்ள மாண வர்களைத் தேர்வுசெய்து அனுப்பு வதில் சுணக்கம் காட்டுகின்றன.

இதைத் தவிர்க்கவே தகுதித் தேர்வு முறையை அமல்படுத்தி உள்ளோம். அதன்படி தகுதித்தேர் வில் வட்டார அளவில் முன்னி லையில் உள்ள 50 மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப் படும். இவர்களுக்கு வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இதற்கான வினாத்தாள்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்யும். ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் பயிற்சி தொடங்கும்’’ என்றனர்.

இதற்கிடையே மதுரை உட்பட சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 7-ம் தேதி பருவத்தேர்வுகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், கல்வித் துறையின் இந்த முயற்சியால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் திடீரென சில நாட்களுக்கு முன் தேர்வு அறிவிப்பை வெளியிடு வது ஏற்புடையதல்ல. வினாத்தாள் முறை, பாடப்பகுதி குறித்த தகவல் களும் வழங்கவில்லை. எனவே, குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கி தேர்வை நடத்த கல்வித் துறை முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஐடிஐகளில் சேர ஆக.20-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அளவில் தொழிற் பயிற்சி நிலையங்களின் (ஐடிஐ) தரத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தேசிய அளவில் நடத் தப்பட்ட தர நிர்ணயத் திட்டத் தில், சிறந்த தரம் உடையதாக 120 ஐடிஐகள் தேர்வு செய்யப் பட்டன. இதில் அதிகபட்சமாக, தமிழகத்தை சேர்ந்த 40 ஐடிஐகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு ஐடிஐகள் பெற்றுள்ளன. இன்றைய காலகட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப சில அரசு ஐடிஐகளில் நவீன தொழிற்பிரிவு கள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர, அரசு ஐடிஐகளில் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் நிறுவனங்களுக்கு அனுப்பி, இலவச பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப் பிறகு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. இந்த ஆண்டில் அரசு ஐடிஐ களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் ஐடிஐ மற்றும் தனியார் ஐடிஐகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 37,097 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட கலந்தாய்வு மூலம் முதல் கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. இதன் முடிவில் அரசு ஐடிஐ களில் 7,840 இடங்களும், தனியார் ஐடிஐகளில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 2-ம் தேதிமுதல் இணையதளம் (www.skilltraining.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்டஇனத்த வருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படாவிட் டால், மாற்று இனத்தவரைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு ஐடிஐகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 2 August 2019

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 25 நகரங்களில்  குரூப்-4 பணிகளுக்கான இலவச மாதிரி தேர்வு

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழகத்தில் 25 நகரங்களில் ஆக. 25-ல் நடைபெறும் குரூப்-4 மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட அரசுப் பணி களில் உள்ள 6,491 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 தேர்வு வரும் செப். 1-ம் தேதி நடை பெறவுள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு சென்னை (அண்ணாநகர், அடையாறு), காஞ் சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, நாகப்பட் டினம், மதுரை, விருதுநகர், திரு நெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 25 நகரங்களில் வரும் ஆக.25-ம் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்வை எழுதி பயன்பெற விரும்புவோர் www.shankariasacademy.com, www.tnpscthervupettagam.com என்ற இணையதளங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 766677 66266, 044-43533445, 45543082 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய பாடத்திட்ட தவறுகளை களைய தனி குழு பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

புதிய பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள தவறுகளைக் கண்ட றிந்து சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத் துள்ளன, அதேநேரம் புதிய பாடப் புத்தகங்களில் பல்வேறு பிழைகள் உள்ளன. அவற்றை உடனே திருத் தம் செய்ய வேண்டுமென கல்வி யாளர்கள், ஆசிரியர்கள் வலியு றுத்தி வருகின்றனர். அந்தவகையில் புதிய பாடத் திட்டத்தில் இதுவரை 21 பிழைகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திருத்தம் செய் துள்ளது. மேலும், புதிய பாடத் திட் டத்தில் இருக்கும் குறைகளைக் களைவதற்காக பிரத்யேக குழுவை கல்வித் துறை அமைத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாடப் புத்தகங்களில் உள்ள தவறுகளை சரிசெய்து மாணவர் கள் எளிதில் பாடங்களைப் படிக்க ஏதுவாக கடினமான பகுதிகளை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 32 ஆசிரியர் பயிற்சி நிறுவனங் களில் பணிபுரியும் விரிவுரையா ளர்கள் தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்கள், ஆசிரியர்களி டம் புதிய பாடப் புத்தகங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். அப்போது கூறப்படும் பாடப் புத்தகத்தில் உள்ள பிழைகள், கடினமான பகுதிகள், முரண்பட்ட கருத்துகள் என திருத்தப்பட வேண்டிய பகுதிகளை விரி வாகக் குறிப்பிட்டு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை குழு வினர் ஆய்வு செய்து தேவை யான கருத்துகள் திருத்தம் செய் யப்படும்’’ என்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 1 August 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 5% அகவிலைப் படி உயர்வு

5% அகவிலைப் படி உயர்கிறது! அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது. தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது. அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும். மத்திய அரசு அரசாணை வெளியிட்ட பின், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும் எனத் தெரிகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் மூன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இணையதளங்களில்... மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சிடெட்) ஜூலை 7-ம் தேதி நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,942 மையங்களில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-1) 13 லட்சத்து 59 ஆயிரத்து 478 பேர் எழு தினர். பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (தாள்-2) 10 லட்சத்து 17 ஆயிரத்து 553 பேர் எழு தினர். தேர்வு முடிவுகள் பின்வரும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. www.ctet.nic.in www.cbse.nic.in முதல் தாளில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 658 பேரும் 2-வது தாளில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 172 பேரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 51 ஆயிரத்து 830 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் டிஜிலாக்கரில் (Digilocker) பதிவேற்றம் செய்யப் படும். அதிலிருந்து சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லாக்-இன், பாஸ்வேர்டு விவரங்கள் தேர்வர்களின் செல்போன் எண்ணுக்கு எம்எஸ்எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சி-டெட் தகுதித்தேர்வின் முடிவு கள் தேர்வு முடிந்த 23 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சிக் கான குறைந்தபட்ச மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 90. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி) 82 மதிப் பெண் ஆகும். இத்தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சிடெட் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

POSTAL EXAM 2019 | ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

அஞ்சல் துறை எழுத்தர் மற்றும் ஏற்கெனவே பதவியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மத்திய தொலை தொடர்பு துறை கடந்த மாதம் 11-ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், இனி அஞ்சல் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் அவசர வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கி யது. ஆனால், தேர்வு முடிவுகளை வௌியிட தடை விதித்தது. இதையடுத்து, அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது. இந்நிலை யில் அரசியல் கட்சிகளின் எதிர்ப் பால் மத்திய அரசு இத்தேர்வை ரத்து செய்தது. மறுதேர்வு உள் ளூர் மொழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப் பட்ட தேர்வு வரும் செப்.15-ம் தேதி நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், தபால்காரர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் செப்.15-ம் தேதி தேர்வு நடைபெறும். இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இத்தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர உள்ளூர் மொழிகளில் கேள்வித்தாள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE