ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து, அவர்களின் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி தலை மையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நம்பியூரில் ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற வைப்பதால் மாணவர்களின்கல்வி,அறிவுத்திறன், தகுதி, திறமையை கண்டறிய முடிவதில்லை.
அதே நேரத்தில் பொதுத் தேர்வு குறித்து மாண வர்கள் பயப்பட தேவை இல்லை. தற்போது மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலை யில், கோரிக்கை வைத்தால் மீண்டும் கால நீட்டிப்பு செய்ய முதல்வர் தயாராக உள்ளார். ஆசிரியர்கள் செல் போன்களில் சமூக வலை தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்தும், கல்வியின் தரம் குறித்தும் ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதி காரி தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் கல்வியின் தரம், ஆசிரியர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்து வரு கின்றனர். இரண்டு வார காலத்தில் ஆய்வு முடிந்து விடும். அதன்பின், நடவ டிக்கை எடுக்கப்படும். 12ம் வகுப்பு முடித்த 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஆடிட்டர் படிப்பிற்காக 500ஆடிட்டர் களை கொண்டு இலவச பயிற்சி அளிக்கவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்கல்வி கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
2019-2020ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். 2020- 2021க்குள் ஒருலட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறி னார்.

No comments:
Post a Comment