TRB

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.

Saturday, 30 November 2019

இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.

  • இந்திய அரசு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஆரோவில்லே பவுண்டேஷன் செயலாளர்  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.12.2019.
  • இணைய முகவரி : www.mhrd.gov.in
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

INDIAN NAVY ENTRANCE TEST - JAN 2021

INDIAN NAVY ENTRANCE TEST - JAN 2021

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக் கல்வி இயக்குநர் இடமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநர் உள்பட 3 உயரதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மு.பழனிச்சாமி, தொடக்கக் கல்வி இயக் குநராகப் பணியிடம் மாற்றப்படுகிறார். அசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் த.உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற் றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக மாற்றப்படுகிறார். நிர்வாக நலன் கருதி இந்த பணிவிடமாறுதல்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : LABORATORY TECHNICIAN GRADE III . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.

  • MRB RECRUITMENT 2019 | MRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : LABORATORY TECHNICIAN GRADE III .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1508 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.12.2019.
  • இணைய முகவரி : www.mrb.tn.gov.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

PERIYAR UNIVERSITY RECRUITMENT 2019 | பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • PERIYAR UNIVERSITY RECRUITMENT 2019 | பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : PROFESSOR
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.12.2019.
  • இணைய முகவரி : www.periyaruniversity.ac.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலபாடத்திட்டத்தில்பயிலும் 5, 8 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட் டுள்ளது. நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை யில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இத னால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, 5 -ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறி வந்தது. இந்தநிலையில் ஐந்து,எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத் தம்மத்திய அரசிதழில் கடந்த பிப் ரவரி 11-ஆம் தேதி வெளியிடப் பட்டது. அதில், நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாண வர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்க ளில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்கா மல், 5 அல்லது 8-ஆம் வகுப்பி லேயே மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் கார ணம் கொண்டும் அவரைப் பள்ளியை விட்டு வெளியில் அனுப்பக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழகத்தில் எதிர்ப்பு: இதையடுத்து, 'தமிழகத்தில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடைநிற்றல் அதிகரிக்கும்' என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். இருப்பினும், அர சிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவ தற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வந்தது. எனினும் 5, 8 வகுப்புக ளுக்கான பொதுத்தேர்வு நடத்தப் படுமா, இல்லையா என்ற குழப் பம் மாணவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டது.  குழப்பம் தீர்ந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநி லப்பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும். அந்தத் தேர்வை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதலாம். அதேவே ளையில், ஏற்கெனவே கூறியபடி தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத்தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 5-ஆம் வகுப் புக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இதேபோன்று, 8-ஆம் வகுப் புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதியு டன் நிறைவடைகிறது. இரண்டு வகுப்புகளும் பொதுத்தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.15 வரை நடைபெறும். இதில் முதல் 15 நிமிஷங்கள் வினாத்தாளை படித்துப் பார்ப்ப தற்கும், மாணவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கும் வழங்கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சைனிக் பள்ளிகளில் சேர மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேரு வதற்காக மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமா னப் படைகளில் உயர்நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற் காக இளம் வயதிலிருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அர சாங்கத்தால் 1961-இல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன.

இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. சைனிக் பள்ளிகளில் 6 மற் றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.31-ஆம் தேதியுடன் முடித்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு வரும் ஜனவரி 5, 2020-இல் நடைபெற உள்ளது. மாணவிகள் 6-ஆம் வகுப்பில் சேர, 10-இல் இருந்து 12வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பில் சேர 13-இல் இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டவயது மார்ச் 31,2020வரை பொருந்தும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400 எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, இணையதளத்தில் www.sainischooladmission.in என்ற முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மாண வர்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப்பள்ளியில், 2018-ஆம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காஞ்சிபுரம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • காஞ்சிபுரம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கணினி இயக்குபவர், வடிவமைப்பாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 13 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.12.2019.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவசப்பயிற்சி: டிச.7-இல் நுழைவுத் தேர்வு

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவசப் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.) மத்தியப் பணியாளர் தேர்வா ணயம் 9276 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை வருகிற மார்ச் மாதம் நடத்தவுள் இத் தேர்வை எழுத விரும்புவோரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பேருக்கு ஃபோக்கஸ் கல்வி அறக்கட்டளை இலவசமாக பயிற்சி அளிக்கவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி சென் னையில் நடைபெறுகிறது. பட்டப்படிப்பு முடித்த 30 வயதுக்குட்பட்டோர் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச்சான்று, கல்விச்சான்றுகளுடன் focuseducationaltrust1996@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக் கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரை, வார இறுதி வகுப்புகளாக சென்னையில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 7010136605,8248951454 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ICDS RECRUITMENT 2019 | ICDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : கணக்கர் , திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0000 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • ICDS RECRUITMENT 2019 | ICDS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கணக்கர் , திட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0000 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • இணைய முகவரி : www.icds.tn.nic.in

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • ICMR RECRUITMENT 2019 | ICMR அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பணி : DRIVER CUM MECHANIC .
  • நேர்முகத்  தேர்வு நடைபெற உள்ள நாள் : 04.12.2019 .
  • இணைய முகவரி : www.nirt.res.in 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சதா சர்வகாலம் சமூகவலைத்தளமே கதி ஆசிரியர்களை கண்காணிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர்களின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி தலை மையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின்கல்வி,அறிவுத்திறன், தகுதி, திறமையை கண்டறிய முடிவதில்லை.

அதே நேரத்தில் பொதுத் தேர்வு குறித்து மாண வர்கள் பயப்பட தேவை இல்லை. தற்போது மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலை யில், கோரிக்கை வைத்தால் மீண்டும் கால நீட்டிப்பு செய்ய முதல்வர் தயாராக உள்ளார். ஆசிரியர்கள் செல் போன்களில் சமூக வலை தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்தும், கல்வியின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதி காரி தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவினர் கல்வியின் தரம், ஆசிரியர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்து வரு கின்றனர். இரண்டு வார காலத்தில் ஆய்வு முடிந்து விடும். அதன்பின், நடவ டிக்கை எடுக்கப்படும். 12ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500ஆடிட்டர் களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

2019-2020ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். 2020- 2021க்குள் ஒருலட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறி னார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • SOUTHERN RAILWAY RECRUITMENT 2019 | SOUTHERN RAILWAY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 21 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.12.2019.
  • இணைய முகவரி : www.rrcmas.in
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10, 12-ஆம் வகுப்பு கேள்வித் தாள்களில் முக்கிய மாற்றங்கள்

சிபிஎஸ்இ அறிவிப்பு இந்த முன்னே விமர்சனம், பருக்கள் எஸ்இ சார்ந்த வரும் 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு கேள்வித் தாள்களில் மாற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. - மாணவர்களிடையே படைப்பு, விமர்சனம், பகுத்தறியும் சிந்தனை களை அதிகரிக்க இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக சிபி எஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோசாம் சார்பில் தில்லியில் நடத்தப்பட்ட பள்ளிக்கல்வி மாநாட்டில் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியது. இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 20 சதவீத கொள் குறி வகை கேள்விகள் மற்றும் படைப்பூக்க சிந்தனையை அடிப்படை யாகக் கொண்டு 10 சதவீதக் கேள்விகள் கேட்கப்படும். 2023-ஆம் ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர் களுக்கான கேள்வித்தாள், படைப்பு விமர்சனம், பகுத்தறியும் சிந்தனை களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் குறைவான வேலைவாய்ப்பு, சொற்பமான அளவி லான மதிப்பு மற்றும் சந்தையின் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றால், தொழிற்கல்விப் படிப்புகளை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்தநிலை மாறவேண்டும். அதேபோல அடிப்படைக் கட்டமைப்பு, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி சார்ந்த நபர்களிடையே பிணைப்பையும் பாலத்தையும் ஏற்படுத்தவேண்டியது அவசியம். பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து அவர் களை சிறந்த வழிகாட்டிகளாகவும் உத்வேகம் அளிப்பவர்களாகவும் மாற்ற வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஆசிரியர் பயிற்சி உள் பட பல்வேறு விஷயங்கள் குறித்து வித்தியாசமான கோணங்களில் சிந்தித்துள்ளது. ஐந்து பிரதான பாடங்களில் தொழிற்கல்வியும் ஓர் அங்கமாக இருக்கவேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அது நல்ல யோசனைதான். ஆனால் அவற்றைச் செயல்படுத்து வதில் நிச்சயம் சவால் இருக்கும். பள்ளிப் பாடத் திட்டங்கள், பாடம் மட்டுமே சார்ந்ததாக இருக்காமல் செயல்முறை சார்ந்தும் இருக்க வேண்டும் என்று அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ECHS POLYCLINIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • ECHS POLYCLINIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

THE INDCOSERVE RECRUITMENT 2019 | THE INDCOSERVE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • THE INDCOSERVE RECRUITMENT 2019 | THE INDCOSERVE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : Advisor .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.12.2019.
  • இணைய முகவரி : www.indcoserve.com 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரும் பலகைகளுக்கு பதிலாக அரசு பள்ளிகளில் 90,000 ஸ்மார்ட் போர்டு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள் ளிகளில் முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டு கள் பொருத்த பள்ளிக்கல் வித்துறை முடிவு செய்துள் ளது. இதற்காக 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அர சுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தும் திட்டத்தை பள்ளிக்கல் வித்துறை கொண்டு வந் துள்ளது. இதனால் கரும் பலகைகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைக்கப் பட்டு ஸ்மார்ட் போர்டு கள் மூலம் மாணவர்க ளுக்கு கற்பிக்க முடியும் என்று பள்ளிக்கல்வித் துறை நம்புகிறது. கடந்த பல ஆண்டுகளாக பள்ளிக ளில் கரும்பலகைகள்தான் வகுப்பறைகளை ஆக்கிர மித்து வந்தன.

ஆனால், அவற்றை நிறம் மாறாமல் பராம ரிப்பதில் பல்வேறு சிக்கல் கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து சிமென்ட் சுவர்கள் அமைத்து அதில் கருப்பு நிற பெயின்ட் அடித்து அதையும் கரும்ப வகை போல பயன்படுத்தி வந்தனர். இவற்றையும் பராமரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிக ளில் கரும்பலகைகள் இருந் தம் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல் வித்துறையின் கீழ் இயங் கும் பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் சுமார் 2 லட்சம் முதல் 4 லட்சம் ஆசிரியர்கள் வரை வகுப்ப றைகளில் கரும்பலகையை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

நாள் தோறும் இவர்கள் பயன்ப டுத்தும் கரும்பலகை நீண்ட காலத்துக்கு பயன் தராமல் போகின்றன. வளர்ந்து வரும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை பள் ளிகளில் வகுப்பறைகளில் புகுத்தவும் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக் கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக, 6029 அரசு உயர் நிலை , மேனிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய் வகங்கள் ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 10 கணினிகளும், ஒரு மேனி லைப் பள்ளிக்கு 20 கணி னிகளும் அதன் இணைப்பு கள், உபகரணங்கள், கம்பி வழி இணைய தொடர்பும் வழங் கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக 520 கோடி வரை நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

