TRB

Monday, 18 November 2019

ராணுவ தளவாட தொழிற்சாலையில் 4,805 பயிற்சிப் பணிகள்

ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் 4 ஆயிரத்து 805 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்களும், ஐ.டி.ஐ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்துக்கு தேவையான வெடி பொருட்கள், ஆயுதங்கள், டாங்கிகள், உடைகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்காக பல்வேறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் ஆவடியில் ராணுவ டாங்கி மற்றும் உடை தொழிற்சாலை செயல்படுகிறது. இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவும், பயிற்சிப்பணியிடங்களை நிரப்பவும் தனியே தேர்வு வாரியம் உள்ளது.

நாக்பூரில் செயல்படும் இந்த தளவாட தொழிற்சாலை ஆட்தேர்வு மையத்தில் இருந்து தற்போது பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான்-ஐ.டி.ஐ. தரத்திலும், ஐ.டி.ஐ. படிப்பு தரத்திலும் பயிற்சிப்பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4 ஆயிரத்து 805 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 3 ஆயிரத்து 210 இடங்களும், ஐ.டி.ஐ. சாராததற்கு 1595 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு

இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்பு சலுகை அனுமதிக்கப்படும். விண்ணப்ப அவகாச காலத்தின் கடைசி நாளை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக் கிடப்படுகிறது.

கல்வி தகுதி

10-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ. சாராத தொழிற்பிரிவில் சேரலாம். குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்து என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் ஐ.டி.ஐ. தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கான விண்ணப்பப் பதிவு டிசம்பர் மாதத்தில் தொடங்கும். இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விவரங்களை அறிய விரும்புபவர்கள் www/apprenticeship.gov.in மற்றும் www.ofb.gov.in என்ற இணைய தளங்களை பின்தொடரலாம்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.