TRB

Sunday, 17 November 2019

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் செலவுக்கு ஆண்டிற்கு ₹20 ஆயிரம் வழங்க முடிவு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவிப்பு

ஆந்திர மாநிலம், ஓங்கோலில் உள்ள பிவிஆர் பள்ளியில் அன்று , இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது: ஒவ்வொருபள்ளியிலும் பெற்றோர்களை கொண்ட கமிட்டி அமைத்து, பள்ளியில் என்னென்ன மாற்றங் கள் செய்ய வேண்டும், பிள்ளைகளின் கல்வித்தரத்தை உயர்த்த என்ன நடவ டிக்கை எடுக்க வேண் டும் போன்றவை அந்த கமிட்டியின் மூலமாக அறிந்து அரசு இணைந்து செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிக்காக ₹3500 கோடி செலவு செய்யப் பட்டு 45 ஆயிரம் பள்ளிகளின் முகத்தை மாற்றி அமைக்கப்படும்.

முதல் கட்டமாக 15 ஆயிரத்து 700 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஜூன் 2020ம் ஆண்டிற் குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். ஜனவரி 9ம் தேதி அம்மாமடி திட் டத்தின் கீழ் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்தாயாருக்கு 15 ஆயிரம் வங்கிக்க ணக்கில் செலுத்தப்படும். அதே நேரத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன், விடுதி மாணவர்களின் செலவிற்காக ஆண்டுக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.