அதேபோல, திறன் வகுப்பறைகள் அமைக்க வும் திட்டமிடப்பட்டுள் ளது. அத்துடன் கரும்பல கைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் வகுப்பறைக ளில் பொருத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, 90 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் வாங் குவதற்கு பள்ளிக் கல்வித் துறை முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்காக 7400 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. மொத்தம் எத் தனை பள்ளிகளுக்கு இந்த ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட உள்ளது, எப்படி இந்த போர்டுகளை வாங்க உள்ளனர் என்பன போன்ற விவரங்கள் இன் னும் முடிவாகவில்லை . இருப்பினும், விரைவில் 90 ஆயிரம் போர்டுகள் முதற் கட்டமாக கொள் முதல் செய்ய ஏற்பாடுகள் நடக் கிறது.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வித்துறையில் புதிய ஆணையர் பதவி உருவாக்கம் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறைக்காக புதிய உருவாக்கப்பட்டுள்ள ஆணையர் பதவிக்கான அரசாணை வெளியானது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றின் செயல் பாடுகளை புதிய ஆணை யர் மேற்பார்வையிடுவார். பள்ளிக்கல்வித்துறைக் காக இதுவரை இல்லாத அளவில் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு அதற் கான அறிவிப்பை கடந்த வாரம் அரசு வெளியிட்டது.

பள்ளிக் கல்வித்துறை யின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்காக பிரத்யேக அலுவலகம் ஒன்றைடிபிஐ வளாகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் தயார் செய்துள்ள னர். பள்ளிக் கல்வி இயக்கு நர் அலுவலகத்தில் முன்பு செயல்பட்ட ஆர்எம்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் அலுவலக அறையை தற்போது புதிய ஆணைய ராக நியமிக்கப்பட்டு சிஜி தாமஸ் வைத்யனுக்கு இதுக்கியுள்ளனர். இதைய டுத்து, அவர் டிபிஐ வளாகத்தில் உள்ள மேற்கண்ட அலுவலகத் தில் பொறுப்பேற்பதாக இருந்தது.

ஆனால் தலை மைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதால் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜிதாமஸ் வைத்யனுக் கான பணிகள் குறித்த ஆணையை பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் டுள்ளார். அந்த அரசா ணையில் கூறப்பட்டுள்ள தாவது: பள்ளிக்கல்வித்துறைக் கான புதிய ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள் ளது மேலும், பள்ளிக் கல் வித்துறையில் இந்திய ஆட் சிப் பணியையும் சேர்த்து பலப்படுத்தவும் இந்த பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து ஐஏஎஸ் அதி காரிசிஜி தாமஸ் வைத்யன் புதிய ஆணையராக நியமிககப்படுகிறார். அவர் பள்ளிகளின் செயல்பாடுகள், ஒழுங்கு முறை ஆகியவற்றை கண்காணிப்பார். இதன்படி பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்க கல்வி இயக்க கம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கண்காணிப்பார்.

கல்வி சார்ந்த களப்பணிகளின் மீதான ஆய்வுகள் கருத் துகளையும் தெரிவித்து கல்வியை மேம்படுத்துவும் , அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை செயல்ப டுத்துவதில் குறைகள் இருந்தால் அதை கண்காணிப்பது, கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் மேற்பார்வையிடுதல், அரசின் தொடர்ச்சியான செயல் பாடுகளுக்கு ஏற்ற பணிக ளையும் செய்வார். இவ்வாறு அந்த அரசா ணையில் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அஞ்சல் ஆயுள் காப்பீடு காலாவதியான பாலிசிகளை டிச. 31க்குள் புதுப்பிக்கலாம்

சென்னை பொது அஞ்சலகம் அறிவிப்பு அஞ்சல் ஆயுள் காப்பீடு காலாவதியான பாலிசிகளை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சென்னை பொது அஞ்சலகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு: அரசிதழ் அறிவிப்பின் படி தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவ தியான மற்றும் முதிர்வு அடையாத பிஎல்ஐ, ஆர் பிஎல்ஐ பாலிசிகள் 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி யிலிருந்து புதுப்பிக்க இய லாது மற்றும் அந்த பாலிசிகள் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருமுறை நடவடிக்கையாக தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவதியான பாலிசிகள், கட்டுவதற்கான வாய்ப்பு 2019 டிசம்பர் 31ம் தேதி. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் நல்ல உடல் நி லையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்து டன் சென்னை பொது அஞ்சலகத்தை அணுகவும்.

மேலும் பாலிசி தொடங்கி 36 மாதங்கள் தொடர்ந்து கட்டப்பெறாத பாலிசிகள் காலாவதியாகியிருந்தால் டிசம்பர் 31க்குள் புதுப்பித் தால் மட்டுமே சரண்டர், முதிர்வு போது உரிமை மற்றும் இறப்பிற்கு பிறகு உரிமை ஆகிய பணப்பலன் களை பெற முடியும். காலாவதியான பாலிசிகள் முதிர்வு நாள் முன்னர் மட்டுமே புதுப்பிக்க இயலும். புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம், சென்னை பொது அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தொடர் புக்கு 044- 25212549.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு

மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. இரவு காவலர்கள் நியமிக்கவும், நாப்கின் எந்திரங்கள் பொருத்தவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், எத்தனை அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடக்கின்றன? இந்த பணிகள் எப்போது முடியும்? தலைமை ஆசிரியர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கை அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்களின் வங்கி கணக்கு, பான்கார்டு எண்ணை பதிவு செய்ய வேண்டும் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வி துறை கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) என்ற இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்களின் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், பதிவு செய்யப்பட்டு, அதன்படியே இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. சமீபத்தில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை அதில் தாக்கல் செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

தற்போது அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விவரங்களை பதிவு செய்ய பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வருமானம் ஆகியவை கல்வித்துறையின் கண்காணிப்பு வளையத்தில் வர உள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்பு கவனம் தேவை  மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் 

தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்பு, கல்வி நிறுவனங் கள் முறையாக அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தொலைநிலை மற்றும் திறந்த நிலை கல்வியை ஒழுங்குபடுத் துவதற்காக அதை நிர்வகிக் கும் பொறுப்பு பல்கலைக் கழக மானி யக்குழுவிடம் (யுஜிசி) 2017-ம் ஆண்டு ஒப்படைக் கப்பட்டது.

இதையடுத்து தொலைநிலை கல்விக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டது. அதில் குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளி கள் பெற்றுள்ள கல்வி நிறுவனங் களுக்கு மட்டுமே தொலைநிலை கல்வி நடத்த அனுமதி தரப்படும் என்று யுஜிசி அறிவித்தது.

புதிய கட்டுப்பாடுகளின்படி தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் உட்பட 10 கல்வி நிறு வனங்களுக்கு மட்டுமே தொலை நிலை படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்தது.

இந்நிலையில் யுஜிசி செயலா ளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், “தொலைநிலை படிப்புகளில் சேரும் முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரம் பெற்றதா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் தொலை நிலை படிப்புகளை வழங்க அனு மதிக்கப்பட்ட கல்வி நிறுவனங் களின் பட்டியல் மற்றும் பாடப்பிரிவு கள் விவரம் ஆண்டு வாரியாக ‌www.ugc.ac.in‌deb இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், எம்பில் மற்றும் பிஎச்டி படிப்புகளை தொலை நிலைக்கல்வி முறையில் வழங்க எந்த கல்வி நிறுவனத்துக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, மாணவர்கள் கவனத் துடன் செயல்பட வேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.புதிய கட்டுப்பாடுகளின்படி தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தொலைநிலை படிப்புகளை வழங்க யுஜிசி அனுமதி அளித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு பணிகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள் எவை? பணிபுரிவதற்கு ஏற்ற வகையில் கண்டறியும் நடவடிக்கை தீவிரம்

4 சதவீதம் இடஒதுக்கீட்டை முழு மையாக நிரப்ப அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் பணிபுரி வதற்கு ஏற்ற பணியிடங்களை கண்டறியும் பணியில் மாற்றுத்திற னாளிகள் நலத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை 2016-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி, அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளி களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

சட்டம் நிறைவேற்றப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அரசு வேலைவாய்ப்பில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங் கள்தான் அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது.

இதற்கு, மாற்றுத்திறனாளிகள் பணிபுரிவதற்கு ஏற்ற பணியிடங்கள் எவை என்பது தொடர்பாக அரசு துறைகளுக்கிடையே பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதே காரணம்.

எனவே, இவற்றுக்கு தீர்வு கண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சத வீத இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் அடுத்த ஆண்டுக்குள் அரசு பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் பணிபுரி வதற்கு ஏற்ற பணியிடங்களைக் கண்டறிவதில் நிலவி வந்த சிக்க லால் இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் பணி புரிவதற்கு தகுதியான பணியிடங் களைக் கண்டறிய முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மூலம், அந்தந்த துறைகளில் உள்ள ஏ மற்றும் பி நிலையிலான பணியிடங்களில் தகுதியானவை கண்டறியப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை யில், ஏற்கெனவே மீன்வளத் துறை, வனத் துறை உள்ளிட்ட சில துறைகளில் இருந்து 244 பணி யிடங்கள் கண்டறியப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

தமிழக அரசும் தேர்வு நடத்தி மாற்றுத்திறனாளிகளை பணியமர்த் தியது. இதே போல், தற்போது 250 பணியிடங்கள் கண்டறியப் பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. அதில், எந்தெந்த பணி யிடங்களுக்கு 21 வகையில் எந்த வகையான மாற்றுத்திறனாளியை நியமிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பும் வெளியாகும்.

பணியிடங்கள் கண்டறியப்பட்ட வுடன் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த முடியாது என்று ஏதாவது ஒரு துறை கருதினால் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையிடம் அனுமதி பெற்ற பிறகே வேறு நபர்களை அந்த பணியிடத்துக்கு நியமிக்க முடியும்.

சி மற்றும் டி பிரிவு பணி யிடங்களைப் பொறுத்தவரை 4 சதவீதத்தை முழுமையாக அளிக்க வேண்டும். அடுத்த 6 மாதத்தில் அனைத்து துறைகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் கண்டறியப்பட்டு விடும்.

அதன் பிறகு, சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அனைத்து துறை களிலும் 4 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் மாற்றுத்திறனாளி கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான, பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

549 துப்புரவு பணியிடங்களுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பம்

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவுப் பணியிடங்களுக்கு 5,200 பேர் நேர்காணலில் பங்கேற்றதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் 5-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமின்றி, விண்ணப்பித் தவர்களில் சரிபாதி பேர் பட்டதாரிகளாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டுமின்றி பிசி, எம்பிசி பிரிவினரும் விண்ணப்பித்துள்ளனர்.

‘துப்புரவுப் பணியாளர் வேலைக்குச் சேர்ந்து, பின்னர் கல்வித் தகுதியை வைத்து எழுத்தர், கணினி பராமரிப்பாளர் உள்ளிட்ட அலுவலகப் பணிக்கு மாறிவிடலாம் என்ற எண்ணத்தில், அதிக பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 29 November 2019

Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு

Tamil Nadu Industrial Guidance and Export Promotion Bureau (Nodal agency for investment promotion and facilitation, Govt. of Tamil Nadu) Recruitment Notification - Admin/HR/2/2019 dated 24.11.2019 Recruitment on contract basis on consolidated pay on rolling basis - Applications are invited from eligible candidates for various roles. For detailed notification and terms and conditions keep visiting - www.investingintamilnadu.com .
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், மறுகூட்டலுக்கு வியாழக்கிழமை (நவ. 28) முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள்கள் ஒளிநகல் கோரி அக்.30 முதல் நவ.6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அந்த நாள்களில் விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் ஒளிநகல்களை புதன்கிழமை (நவ.27) முதல் சனிக்கிழமை (நவ.30) வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் மறு கூட்டல் தேவைப்படும் பட்சத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, வியாழக்கி ழமை (நவ. 28) முதல் டிச.3-ஆம் தேதி வரை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நேரடியா கச் செலுத்தி இணையம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். விடைத் தாள்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒருபாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். தேர்வர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தகுதி சார் விளையாட்டு வீரர் ஆட்தேர்வு 2019


மத்திய தொழில் பாதுகாப்பு படையில் தகுதி சார் விளையாட்டு வீரர் ஆட்தேர்வு 2019 மத்திய தொழில் பாதுகாப்பு படையில் விளையாட்டுப்பிரிவு ஒதுக்கீடு -2019 கீழ் தலைமை காவலர் (பொதுப்பணி) தற்காலிக பதவிகளை நிரப்புவதற்காக ஆண் பெண் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2. விளையாட்டுப்பிரிவு ஒதுக்கீடு-2019 கீழ் தலைமை காவலர் (பொதுப்பணி) பதவியின் துறைப்பிரிவுவாரி |காலியிடங்கள் பின்வருமாறு இது அட்தேர்வின் எந்த நேரத்திலும் அல்லது நிலையிலும் கூடலாம் அல்லது குறையலாம். முழு விவரங்களுக்கு 16.11.2019 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ரோஜ்கர் சமாச்சாரில் விளம்பரம் / அறிவிப்பு காணவும் அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படை இணையதளம் அதாவது https://cisfrectt.in/ காணவும்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆண்டுக்கு 10 லட்சம் செலவை தவிர்க்க 5 மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

பள்ளி பராமரிப்பு என்ற பெய ரில் 5 மாணவர்கள் படிக் கும் பள்ளிக்கு ஆண்டுக்கு (10 லட்சம் செலவாவதை தடுக்க பள்ளிகளை கணக் கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளிப்பதற் கான பயிற்சி புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டை யன் வெளியிட்டு பேசிய தாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங் கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்து பள் ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும். 5க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும்.

அந்த பள்ளிகளில் மாண வர்கள் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் வரை செலவாகிறது. பள்ளியின் பராமரிப்பு செலவும் அதிகமாகிறது. அதனால் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் உள்ள பழைய புத்தகங்கள், பயன்படுத்தாத புத்தகங்களை வெளியில் கடைகளில் போடுவதை விட தமிழ்நாடு காகிததாள் உற்பத்தி நிறுவனத்துக்கு அளிக்கலாம். உடைந்து போன பொருட்கள், நாற் காலி, மேசை, உள்ளிட்ட வைகளை சரி செய்து பயன்படுத்த வேண்டும். பழுதான கணினிகளை சரிசெய்து பயன்படுத்துங்கள். இதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்துங்கள். மாண வர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநி லைப் பள்ளிகளில் மாண வர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஆங்கிலத் தில் பேசும் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி தொடங்குவ தற்கு முன்னதாக 15 நிமி டம் இசை, ஓவியம், நடனப் பயிற்சி அளிக்கவும், மாலை நேரத்தில் உடற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன் னாள் மாணவர்கள் உதவி திட்டத்தின் கீழ் இதுவரை ₹125 கோடி நிதி வந்துள் ளது. ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாதத்துக்கு 20 பள்ளிகளையும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 30 பள்ளிகளையும் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் 60 பள்ளிகளையும் தங்கள் வாகனங்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வுப் பணிக்கு செல்லும் போது ஆசிரியர்களை அழைத்து செல்லக்கூடாது.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டை யன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் செய்தால் டிஸ்மிஸ் கிராமப் பகுதிகளை சேர்ந்த பள்ளிகளுக்கும் இணைய வசதி சென்று சேரும் வகையில் தொழில் நுட்பதுறையின் சார்பில் 2400 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் பிப்ரவரிக்குள் பணிகள் முடியும். ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்ச லிங்கில் தனக்கு விரும்பிய இடம் கிடைக்க வில்லை என்ற காரணத்துக்காக ஒரு தலைமை ஆசிரியர்கள் தரையில் விழுந்து புரண்டு அழு கிறார். இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட வேலையை விட்டு நீக்குங்கள்.

புதியதாக தொடங்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது மாணவர்களின் கற்றல் திறனில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டில் முதலிடத்தில் வருவதற்கான முயற்சிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளம் அறிவியலாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விரு துக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித் துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய் திக் குறிப்பு: அறிவியல் நக ரம், 2018 -ஆம் ஆண்டுக் கான 'தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது', 'தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது' மற்றும் 'தமிழ்நாடு வாழ்நாள் அறி வியல் சாதனையாளர் விருது' ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கான முன்மொழிதல் படிவம், விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற் றும் விதிகள் ஆகியவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விருதுக்கு விண் ணப்பிக்க விருப்பமுள்ள அறிவியலாளர்கள் விண் ணப்பப் படிவம், விண் ணப்பிக்க தேவையான அடிப்படை தகுதிகள் மற் றும் விதிகள் பற்றிய விவ ரங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட முன் மொழி தல் படிவம் மற்றும் விண் ணப்பப் படிவத்தை அறி வியல் நகர அலுவலகத் தில் டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 5.30 மணிக் குள் தபால் மூலம் அல்லது நேரில் அளித்திட வேண் டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ள து.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனஅழுத்தம் குறைய பள்ளிகளில் தினமும் ஒரு மணிநேரம் மாணவர்களுக்கு உடற்பயிற்சி கல்வி துறை அறிவிப்பு

உடல் சார்ந்த பயிற்சிகளின் மூலம் உடற்தகுதி மேம்படுவதால், கற்றலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திட முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உடல்சார்ந்த பயிற்சிகள் பள்ளிகள் அளவில் முதலில் கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகிறது. அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத்துக்கு 2 பாடவேளைகள் மட்டும் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகளின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல்சார்ந்த பயிற்சிகள் கொண்டுவரப்படும் பட்சத்தில் பாடச்சுமையின் காரணமான மனஅழுத்தம் குறைந்து கற்றல்திறன் மேம்படும் நிலை ஏற்படும். இதன் மூலம் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பங்கேற்கக்கூடிய உடற்தகுதி மற்றும் ஆர்வம் மாணவர்களுக்கு ஏற்படும்.

ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன்னர் 15 நிமிடமும், மாலை 45 நிமிடமும் என ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். இதனால் மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதோடு, தனித்திறன், ஆளுமை மேம்பாடு, கற்றல் திறன் அதிகரிக்கும்.

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். உடல்சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, நடனம், யோகா, உடற்பயிற்சி ஆகிய அனைத்து அம்சங்களும் இடம்பெற வேண்டும்.

மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்வதற்காகவே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்புகள் வந்த போதிலும், 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடர்பான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 30-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 17-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 30-ந்தேதி - தமிழ், ஏப்ரல் 2-ந்தேதி - ஆங்கிலம், 8-ந்தேதி - கணிதம், 15-ந்தேதி - அறிவியல், 17-ந்தேதி - சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

5-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15-ந்தேதி - தமிழ், 17-ந்தேதி - ஆங்கிலம், 20-ந்தேதி - கணிதம் தேர்வு நடக்கிறது.

ஒவ்வொரு தேர்வும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறுகிறது. இதில் முதல் 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்கும், விடைத்தாளில் சுயவிவரங்களை குறிப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜேஇஇ முதன்மைத் தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு

2021-ம் ஆண்டு முதல் ஜேஇஇ முதன்மைத் தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வரும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ முதன்மைத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தி வருகிறது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு, குஜராத் மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க குஜராத்தி மொழியிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பிற மாநில அரசுகள் தங்கள் மாநில மொழிகளில் ஜேஇஇ தேர்வை நடத்துமாறு எவ்வித கோரிக்கையும் விடுக்காத காரணத்தால்தான் மாநில மொழிகளில் தேர்வை நடத்துவதில்லை என்று கடந்த மாதம் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.

இருப்பினும், மேற்கு வங்க மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2020-ம் ஆண்டில் வங்க மொழியில் தேர்வை நடத்துவது சிரமம் என்பதால், 2021-ம் ஆண்டு முதல் வங்க மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும், வங்க மொழி மட்டு மல்லாது, தமிழ், தெலுங்கு, அஸ்ஸாமிஸ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, ஒடியா, உருது ஆகிய 11 மொழிகளிலும் 2021-ம் ஆண்டு முதல் தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள், அட்டவணை உள் ளிட்டவற்றை முன்கூட்டியே தயாரித்து விட்டதால் உடனடியாக மாநில மொழிகளில் தேர்வு நடத்த இயலாது என்றும், 2021-ம் ஆண்டு முதல் 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், அவரவர் தாய்மொழியிலேயே ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.2020 ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடத்தப்பட உள்ள தேர்வுக்கான வினாத்தாள், அட்டவணை உள்ளிட்டவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்டதால் உடனடியாக மாநில மொழிகளில் தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நாளை (நவம்பர் 30) நடைபெறுகிறது

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பூ.தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவம்பர் 30) சென்னை நந்தனத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

எனவே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துக் கொண்டு பயன்பெற அறிவுறுத்தப் படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரனை 044-24306611, 9487700180 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 28 November 2019

ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர்  பேசிய அவர்; பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என கூறினார். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. விஜயதசமியின் போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.  ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம்.

பெற்றோரோ மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. மாணவர்களுக்கு சிரமம் இருக்கும் வகையில் தேர்வு இருக்காது. மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 கல்லூரிகளுக்கும் தலா ரூ 325 கோடி ஒதுக்கப்படுகிறது.

இதில் மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் மத்திய அரசு சார்பில் 195 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த கல்லூரிகளுடன் சேர்த்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 3 கல்லூரிகள் மூலம் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கெனவே 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்!!

இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அவரது அறிவிப்பு!!

#ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில்
தரையில் படுத்து உருண்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

#முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக நடந்து கொண்டாலே தமிழகம் கல்வியில் முன்னிலை பெற்றுவிடும்.

#₹26.40 கோடி செலவில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை.

#இசை,ஓவியம்,நடன பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

# 5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த நடவடிக்கை.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது" - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்!!

தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லுபடி ஆகாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் தேர்வுக்கு கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்க  ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்ததின் படி, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு மட்டுமே கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படும் என்றும், ஆசிரியர் உள்ளிட்ட உயர்மட்ட பணிகளுக்கு இது பரிசீலிக்கபடுவதில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே புதிய பாட திட்டம், தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளன. புதிய பாட திட்டத்தின் படி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த வரிசையில், அரசு பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்களின் திறன்களை மையப்படுத்தி, கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு சிறப்புபயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பின்லாந்து நாட்டில் இருந்து, நான்கு பேர் குழுவினர், சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்பு, பள்ளி கல்வி இயக்குனரகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வழியாக, பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாக, மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி துறையில், நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பதவியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்.கடந்த வாரம் பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பேற்ற நிலையில், அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம், அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் காலை, 10:00 மணிக்குநடக்கிறது.

இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும், பள்ளி கல்வி துறையின் இயக்குனர்கள், இணை இயக்குநர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பள்ளி கல்வியின் தர மேம்பாடு, புதிய பாட திட்ட பயிற்சி, பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவது, மத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வி துறைக்கு புதிய கட்டடம்!

  • பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, 1.23 லட்சம் சதுர அடியில், புதிய கட்டடம் கட்டும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 
  • இரண்டு மாதங்களில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. 
  • இந்த வளாகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநுால் கழகம், அரசு தேர்வு துறை இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. 
  • இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனரக கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 
  • இதற்காக, டி.பி.ஐ., வளாகத்தில் காலியாக இருந்த, 1.23 லட்சம் சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டது. 
  • அந்த இடத்தில், 40 கோடி ரூபாயில், ஆறு மாடிகள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி, 2018 மார்ச்சில் துவங்கியது. 
  • இந்த கட்டட பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரியில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. 
  • டி.பி.ஐ.,வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடத்தை போல, புதிய கட்டடத்துக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, இறுதி கட்ட பணி நடந்து வருகிறது. 
  • இந்த கட்டடத்தில், பள்ளி கல்வி இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு துறைகளில் 7 லட்சம் காலி பணியிடங்கள் நாடாளுமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 7 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியானது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779 பணியிடங்கள் இருக்கின்றன. இதில் காலி பணியிடங்கள், அந்த இடங்களை நிரப்புதல் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் பல முக்கிய தகவல்கள் அடங்கி உள்ளன. அவை வருமாறு:-

* மத்திய அரசின் மொத்த பணியிடங்கள் 38 லட்சத்து 2 ஆயிரத்து 779. இவற்றில் தற்போது நிரப்பப்பட்டுள்ள இடங்கள் 31 லட்சத்து 18 ஆயிரத்து 956. காலி பணியிடங்கள் சுமார் 7 லட்சம்.

* ஒரு பணியிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் காலியாக இருந்து நிரப்பப்படாமல் இருந்தால் அந்தப் பணியிடம் ஒழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம்.

* பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 2019-20-ம் ஆண்டில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 338 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன்) தொடங்கி இருக்கிறது.

* 2017-18-ம் ஆண்டில், ரெயில்வே அமைச்சகம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 573 பணியிடங்களை நிரப்புதற்காக மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கைகளை வெளியிட்டது. இது குரூப் சி மற்றும் லெவல்-1 பணியிடங்கள் ஆகும். 2018-19-ம் ஆண்டில் மேலும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 138 குரூப் சி மற்றும் லெவல்-1 பணியிடங்களுக்கான மையப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

* தபால் துறையில் 19 ஆயிரத்து 522 பணியிடங்களை நிரப்புதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

மொத்தம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 591 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 58 ஆக குறைக்கப்படுகிறதா என்ற கேள்விக்கும் மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் கொடுத்தார்.

அதில் அவர், மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கூறி உள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைப்பு இல்லை

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பணி யாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது:

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ஆக குறைக் கும் திட்டம் அரசுக்கு இல்லை. மத்திய அரசுப் பணி விதிகளின் கீழ் ஊழியர்கள் திறமைக் குறை வாகவோ, நேர்மைக் குறைவா கவோ இருந்தால் அவர்களை ஓய்வு வயதுக்கு முன்பே பணி யில் இருந்து விலக்க அரசுக்கு முழு உரிமை உண்டு.

அவ்வாறு நீக்கப்படுவதற்கு முன் குறைந்தது 3 மாத நோட்டீஸ் வழங்கப்படும். அல்லது 3 மாத ஊதியம் தரப்பட்டு நீக்கப் படுவார்கள். குரூப் ஏ அல்லது பி பிரிவில் பணியில் உள்ள ஊழியர்கள் 35 வயதுக்கு முன்பே பணியில் சேர்ந்து, அவர்கள் 50 வயதை எட்டியிருந்தால் இந்த விதிகள் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான  கால அளவு 3 மணி நேரமாக நீட்டிப்பு 

  • 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கால அளவை 3 மணி நேரமாக அதிகரித்து கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
  • இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில், ‘‘புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன்கருதி கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்க தேர்வுத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். 
  • இதை பரிசீலனை செய்து 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வின் கால அளவு 2.30-ல் இருந்து 3 மணி நேரமாக நீட்டிக்கப்படுகிறது. 
  • இதற்கேற்ப மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களின் உடல் தகுதியை மேம்படுத்த பள்ளிகளில் தினமும் உடல் சார்ந்த பயிற்சி  பள்ளிக்கல்வித் துறை உத்தரவு 

  • மாணவர்களின் உடல் தகுதியை மேம்படுத்த, காலை வழிபாட்டுக்கு முன் 15 நிமிடம், மாலை 45 நிமிடம் உடல் சார்ந்த பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
  • சென்னை அண்ணா நூற் றாண்டு நூலகத்தில் ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பாடத்திட்ட கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது குறைந்து வருவதாக வும், பெற்றோரே பிள்ளைகள் விளையாடுவதை விரும்புவ தில்லை என்றும் தெரிவித்தார். 
  • இந்த நிலையை மாற்ற பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உடற்கல்வி தொடர்பான சுற்றறிக்கை தயார் செய்யப்பட்டது. 
  • அந்த சுற்றறிக்கையை, ‘சமக்ர சிக்ஷா’ மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது ஒரு வகுப்புக்கு வாரத் துக்கு இரு பாடவேளைகள் மட்டுமே உடற்கல்விக்காக ஒதுக்கப் படுகின்றன. 
  • மாணவ, மாணவி யரின் படிப்பின் ஒரு பகுதியாக அன்றாடம் உடல் சார்ந்த பயிற்சி கள் கொண்டு வரப்பட்டால் பாடச் சுமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் குறைந்து கற்றல் திறன் மேம்படும். 
  • அதனால், ஒவ்வொரு பள்ளி யிலும் காலை வழிபாட்டுக் கூட்டத் துக்கு முன் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். 
  • இதனால், மாணவர்களின் உடற்தகுதி மேம்படுவதுடன், தனித்திறன் ஆளுமை மேம்பட்டு கற்கும் திறனும் அதிகரிக்கும். இதனை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். 
  •  உடல் சார்ந்த பயிற்சிகளில் விளையாட்டு, யோகா, நடனம் என அனைத்தும் இடம்பெற வேண்டும். 
  • அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளை பொறுத்த வரை முழுநேர உடற்கல்வி ஆசிரி யர், உடற்கல்வி இயக்குநர் களை கொண்டு இதை செயல் படுத்தலாம். 
  • அவ்வாறு இல்லாத பள்ளிகளில் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் களை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி  டிசம்பருக்குள் அனுமதி கிடைக்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

  • பள்ளி மாணவர்களுக்கு தொழிற் கல்வி பயிற்சி அளிப்பது தொடர் பாக வரும் டிசம்பர் மாத இறுதியில் அனுமதி கிடைக்கும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். 
  • ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விநாடி வினா போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ தூய எப்பா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. 
  • அதில் 300 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். அதில் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங் கேற்று போட்டியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: 
  • தமிழகத்தில் மொத்த பட்ஜெட் டில் 4-ல் ஒரு பங்கு கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. தற் போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாடத் திட்டம், இந்திய அளவில் சிறப்பானதாக விளங்குகிறது. 
  • இந்தியாவில் பொறியியல் படித்த மாணவர்கள் 80 லட்சம் பேருக்கு வேலை இல்லை. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஜிஎஸ்டி திட்டத்தால், ஆடிட்டர் பணிக்கு 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். 
  • ஆனால் இந்தியாவில் 2 லட்சத்து 82 ஆயிரம் ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளனர். 
  • இந்நிலையில் தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை மூலமாக சார்டர்டு அக்கவுன்டென்ட் படிப்பில் சேர்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் படித்து முடித்து விட்டு வேலை இல்லாத நிலை தமிழகத்தில் இருக்கக்கூடாது. 
  • அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 முடித்தவுடன் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழிற்கல்வி கற்றுத்தரப்படும். 
  • அதற்காக தொழிற்சாலைகளுடன் இணைந்து, அவற்றைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருக்கிறோம். 
  • இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். 
  • டிசம்பர் மாத இறுதியில் உரிய அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. ஹூண்டாய் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியிலிருந்து அதிக அளவில் கல்வி தொடர்பான திட்டங் களுக்கு செலவிட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் விநாடி வினா போட்டிகள் நடத்துவது பாராட்டுக்குரியது. 
  • இவ்வாறு அவர் பேசினார். 
  • இந்நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் பெருநிறுவன விவ காரங்கள் பிரிவு துணைத் தலைவர் பி.சி.தத்தா, சமூக பொறுப்பு நிதிப் பிரிவு பொதுமேலாளர் தேவ் தத்தா முல்சந்தானி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டே ஷன் ட்ரஸ்டி ஸ்டீபன் சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியை பிபுலா பிலென்சி ஜாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை மூலமாக சார்டர்டு அக்கவுன்டென்ட் படிப்பில் சேர்வதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கணினி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு 

  • முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  • தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. 
  • மொத்தம் 26,882 பேர் எழுதிய இந்த தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 
  • இதற்கிடையே டிஆர்பி முதலில் அறிவிப் பாணை வெளியிட்ட போது 814 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்தது. 
  • இந்நிலையில் முதுநிலை கணினி ஆசிரியர் பணியில் 10 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 
  • இதை யடுத்து 824 பணியிடங்களுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

97 வட்டார கல்வி அலுவலர் பதவிகளுக்கு விரைவில் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கல்வித் துறையில் காலியாக உள்ள 97 வட்டார கல்வி அலுவலர் பதவிகள் நேரடித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதி உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாள் கடைசி தேதி, கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், இடஒதுக்கீட்டு பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இளங்கலை பட்டம் மற்றும் கல்வியியல் பட்டம் முடித்திக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 27 November 2019

TRB POLYTECHNIC LECTURERS NOTIFICATION 2019 | அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தெரிவு 2017 - 18 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -06 பத்திரிக்கைச் செய்தி
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தெரிவு 2017 - 18 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 27.11.2019 இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 
  • கணினியில் Online மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
  • மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  • TRB POLYTECHNIC LECTURERS NOTIFICATION 2019 | DOWNLOAD
  • TRB POLYTECHNIC LECTURERS SYLLABUS 2019 | DOWNLOAD

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB BEO NOTIFICATION 2019 | வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை -06 பத்திரிக்கைச் செய்தி 
  • வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 27.11.2019 இன்று வெளியிடப்பட்டுள்ளது. 
  • வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கணினியில் Online மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
  • மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
  • TRB BEO NOTIFICATION 2019 | DOWNLOAD
  • TRB BEO SYLLABUS 2019 | DOWNLOAD
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE