சிபிஎஸ்இ அறிவிப்பு
இந்த முன்னே விமர்சனம், பருக்கள்
எஸ்இ சார்ந்த
வரும் 2023-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு கேள்வித் தாள்களில் மாற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. -
மாணவர்களிடையே படைப்பு, விமர்சனம், பகுத்தறியும் சிந்தனை களை அதிகரிக்க இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக சிபி எஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசாம் சார்பில் தில்லியில் நடத்தப்பட்ட பள்ளிக்கல்வி மாநாட்டில் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியது. இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 20 சதவீத கொள் குறி வகை கேள்விகள் மற்றும் படைப்பூக்க சிந்தனையை அடிப்படை யாகக் கொண்டு 10 சதவீதக் கேள்விகள் கேட்கப்படும். 2023-ஆம் ஆண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர் களுக்கான கேள்வித்தாள், படைப்பு விமர்சனம், பகுத்தறியும் சிந்தனை களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் குறைவான வேலைவாய்ப்பு, சொற்பமான அளவி லான மதிப்பு மற்றும் சந்தையின் ஸ்திரமற்ற தன்மை ஆகியவற்றால், தொழிற்கல்விப் படிப்புகளை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்தநிலை மாறவேண்டும். அதேபோல அடிப்படைக் கட்டமைப்பு, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி சார்ந்த நபர்களிடையே பிணைப்பையும் பாலத்தையும் ஏற்படுத்தவேண்டியது அவசியம். பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து அவர் களை சிறந்த வழிகாட்டிகளாகவும் உத்வேகம் அளிப்பவர்களாகவும் மாற்ற வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை, ஆசிரியர் பயிற்சி உள் பட பல்வேறு விஷயங்கள் குறித்து வித்தியாசமான கோணங்களில் சிந்தித்துள்ளது. ஐந்து பிரதான பாடங்களில் தொழிற்கல்வியும் ஓர் அங்கமாக இருக்கவேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. அது நல்ல யோசனைதான். ஆனால் அவற்றைச் செயல்படுத்து வதில் நிச்சயம் சவால் இருக்கும். பள்ளிப் பாடத் திட்டங்கள், பாடம் மட்டுமே சார்ந்ததாக இருக்காமல் செயல்முறை சார்ந்தும் இருக்க வேண்டும் என்று அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment