TRB

TNTET

Sunday, 27 October 2019

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உடற்கல்வி உள்பட 17 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகிய 2,144 பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இதற்கான தேர்வு கடந்த மாதம் 27, 28 மற்றும் 29-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 594 பேர் எழுதினர். தேர்வு எழுதியவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 18 மற்றும் 21-ந்தேதிகளில் வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலுக்கான அறிவிப்பை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 2 ஆயிரத்து 144 பணியிடங்களுக்கு சுமார் 3 ஆயிரத்து 824 பேர் தகுதி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட உள்ளனர்.

அதாவது, ஒரு பதவிக்கு 2 பேர் என்ற வீதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் உடனுக்குடன் தேர்வை நடத்தி, அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கும் பட்டியலை அறிவித்து இருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்படும். அதன்பிறகு கலந்தாய்வு மூலம் பணிகள் நிரப்பப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 24 October 2019

பேராசிரியர் காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு காலிப் பணியிடங்களை நிரப்பாத கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் தரமான உயர்கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை யுஜிசி எடுத்து வருகிறது. அதற்காக, பேராசிரியர் பணியிடத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை யுஜிசி அண்மையில் மாற்றியமைத்தது.

அதன்படி, முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) முடித்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.அடுத்ததாக, பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பவும், அவ்வாறு பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கிய 6 மாத காலத்துக்குள்ளாக முடிக்க வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியிருந்தது. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பேராசிரியர் காலிப் பணியிட விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு யுஜிசி அண்மையில் அறிவுறுத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இப்போது, பேராசிரியர் காலிப் பணியிடங்களை உரிய தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தகுதியுள்ள பேராசிரியர்களின் பற்றாக்குறை உயர் கல்வி நிறுவனங்களின் நிலையை மிகவும் மோசமடையச் செய்துள்ளது.

எனவே, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உடனடித் தேவையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை www.ugc.ac.in/uamp என்ற பல்கலைக்கழக நடவடிக்கை கண்காணிப்பு இணையதளத்தில் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அவ்வாறின்றி, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தாமதப்படுத்தும் உயர் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் யுஜிசி எச்சரித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு இல்லை: சிபிஎஸ்இ

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும், 9, 11-ம் வகுப்புகளுக்கு ஆண்டுத்தேர்வும் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட அடிப்படையில் நடைபெறும் என்று வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யாம் பரத்வாஜ், பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் என்சிஇஆர்டி பாடங்களின் அடிப்படையில் நடைபெறாது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் படியே நடைபெறும். எனவே, தவறான தகவல்களை மாண வர்கள் நம்ப வேண்டாம். மேலும், தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்டமும் (www.cbse.nic.in) இணைய தளத்தில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 23 October 2019

காதலிக்கிறார்களா.? "கண்காணியுங்க" பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு சுற்றைக்கை ..!! தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் முதன்மைச் செயலாளர் பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். சட்டம் ஒழுங்கு முதன்மைச் செயலாளரின் இந்த பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பள்ளி கல்வித்துறையின் செயலாளர் வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அந்த சுற்றிக்கையில் , பள்ளி கல்லூரிகளில் இந்து அமைப்புகளைச் சார்ந்தவர்கள் , மாணவர்கள் குழுவாக ஒன்றிணைந்து இந்து சித்தாந்தம் , இந்துமத தலைவர்களைப் பற்றிய விவரங்களை சொல்லி கொடுப்பதாகவும் , இந்து சாஸ்திரங்கள் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் கல்லூரிகளை பொருத்தவரை பிற மதத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்து மாணவிகளை காதலிக்கிறார்களா ? என்பதை கண்டறியவும் இந்து அமைப்பு மாணவ குழுக்கள் செயல்படுவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கை பள்ளி கல்லூரிகளில் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து அதை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சங்கங்கள் கலைக்கபடும்: அமைச்சர் செங்கோட்டையன்

எச்சரிக்கை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருவதாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைக்கு அதிக புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, 'மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில் விளையாட்டு பிரிவில் திறமையில்லாத மாணவர்கள் சங்கங்கள் மூலமாக சேர்வதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்நிகழ்வு தொடர்ந்தால் சங்கங்கள் கலைக்கப்படுவதற்கு சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைச்சரின் அறிவிப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்,.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PG TRB Total analysis Economics very very difficult

PG TRB Total analysis - Economics very very difficult
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை 

தமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட அரசா ணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து அலு வலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட வேண் டும். மேலும், ஞாயிற்றுக்கிழமை களுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப் படும். அடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற் றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. புனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட் கள் விடுமுறை அமைந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 22 October 2019

தனியார் கல்வி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுமுறை கேரள அரசு அறிவிப்பு

நாட்டிலேயே முதல் முறையாக, தனியார் கல்வி துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம்மகப்பேறு கால விடுமுறை அளிக்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. - மத்திய அரசு கொண்டு வந்த மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின்படி, அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரம் மகப்பேறு கால விடுமுறை ஊதியத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை தனியார் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரி யைகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கும் வழங்கும் வகை யில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க கேரள சட்டப் பேரவை யில் கடந்தமாதம் 29-ஆம் தேதிதீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, தனியார் கல்வி துறையில் பணியாற் றும் பெண்கள், ஆசிரியைகளுக் கும் மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின் சலுகைகள் நீட்டிக்கப் படுகின்றன. இதுதொடர்பாக கேரள அரசு வெளியிட்ட வியாழக்கிழமை அறி விக்கையில் கூறப்பட்டுள்ளதா தனியார் கல்வி துறை மற்றும் முறைசாரா பள்ளிக்கல்வி துறைக ளில் பணியாற்றும் பெண்கள், அசி ரியைகளுக்கு மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தின் சலுகை களை அளிப்பதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்ததை படுத்து இந்தச் சட்டம் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. மகப்பேறு காலப் பலன்கள் சட்டத்தை, தனியார் கல்வி துறைப் பணியாளர்களுக்கு நீட்டிக்கும் முதல் மாநிலம் கேரளம் ஆகும். மேலும், கர்ப்பிணிகளின் மருத்துவச்செலவுகளுக்காக, அவர்கள் பணியாற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் ரூ. 1000 வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் கலந்தாய்வு: வழக்குத் தொடுத்த ஆசிரியர் விவரங்களை 'எமிஸ்' தளத்தில் வெளியிட அறிவுறுத்தல்

ழக்குத் தொடுத்த ஆசிரியர்கள், கலந் தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை ('எமிஸ்') இணையதளத்தில் பதி வேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் படி நடப்பாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டும் இட மாறுதல் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இதை தளர்த்தக் கோரி நூற்றுக்க ணக்கான ஆசிரியர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் கலந்தாய்வு நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியி ருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வை நடத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதையேற்று வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு இதை தவறை அம் என இட மட்டும் விதியை தளர்த்தி திருத் தப்பட்ட வழிகாட்டு நெறிமுறை களை கடந்த அக்.4-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதில், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் குறைந்தது 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப் பட்டது. இதையடுத்து வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங் கேற்க ஏதுவாக அவர்களின் விவ ரங்களை கல்வி மேலாண்மை தக வல் முகமை ('எமிஸ்') இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண் ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள் ளார்.

இதுதவிர, ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்சிஇஆர்டி முறையில் தேர்வு இல்லை சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங் களை அடிப்படையாக கொண்டு நடக்காது. சிபி எஸ்இ பாடத்திட்டத் தின்படி தான் நடக்கும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் -. தேர்வும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வும் நடக்கி றது.

இந்த தேர்வுகள் என் சிஇஆர்டி தயாரித்துள்ள பாடப் புத்தகங்களை அடிப்படையாக கொண் டுதான் நடக்கும் என்று நாடு முழுவதும் வதந்தி பரவியுள்ளது. இதனால் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்போர் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்க தற்போது சிபிஎஸ்இ தரப்பினர் மாநில வாரியாக விளக் கம் அளித்து வருகின்றனர். அதன்படி மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத் தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. என்சிஇ ஆர்டி பாடங்களின்படி நடக்காது என்றும் தெரி வித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் இது போன்ற குழப்ப நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ, அனைத்து இணைப்பு பெற்றுள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் பதி வேற்றம் செய்துள்ளது.

இந்த பாடத்திட்டத்தை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண் டும் என்றும் தெரிவித்துள் ளது. இந்நிலையில், சுற்ற றிக்கை அனுப்புவதற் கான நேரம் இதுவல்ல. பெரும்பாலான பள் ளிகளுக்கு இந்த தகவல் வந்து சேரவில்லை . அது இணையதளத்தில் மட் டுமே உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிர்வாகம் இது போன்ற சுற்றறிக்கைகளையோ அல்லது அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ பள்ளிக ளுக்கு அனுப்புவதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN GOVT ITI RECRUITMENT 2019 | ITI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பணிமனை உதவியாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.

  • TN GOVT ITI RECRUITMENT 2019 | ITI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : பணிமனை உதவியாளர்  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.11.2019.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விலக்கு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

திருவாரூர் பெருகவாழ்ந் தான் அனையடி கிராமத் தில் அமைச்சர் செங்கோட் டையன் அளித்த பேட்டி: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நாடு முழுவதும் மத்திய அரசால் அமல்ப டுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் அதனை பின்பற்றி இந்த ஆண்டே பொதுத் தேர்வை கொண்டு வந்துள்ளது.

அந்த திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு பெறப்பட்டுள்ளது.மத்திய அரசின் திட் டம் குறித்து தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், மக்கள் மற்றும் பெற்றோர்க ளின் கருத்து கேட்கப்பட்ட பிறகு தான் அந்த திட்டம் அமல்படுத்தப்படும். 11 மற் றும் 12ம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய் யப்படு வார்கள். தமிழக மாணவர்களின் எதிர்கா லம் பிரகாசமாக அமைவ தற்கு ஏற்ப பள்ளி கல்வித்துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்பிறகு தஞ்சையில் அமைச்சர் செங்கோட் டை யில் கூறுகையில், *உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளில் வகுப்பறை கள் முழுவதும் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இம்மாத இறுதிக்குள் அளிக்கப்படும். முதல் 8ம் வகுப்பு வரை 7500 பள்ளிகளில் வகுப்புகள் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளாக அடுத்த மாத இறுதிக்குள் மாற்றப்படும்.

90 ஆயிரம் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் கரும்பலகை அகற்றிவிட்டு ஸ்மார்ட் போர்டு வசதி செய்யப்படும். மாணவ மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாக பேச 1000 ஆங்கில வார்த் தைகள் பயிற்றுவிக்கும் பணி விரைவில் தொடங் கப்படும்' என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

11, 12-ம் வகுப்புகளுக்கு கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.

கணினி ஆசிரியர்கள் தேர்வு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜி யின் சகோதரர் கனகசபை சமீபத்தில் உடல் நலக்குறை வால் காலமானார். இதைத்தொடர்ந்து மன்னார்குடி அருகில் பெருகவாழ்ந் தானில் உள்ள அமைச்சர் இரா.காமராஜ் சகோதரர் இல்லத்திற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காலை சென்றார்.

அங்கு மறைந்த கனகசபை குடும்பத்தினர் மற்றும் அமைச்சர் இரா. காமராஜ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இந் தியா முழுவதும் இத்திட்டம் குறித்து மக்கள் மற்றும் கல் வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். 11,12 ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர் பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை.பொதுத் தேர்வு - மூன்று மணி நேரமானது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரத்தை அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இரண்டரை மணி நேரம் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் இனி 3 மணி நேரம் நடத்தப்படும். புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , தேர்வு எழுதும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு எழுதும் நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 500 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் 3 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கேள்விகளை நன்கு புரிந்து மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாளையும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து இன்று சிவகெங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், கோவை, கன்னீயாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் நாளை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளியில் விஜய் திரைப்படம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அரசுப் பள்ளியில் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பள்ளியில் பிரத்யேக வகுப்பறையில் பாடங்கள் தொடர்பான கருத்துகளை வழங்க, கரும்பலகையுடன் கூடிய கணினி திரைகள் (புரஜெக்டர்) அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பாடங்கள் தொடர்பான காட்சிகளை இணைய வழியில் பதிவேற்றம் செய்து கணினி திரையில் ஒளிபரப்பி கற்பித்து வருகின்றனர். இந்த வகையில், திருக்கோவிலூர் அருகேயுள்ள சித்தேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை கணினி வகுப்பறையில் மாணவர்களுக்கு காட்சி ஒளிபரப்பப்பட்டது. அது திரைப்படம் சார்ந்த காட்சிகள் என புகார் எழுந்தது. இதையடுத்து, திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் துரைப்பாண்டியன் அப்பள்ளிக்குச் சென்று விசாரித்தார். சனிக்கிழமை பள்ளிப் பாடவேளை நேரத்தில் பிற்பகல் 3 மணியளவில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்கள் அந்த வகுப்பறையில் அமர்ந்து, விஜய் நடித்த நண்பன் திரைப்படக் காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்தப் பள்ளியில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர் எட்வர்ட்விக்டர்பாபு, அந்த திரைப்படத்தை மாணவர்களுக்கு ஒளிபரப்பி காண்பித்தது தெரிய வந்தது. இது குறித்து, முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் எட்வர்ட்விக்டர்பாபுவை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன் உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம்: தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன. இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரே தேர்வாக அறிவிக்கப்பட் டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு, தற்போது 2 தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர் வின் பகுதி-அ மட்டும் தனித் தாளாக, தகுதித் தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. இது 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாகும். இதில் குறைந்தபட்சம் 25 மதிப் பெண்கள் பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும். மற்றபடி, இத்தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர வரிசை நிர்ணயத்துக்கு கணக்கில் கொள்ளப்படாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பகுதி-அ தவிர்த்த இதர பகுதிகள் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருந் தால் மட்டுமே முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு.

இதுவரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஒவ்வொரு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக ஒருசில பாடங்களுக்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி வரும் நிலையில் இனி நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பாடவாரியாக ஒற்றை நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத அவசியம் இல்லை என்றும் இந்த புதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்திற்கும் எளிதாக இருக்கும் என்றும் மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். ஆனால் நீட் தேர்வை போலவே இந்த நுழைவுத்தேர்வையும் அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொதுமாறுதல் கலந்தாய்வு 2-11-2019-to 08-11-2019 நடைபெற வாய்ப்பு

இந்த ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2-11-2019-to 08-11-2019 நடைபெறலாம் என தெரிகிறது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அமல்

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை ஓரிரு வாரங்களில் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை கடந்த 2017ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை இணையதளத்தில் வெளியிட்டது. இந்நிலையில் இந்த வரைவு திட்டம் தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் அளித்து, வரும் நவம்பர் மாதம் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், வரைவு திட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நவம்பர் மாதத்தின் மத்தியில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு மாநிலங்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் 6 முதல் 12 வரையிலான வகுப்பினர் இந்தியாவின் பழமையான மொழி மற்றும் அதன் இலக்கியங்களை தேர்வு பாடமாக எடுத்து படிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே புதிய கல்வி கொள்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பயிற்சி தேர்வு - கல்வித்துறை அதிர்ச்சி

கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன . இந்த தேர்வுகளில் நான்காயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே தேர்வு எழுதிய 4 ஆயிரம் மாணவர்களில் வெறும் 105 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.  ஆசிரியர் பயிற்சி படிப்பில் மாணவர்கள் சேர்வது குறைந்து வரும் நிலையில், தேர்வு எழுதியவர்களும் சோடைபோவது,  கல்வித்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசு அலுவலக குறிப்பாணையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தி அனுமதித்துள்ளது. மத்திய அரசின் முடிவை பின்பற்றி மாநில அரசு ஓய்வூதியதாரர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் 17 சதவீத அகவிலைப்படி தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தவணை அகவிலைப்படியானது 1.7.2019 முதற்கொண்டு ரொக்கமாக வழங்கப்படும்.

மாநில கணக்காய்வு தலைவரிடம் இருந்து முறையான அனுமதி பெறும் வரை காத்திருக்காமல் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்கலாம்.

அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவிபெறும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுத்துறை-தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில், தொகையை திரும்பப்பெறும் தகுதியுள்ள மற்றும் திருத்தப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்,

1.11.1956 அன்று, தமிழ்நாடு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களின் அதேநாளில் ஓய்வூதியம் பெறுகிற முந்தைய திருவாங்கூர்- கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை பொருந்தும்.

தற்போதைய மற்றும் எதிர் கால குடும்ப ஓய்வூதியர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களை பொறுத்தவரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரிக்கப்படலாம்.

கருணைத்தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்திய, ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப்பை சேர்ந்த பயனாளிகளான இறந்துவிட்ட பணியாளர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.

இந்த ஆணையில் அக விலைப்படி அனுமதித்ததின் காரணமாக அதிகரித்துவிட்ட செலவினம், 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட விதி முறைகளுக்கிணங்க அடுத்து வரும் மாநிலங்களுக்கு இடையே பிரித்துக்கொள்ளத்தக்கது ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அரசாணை வெளியீடு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் 27-ந் தேதிக்கு, அடுத்த நாளும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் அரசு விடுமுறை வருவதால், மக்களிடம், குறிப்பாக அரசு ஊழியர் களிடம் சற்று சோர்வு காணப்பட்டது.

25-ந் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியூர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு, 2 நாட்களிலேயே உடனடியாக பணிக்கு திரும்புவதில் மக்களிடையே மகிழ்ச்சி சற்று குறைவாக இருந்தது.

ஆனால் அந்த சோர்வை மாற்றும் வகையில் அரசாணை ஒன்றை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. பொதுத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

27-ந் தேதியன்று தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

அந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாள் 28-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ந் தேதியன்று (2-ம் சனிக் கிழமை) பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.

இது செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்பட தகுந்த ஏற்பாட்டை செய்யும்படி மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SAEEE-2020 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு 2020 ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள்

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப் படும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு (SAEEE-2020) விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து சத்யபாமா பல் கலை. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.டிஸ். படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் சேர விரும்புபவர்கள் அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வு (SAEEE-2020) மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

SAEEE தேர்வு வரும் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் 40 முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. ஏரோ நாட்டிகல், ஆட்டோமொபைல், பயோமெடிக்கல், பயோடெக்னா லஜி, கெமிக்கல், சிவில், கம்ப் யூட்டர் சயன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கா னிக்கல், இன்டீரியர் டிசைன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட 16 பிரிவுகளில் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு பிளஸ் 2, அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் வரும் 2020 ஏப்ரல்/மே மாதங்களில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதலாம். மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப் பெண் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான மாணவ, மாணவி கள் பல்கலை. நிர்வாக அலுவலகத் தில் விண்ணப்பங்களை பெற்றோ, ஆன்லைன் மூலமோ விண்ணப் பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை நெட் பாங்கிங், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம்.

தேர்வு தொடர்பான மேலும் விவரங்களை www.sathyabama.ac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும் என டிஎன்பிஎஸ்சி தகவல்


குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளில் மாற்றங்களை செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி வெளியிட்டது. 2 தேர்வு களுக்கும் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கட்டாயமாக் கப்பட்டன.

இந்த பாடத்திட்டம், தேர்வுத் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். சில மாற்றங்கள் தேவை என ஒருசிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்த தேர்வாணையம் தேர்வு களுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

முதல்நிலைத் தேர்வுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்ற மும் இல்லை.

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட் டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு, தற்போது 2 தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர் வின் பகுதி-அ மட்டும் தனித் தாளாக, தகுதித் தேர்வாக மாற்றப் பட்டுள்ளது. இது 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாகும். இதில் குறைந்தபட்சம் 25 மதிப் பெண்கள் பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும். மற்றபடி, இத்தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர வரிசை நிர்ணயத்துக்கு கணக்கில் கொள்ளப்படாது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பகுதி-அ தவிர்த்த இதர பகுதிகள் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருந் தால் மட்டுமே முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற சூழ் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் க.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழர் நாகரிகம், பண்பாடு, தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், திருக்குறள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிவில் நீதிபதி பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு 2016-ல் சட்டப் படிப்பை முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டப் படிப்பை 2016-ல் முடித்த அனைவரும் சிவில் நீதிபதி பணிக் கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தை 29-ம் தேதி வரை திறந்து வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ல் சட்டப் படிப்பை முடித்த லட்சுமி, சண்முகப்பிரியா, பத்மாவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக் கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வு நவம்பர் 24-ம் தேதியும், பிரதான தேர்வு 2020 மார்ச் 28, 29 தேதிகளிலும் நடக்க உள்ளன.

அறிவிப்பாணை வெளியிட்ட தேதி யில் இருந்து 3 ஆண்டுக்குள் சட்டப் படிப்பை முடித்த சட்டப் பட்டதாரி களும், 3 ஆண்டு தொழில் அனுபவம் உள்ள வழக்கறிஞர்களும் அக். 9 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

ஆனால், 2016 செப்டம்பர் 9-ம் தேதிக்கு பிறகு சட்டப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப் பிக்க முடிந்தது. அதற்கு முன்பு முடித்த எங்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இது பாகுபாடு காட்டுவதாக உள்ளதால், 2016-ல் படிப்பை முடித்த எங்களையும் தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந் தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி வினீ்த் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

மனுதாரர்கள் மட்டுமின்றி 2016-ல் சட்டப் படிப்பை முடித்த அனைவரும் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க தகுதி யானவர்கள்தான். அவர்களும் விண் ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணையதளம் இன்று (அக்.21) முதல் 29-ம் தேதி வரை திறந்து வைக் கப்பட வேண்டும். இந்த விண்ணப்ப தாரர்கள் 31-ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர் களோடு இவர்களுக்கும் அனுமதிச் சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற் கான போட்டித் தேர்வுகள் கடந்த செப்.27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றன.

