TRB

Monday, 18 November 2019

நாகப்பட்டினத்தில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

நாகப்பட்டினத்தில் ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ஆள் சேர்ப்பு முகாம்

சென்னை ராணுவ ஆள்சேர்க்கும் தலைமைச் செயலகம், திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தின் வழியாக, ராணுவ வீரர் களுக்கான ஆள்சேர்ப்பு முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜனவரி மாதத்தில் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபாரை சேர்ந்தவர்களில் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மத போதகர்) பணிக்கு விண்ணப்பித்தவர்களும், ஹவில்தார் சர்வேயர் ஆட்டோமேட்டட் கார்டோகிராபர் பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்களும் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

உடல்தகுதி தேர்வு

சோல்ஜர் டெக்னிக்கல், (Soldier Technical), சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty), சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (Soldier Tradesman) போன்ற பிரிவுகளில் தகுதியான இளைஞர்கள் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

நேரடி நேர்காணல் மூலம் இந்த பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்க இருக்கிறது. அப்போது உடல் அளவுத் தேர்வு, உடல் உறுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய தேர்வுகள் பின்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின்பு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல்

விருப்பம் உள்ளவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும் அனுமதிச்சீட்டுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். அப்போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும். அனுமதிச் சீட்டில் நேர்காணல் நாள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நேர்காணல் வருகிற ஜனவரி 3-ந் தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

8,10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் 17½ வயது முதல் 23 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பிரிவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். 1-10-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நாளை (19-ந் தேதி) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களையும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.