154 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இவர் களுக்கான விடைத்தாள்கள் செப்.30-ம் தேதி வெளியாகின.

தமிழ் உள்ளிட்ட 13 பாடங் களுக்கான தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் கடந்த அக்.18-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்நிலையில், கணிதம், வேதி யியல், விலங்கியல், பொருளா தாரம், வரலாறு ஆகிய பாடங் களுக்கான தேர்ச்சி முடிவுகள், மதிப்பெண் பட்டியல்கள், ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் http:// trb.tn.nic.in என்ற இணையதளத் தில் நேற்று வெளியாகியுள்ளன.

தேர்ச்சி பெற்றவர்களுக் கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர் பான அறிவிப்பு தொடர்ந்து வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள் ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 October 2019

CCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.

  • CCI RECRUITMENT 2019 | CCI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.10.2019.
  • இணைய முகவரி : https://cci2019.onlineapplicationform.org
சென்டிரல் சிமெண்டு கழக நிறுவனம் (சி.சி.ஐ.) ஆர்டிசன் டிரெயினி பணிக்கு 60 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ருமென்டேசன், வெல்டர், பிட்டர், மெஷின் டூல் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://cci2019.onlineapplicationform.org என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 25-ந் தேதி யாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

IIT RECRUITMENT 2019 | IIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.

  • IIT RECRUITMENT 2019 | IIT  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
  • இணைய முகவரி : https://www.iitism.ac.in
இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் கீழ் சுரங்க கல்வி நிறுவனமான ‘இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.)’ செயல்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தில் கற்பித்தல் சாராத பணியிடங்களுக்கு 191 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை பதிவாளர், உதவி பதிவாளர், ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிப்ளமோ என்ஜினீயரிங், பட்டதாரிகள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.iitism.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்துகொண்டு, நவம்பர் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CCRAS RECRUITMENT 2019 | CCRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.

  • CCRAS RECRUITMENT 2019 | CCRAS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
  • இணைய முகவரி : http://www.ccras.nic.in
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக சி.சி.ஆர்.ஏ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி அதிகாரி, நூலகர், தகவல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 186 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை http://www.ccras.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 31-ந் தேதியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2019.

  • UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-10-2019.
  • இணைய முகவரி : https://www.upsc.gov.in/
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள 88 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சட்ட அதிகாரி, இணை உதவி இயக்குனர், சிறப்பு மருத்துவ அதிகாரி, தாவரவியல் நிபுணர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பி.இ., பி.டெக் படிப்புகள், சட்ட பட்டப்படிப்பு, முதுநிலை தாவரவியல், தோட்டக்கலை, லைப் சயின்ஸ், வேளாண்மை போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-10-2019-ந் தேதியாகும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.

  • SBI RECRUITMENT 2019 | SBI  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2019.
  • இணைய முகவரி : https://www.sbi.co.in/
முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மார்க்கெட்டிங் மேனேஜர், ரிஸ்க், கம்பளையன்ஸ், கரஸ்பாண்டென்ட் ரிலேசன்ஸ், ஸ்ட்ரேடஜி, சீனியர் எக்சிகியூட்டிவ், அனலிஸ்ட், அக்ரி டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 67 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்சி., சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம். போன்ற படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 6-ந் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.

  • INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.
  • இணைய முகவரி : www.joinindianarmy.gov.in
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்கக்பபட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) பயிற்சி 88,89,90 சேர்க்கையின்படி, மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. பண்டிட் பிரிவில் 118 பேரும், பண்டிட் (கூர்கா) - 7 பேர், கிரந்தி -9 பேர், மவுலவி - 9, மவுலவி (ஷியா) - 1, புத்த துறவி -4, பத்ரி - 4 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 152 பேர் தேர்வு செய்யப்படுகிறார். இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2020 தேதியில் 25 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-10-1986 மற்றும் 30-9-1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி-சான்றுகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல் தகுதியும் அவசியம்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-10-2019-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-11-2019.

  • INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-11-2019.
  • இணைய முகவரி : http://joinindiancoastguard.gov.in/
கடலோர காவல் படையில் 10-ம் வகுப்பு படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (குக்-ஸ்டீவார்ட்)-01/2020 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-4-1998 மற்றும் 31-3-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

10-ம் வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

முக்கியத் தேதி:

இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 8-11-2019

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.

  • MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.
  • இணைய முகவரி : https://www.mrpl.co.in/
மத்திய பெட்ரோலியப் பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்று மங்களூர் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்.). தற்போது இந்த நிறுவனத்தில் செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆபீசர், ஜூனியர் கெமிஸ்ட் டிரெயினி, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் டிரெயினி, டிராப்ட்ஸ்மேன் டிரெயினி, அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிபு வெளியாகி உள்ளது. மொத்தம் 233 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகபட்சமாக டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 201 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிவாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் பணிக்கு அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி, பி.காம், பி.பி.எம்., மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் பணிக்கான முழுமையான தகுதி விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியயோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற நவம்பர் 9-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ISRO RECRUITMENT 2019 | ISRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.

  • ISRO RECRUITMENT 2019 | ISRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.11.2019.
  • இணைய முகவரி : https://www.isro.gov.in/
இஸ்ரோ நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 327 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய நிறுவனம் சுருக்கமாக இஸ்ரோ என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்/என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் (அட்டனாமஸ்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

மொத்தம் 327 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிரிவு வாரியாக பணியிட விவரம்:

எலக்ட்ரானிக்ஸ் - 131 இடங்கள், மெக்கானிக்கல் - 135, கம்ப்யூட்டர் சயின்ஸ் -58, எலக்ட்ரானிக்ஸ் (அட்டனாமஸ்) - 3 இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 4-11-2019-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங்/தொழில்நுட்ப பிரிவில் பி.இ., பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நவம்பர் 4-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு வரும் 2020 ஜனவரி 12-ந்தேதி நடைபெற உள்ளது.

இது பற்றிய விரிவான விவரங்ளுக்கு https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-11-2019. இணைய முகவரி : www.joinindianarmy.nic.in

  • INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-11-2019.
  • இணைய முகவரி : www.joinindianarmy.nic.in

பிளஸ்-2 படித்தவர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி


ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்களை பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்வதுடன், மக்கள் மத்தியில் நல்ல கவுரவத்தையும் உருவாக்கித் தரும் பணிகள் என்பதால் இளைஞர்களும் ராணுவப் பணிகளில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். தற்போது 43-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்43, ஜூலை 2020) பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்த 43-வது நுழைவில் 90 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-1-2001 மற்றும் 1-1-2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

பிளஸ்-2 (10+2 முறையில்) படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதவியல் ஆகிய பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்து இந்தப் பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் வருகிற 13-11-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘14417 எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை’ 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கை:

தலைமை ஆசிரியர்கள் பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் இல வச எண் 14417 குறித்து எடுத் துரைத்து மாணவர்களிடம் விழிப்புணர்வு உருவாக்க வேண் டும். அதன்படி 14417 எண்ணுக்கு வரும் அழைப்புகளில் சந்தேகம், ஆலோசனை குறித்த தீர்வுகளை இலவச உதவி மைய பணி யாளர்களே வழங்குவர்.

14417 எண்ணுக்கு வரும் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புகார்கள், குறைகள், சம்பந்தப் பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) இணையதளம் மூலம் அனுப்பப்படும். தாமதிக்காமல் அதன்மீது தனிக்கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பல்கலை., கல்லூரி தேர்வு முறையில் மாற்றம் செய்ய திட்டம் மாணவர்களின் தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க முடிவு 

இளநிலை பட்டம் பயிலும் மாண வர்களின் தேர்ச்சியை தொடர் கற் றல் மதிப்பீடு அடிப்படையில் நிர் ணயிக்க யுஜிசி முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்திய நாட்டில் 847 பல்கலைக் கழகங்களும் அவற்றின்கீழ் சுமார் 40,000 கல்லூரிகளும் இயங்கு கின்றன. இந்த கல்வி நிறுவனங் களில் ஆண்டுதோறும் சராசரியாக 3.74 கோடி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேருகின்றனர்.

இதற்கிடையே உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் படி இளநிலை பட்டப்படிப்பு பயி லும் மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. மேலும், மனப்பாட முறையை ஒழிக்கும் விதமாக தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கப் படும் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி கள் சிலர் கூறியதாவது:

நாடு முழுவதும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் ஆண்டு இறுதி அல் லது பருவத்தேர்வு முடிவுகளின் படி தற்போது மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தேர்வுக்கு முந்தைய நாட் கள் மட்டும் படித்துவிட்டு குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பெற்று அனேக மாணவர்கள் பட்டங்களை பெறும் நிலையே நிலவுகிறது.

இவ்வாறு முழுமையான கல்வி கற்காமல் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும்போது வேலை வாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நடைமுறையில் உள்ள தேர்வு முறை மாணவர்களிடம் மனப்பாட கற்றலை ஊக்குவிப்பதாக மத்திய அரசின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது.

இதையடுத்து தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர யுஜிசி சார் பில் பேராசிரியர் எம்.எம்.சலூன்கே தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கல்லூரிகளில் தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் மாணவர் கள் தேர்ச்சியை நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி புதிய முறையில் இறுதித்தேர்வுக்கு 30 மதிப்பெண்க ளும், ஆண்டு முழுவதும் மாணவர் கள் மேற்கொள்ளும் திறன் கற்றல் வகை நடவடிக்கைகளுக்கு 70 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்களின்படி மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கப் படும்.

இந்த திறன் கற்றலில் மாணவர்கள் ஒவ்வொரு பாடம் முடிந்தபின்னும் விநாடி வினா, கட்டுரை, குழு விவாதம், செயல் விளக்கக் காட்சிகள், வரைபடம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வடிவ செயல்பாடுகளில் தங்களை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், பாடங்கள் சார்ந்து பேராசிரியர்கள் வழங்கும் பணி களையும் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும். இத்தகைய திறன் கற்றல் செயல்பாடுகளைத் தொகுத்து ஆசிரியர்கள் 70 மதிப் பெண்களுக்கு மதிப்பீடு செய்வார் கள். இதுதவிர பல்கலைக்கழ கங்கள் விரும்பினால் ஆண்டு இறுதித் தேர்வை நிராகரித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு கற்றல் செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ளும் அம்சமும் பரிந் துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தொடர் கற்றல் மதிப்பீடு முறை ஏற்கெனவே கணிசமான தனியார் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது. அவற்றை மேலும் மேம்படுத்தி அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தினால் மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி அடிப்படை கற்றல் மற்றும் கடினமான சூழலில் முடிவு எடுக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யும்.

இந்த பரிந்துரைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. புதிய மாற்றம் தொடக்கத்தில் மாண வர்களுக்கு கடினமாகத் தெரிந் தாலும் அதன்பின் ஆர்வத்துடன் வரவேற்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 20 October 2019

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2019 நடைபெறும் கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகிறது!

ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், அரசாணையில் திருத்தம் செய்து பள்ளிக் கல்வி த்துறை ஆணை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்இதுதவிர, ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும்.கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியா் நியமனம்: தோவுப் பட்டியல் வெளியீடு

அரசுப்பள்ளிகளில் ஓவிய ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான தோவுப் பட்டியலை ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சிறப்பாசிரியா்களுக்கான உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் 1,300 பேரை நியமனம் செய்வதற்கான போட்டித் தோவு 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோவை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். அவா்களில் தகுதி வாய்ந்தவா்களின் பட்டியலை ஆசிரியா் தோவு வாரியம் 2018 அக். 12-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இதுதொடா்பாக தோவா்கள் சிலா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததால் இறுதிப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 18 October 2019

8,462 தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித் துறையின் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 8,462 ஆசிரியர்களுக்கு 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரை 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது. 2011-2012-ம் கல்வியாண்டில் 8,462 ஆசிரியர்களும் தற்காலிகமாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணி முடிவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 3 ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 600 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 700 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  தமிழக அரசு அரசாணை வெளியீடு 

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தை கணக் கிட்டு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாநில அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் முந் தைய ஆண்டு 9 சதவீதமாக இருந்த அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி, 12 சதவீதமாக மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, அந்த ஆணையைப் பின்பற்றி, ஜூலை 1-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படும்.

மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனையின்படி வழங்கப்படும். தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முழுநேர பணி யாளர்கள், முழுநேர அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

குறிப்பாக, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர் கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந் திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங் களில் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.

மேலும், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வரை ஊதியம் பெற் றால் ரூ.50-ம், அதற்கு மேல் ஊதியம் பெற்றால் ரூ.100-ம் இடைக்கால ஊதிய உயர்வாக கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE