TRB

Tuesday, 31 December 2019

தமிழக பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறப்பு. அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு விடுமுறையை மேலும் ஒருநாள் நீட்டித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு விடு முறை முடிந்து ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஜனவரி 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதில், பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட உள்ளனர். இதன்காரணமாக, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மேலும் ஒரு நாள் அதிகரித்து, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் “வாக்கு எண்ணிக்கை பணி முடிய நீண்ட நேரம் ஆகலாம். இதனால் அடுத்த நாள் காலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியாது. எனவே பள்ளிகளின் விடுப்பை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதனையடுத்து, ஜனவரி 3-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் வரும் ஜனவரி 4-ம் தேதியன்று திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 December 2019

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.

ஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்

எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முது நிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

2020-ம் ஆண்டுக்கான...

இந்த நிலையில், 2020-ம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

https://www.annauniv.edu இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளிகளுக்கு வினாத்தாளை மின்னஞ்சலில் அனுப்ப முடிவு ஜனவரியில் நடக்கும் திருப்புதல் தேர்வில் அமலாகிறது

தேர்வுக்கு முன்பு வெளியாவதை தவிர்க்க 10, 11, 12-ம் வகுப்பு வினாத் தாளை நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்ப கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வுகள் நடத் தப்படுகின்றன. இதனால் அனைத்து வகை பள்ளிகளிலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு களுக்கு ஒரே வினாத்தாள் பயன் படுத்தப்படுகிறது.

சமீபகாலமாக காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத் தாள் முன்கூட்டியே சமூக வலை தளங்களில் வெளியாகி வருகின் றன. தற்போது நடந்த அரை யாண்டு தேர்விலும் 10, 11-ம் வகுப்பு களுக்கான சில பாடங்களின் வினாத்தாள்கள் முன்னதாக ஷேர்சாட், ஹாலோ போன்ற செயலிகள் வழியாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இதுகுறித்து திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளித்த புகா ரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபோன்ற நிகழ்வு களை தடுக்க, இனிமேல் வினாத் தாளை பள்ளிகளுக்கு நேரடி யாக மின்னஞ்சல் மூலம் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக, அனைத்து வகுப்பு களுக்கும் மாவட்டவாரியாக வினாத்தாள் தயாரிக்கப்படும். பொதுத் தேர்வு நடைபெறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் காலாண்டு, அரையாண்டு, திருப்பு தல் தேர்வு வினாத்தாளை தேர்வுத் துறை வடிவமைக்கும். இந்த வினாத்தாள்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். வினாத்தாளை அச்சிட மண்டல வாரியாக தனியார் அச்சகங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்த அச்சகங்களில் வினாத் தாளை அச்சிட்டு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் 15 பள்ளி களுக்கு மையமாக இருக்கும் ‘நோடல்’ பள்ளிகளில் ஒப்படைக் கப்படும். தேர்வு நாளன்று சம்பந் தப்பட்ட பள்ளி பொறுப்பாளர்கள் வினாத்தாளை பெற்றுச் செல்வார் கள்.

குறைந்த மாணவர்கள் படிக்கும் சில தொழிற்பிரிவு பாடங்களுக்கு மட்டும் வினாத்தாள் நேரடியாக பள்ளிகளுக்கு குறுந்தகடு மூலம் அனுப்பப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்குவார்கள்.

இதற்கிடையே, ஏதேதோ கார ணங்களை கூறி நோடல் மையங் களில் இருந்து சில தனியார் பள்ளி கள் மொத்தமாக வினாத்தாளை வாங்கி சென்றுவிடுகின்றன. அத் தகைய தனியார் பள்ளிகளில் இருந்துதான் வினாத்தாள் முன் கூட்டியே வெளியாக வாய்ப்பு உள்ளது. மேலும், தனியார் அச்ச கங்கள் மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள் விற்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதற்கு மாற்று ஏற்பாடாக 10, 11, 12-ம் வகுப்பு வினாத்தாள்களை இனி நேரடியாக பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வுக்கு 2 மணி நேரம் முன்புதான் பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படும். அதை தலைமை ஆசிரியர்கள் உடனடி யாக நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஜனவரியில் நடக்க உள்ள திருப்புதல் தேர்வின்போது இந்த நடைமுறையை பின்பற்ற பரி சீலனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் கணினி, பிரின்டர், இணைய தள வசதிகள் ஏற்கெனவே உள் ளன. எனவே, தலைமை ஆசிரி யர்களுக்கு சிரமம் இருக்காது. கூடுதல் தேவைகள் இருப்பின் விரைவில் சரிசெய்யப்பட்டு, வினாத்தாள் வெளியாவது அடுத்த ஆண்டு முதல் முற்றிலுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.தேர்வுக்கு 2 மணி நேரம் முன்புதான் பள்ளிகளுக்கு வினாத்தாள் மின்னஞ்சலில் அனுப்பப்படும். அதை தலைமை ஆசிரியர்கள் உடனடியாக நகல் எடுத்து வழங்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 27 December 2019

மருத்துவ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

மருத்துவ பல்கலைக்கழக தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

2020-ம் ஆண்டு பிப்ரவரியில் மருத்துவ பல்கலைக்கழக தேர்வு நடக்கவுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த அட்டவணை பல்கலை. இணையதளத்தில் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு அபராத தொகை இல்லாமல் விண்ணப்பம் அளிக்க ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்து மேலும் கூடுதல் விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனியார் வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் இன்று நடக்கிறது

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு அன்றைய தினம் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து 27-ம் தேதி (இன்று) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் கிண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள் வரை (மாற்றுத்திறனாளிகள் உள்பட) இந்த முகாமில், கலந்து கொள்ளலாம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளன.

படித்த, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற  மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தசைச்சிதைவு நோய் அல்லது முதுகு தண்டுவட பாதிப்பால் 2 கால்களும், 2 கைகளும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் மூலம் தேர்வு செய்து பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

60 வயதுக்கு உட்பட்ட ஆண் மாற்றுத் திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உட் பட்ட பெண் மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையின் அடிப்படையில் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

இந்த சிறப்பு சக்கர நாற்காலி ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப் படும். எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை அல்லது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கூடிய விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அரசு புறநகர் மருத்துவமனை வளாகம், கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரி யில் நேரிலோ அல்லது தபால் மூல மாகவோ விண்ணப்பித்து பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இளைஞர் நாடாளுமன்ற போட்டி - ஜன.31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் 

தேசிய அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) செய லாளர் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மத்திய அரசு சார்பில் 1996-ம் ஆண்டு முதல் ‘இளைஞர் நாடாளு மன்றம்’ போட்டிகள் நடத்தப்படு கின்றன. மாணவர்களிடம் நாடாளு மன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை வளர்க்கவும், அதுதொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள வும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் இடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளும் மேம்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றம் போட்டிக்கு விருப்பம் உள்ளவர்கள் மத்திய அரசின் http://nyps.mpa.gov.in/ இணையதளம் வழியாக ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, வீடியோ, புகைப்படங்கள், கட்டுரை கள் இடம்பெற்றுள்ளன. போட்டி யில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்து பல்கலைக்கழகங் கள், கல்லூரிகளின் நிர்வாகங் களும் இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரையாண்டு விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை தொடக்க கல்வித் துறை எச்சரிக்கை

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கள் நடத்தக்கூடாது என தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி களுக்கு டிச.24 முதல் ஜன.3-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள், மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாகவும், அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையிலும் அமைய வேண்டும்.

ஆனால், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அரையாண்டு விடுமுறை நாட் களில் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு களை நடத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகள் நடப்பது கண்டறியப் பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 December 2019

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.

அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.

அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

மறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 December 2019

வேலை - கால அட்டவணை - 24.12.2020

வேலை - கால அட்டவணை - 24.12.2020

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BOM RECRUITMENT 2019 | மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • BOM RECRUITMENT 2019 | மகாராஷ்டிரா வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கிரேடு 2, கிரேடு 3 தரத்திலான அதிகாரி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 0350 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2020.
  • இணைய முகவரி : https://www.bankofmaharashtra.in/
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று மகாராஷ்டிரா வங்கி. தற்போது இந்த வங்கியின் மனிதவளத் துறையில் இருந்து, கிரேடு 2, கிரேடு 3 தரத்திலான அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01-04-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும், 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஸ்கேல் 3 தரத்திலான பணிகளுக்கு 38 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப்படிப்புடன், கணினி அறிவு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், ரூ.1180 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள், டிசம்பர் 31-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மற்றொரு அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, டிசம்பர் 31-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இவை பற்றிய விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • BECIL RECRUITMENT 2019 | BECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 50 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 00.01.2020.
  • இணைய முகவரி : www.becil.com
இந்திய ஒளிபரப்பு நுட்ப நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படிப்பு மற்றும் பட்டப்படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் ஜனவரி 7-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.becil.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : பயிற்சிப் பணி .

  • SJVN RECRUITMENT 2019 | SJVN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி :  பயிற்சிப் பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 230 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.12.2020.
  • இணைய முகவரி : www.sjvn.nic.in
மினிரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை மின் நிறுவனம் எஸ்.ஜே.வி.என். . தற்போது இந்த நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 230 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். டிசம்பர் 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.sjvn.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • VSSC RECRUITMENT 2019 | VSSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : சயின்டிஸ்ட்/என்ஜினீயர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 80 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.01.2020.
  • இணைய முகவரி : https://www.vssc.gov.in
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சுருக்கமாக வி.எஸ்.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சயின்டிஸ்ட்/என்ஜினீயர், மருத்துவ அதிகாரி போன்ற பணிகளுக்கு 80 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்.இ., எம்.டெக் படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர்/என்ஜினீயர் பணிக்கும், முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஜனவரி 3-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.

மற்றொரு அறிவிப்பின்படி இந்த நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், சயின்டிபிக் அசிஸ்டன்ட், லைபிரரி அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு 63 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

டிப்ளமோ என்ஜினீயர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 1-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இன்னொரு அறிவிப்பின்படி டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்கு 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதுபற்றிய விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு டிசம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இவை பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ள https://www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SPMCIL RECRUITMENT 2019 | SPMCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • SPMCIL RECRUITMENT 2019 | SPMCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஜூனியர் டெக்னீசியன், சூப்பிரவைசர், டெக்னீசியன்   உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 30 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.01.2020.
  • இணைய முகவரி : www.job.kalvisolai.com
இந்திய பணம் - நாணய அச்சக நிறுவனமான SPMCIL, ஜூனியர் டெக்னீசியன், சூப்பிரவைசர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 30 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமுள்ளவர்கள், முழுமையான விவரங்களை http://igmmumbai.spmcil.com/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு, ஜனவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

METRO RECRUITMENT 2019 | METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஸ்டேசன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினீயர்உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.01.2020.

  • METRO RECRUITMENT 2019 | METRO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : ஸ்டேசன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினீயர்உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 39 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.01.2020.
  • இணைய முகவரி : http://transport.rajasthan.gov.in/jmrc
ஜெய்ப்பூர் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ஸ்டேசன் கண்ட்ரோலர், ஜூனியர் என்ஜினீயர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள், என்.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுகிறது.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ரூ.500 கட்டணமாக செலுத்தி, இணையதள விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜனவரி 23-ந் தேதியாகும். http://transport.rajasthan.gov.in/jmrc என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரையாண்டு தேர்வில் முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு விசாரணை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

சமூக ஊடகங்களில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான பல்வேறு கேள்வித் தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதை பார்த்து மாணவ-மாணவிகள் வியப்பு அடைந்தனர். அதே நேரத்தில் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி நடவடிக்கை மூலம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான தாவரவியல், உயிரியல், பிளஸ்-1 வகுப்புக்கான கணக்குப்பதிவியல், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான சமூக அறிவியல் ஆகிய வினாத்தாள்கள் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய வினாத்தாள்கள் மூலம் நேற்று தேர்வுகள் நடந்தன. இந்த வினாத்தாள் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் அரையாண்டு தேர்வுக்கான சில வினாத்தாள்கள் வெளியானதாக தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக விசாரித்தோம். மாவட்டத்தில் 19 வினாத்தாள் காப்பகங்கள் உள்ளன. அந்த வினாத்தாள் காப்பகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். அப்போது எந்த வினாத்தாள் காப்பகத்திலும் வினாத்தாள் கட்டுகள் எதுவும் பிரிக்கப்படவில்லை. அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சமூக ஊடகங்களில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளோம். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் வெளியானதாக தகவல் வந்த உடன், அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு புதிய வினாத்தாள் தயார் செய்யப்பட்டது. இதனால் புதிய வினாத்தாள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் சில கேள்வித்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறுந்தகடு வடிவில் கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் எப்படி கேள்வித்தாள் வெளியானது? என்று தெரியவில்லை. வெளியானதாக கூறப்பட்ட கேள்வித்தாள் மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு விசாரணை நடத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தள்ளிவைப்பு கூடுதல் வகுப்புகள் நடத்த பெற்றோர் கோரிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால், நீட் தேர்வுக்கான தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு மே 3-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் பங்கேற் கும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் நடந்த தேர்வுக்காக, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலேயே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தாமதமாக, அதாவது செப். 23-ம் தேதிதான் தொடங்கப்பட்டது. இதனால், ஒரு மாதம் பயிற்சியை ஈடுகட்ட கூடுதல் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில், நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தள்ளிவைக்கப்பட்டு, ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரி யர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பயிற்சி நடக்கும் 413 மையங்களில் 380-க்கும் அதிகமான மையங்கள் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் உள்ளன. இந்த மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி களில் சுமார் 180-க்கும் மேலான வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனால் பயிற்சி வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “உள்ளாட்சித் தேர்தல் கார ணமாக பயிற்சி வகுப்புகள் தற் காலிகமாகதான் தள்ளிவைக்கப் பட்டுள்ளன. ஆனால், மாணவர் களை பாதிக்காத வண்ணம், பயிற்சிக்கு தேவையான கையேடு கள், இணையத்தில் படிக்கும் வசதி கள் போன்ற எல்லா வழிமுறை களும் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இதற்காக முன்கூட்டியே, மாணவர் கள் தேர்வுக்கு தயார் ஆவார்கள். இதனால் ஏற்கெனவே தாமதமாக தொடங்கிய நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது மேலும் தள்ளிப்போவதால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதர விடுமுறை காலத்தில் இன்னும் அதிகமான அளவு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரையாண்டு விடுமுறை ஒருநாள் நீட்டிப்பு ஜன.3-ம் தேதி பள்ளிகள் திறப்பு

அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.

தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளி களுக்கும் நேற்று (23-ம் தேதி) அரையாண்டுத் தேர்வு முடிந்தது. ‘தேர்வுகள் முடிந்ததும், டிசம்பர் 24-ம் தேதி (இன்று) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடு முறை. ஜனவரி 2-ம் தேதி பள்ளி கள் மீண்டும் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடக்க உள்ள தால், அரையாண்டுத் தேர்வு விடுமுறை மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில்,

“2019-20-ம் கல்வியாண்டின் அரையாண்டுத் தேர்வு 23-ம் தேதியோடு முடிவடைந் துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 3-ம் தேதி திறக்கப்படும்” என்று கூறப்பட் டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 December 2019

DRDO RECRUITMENT 2020 | ராணுவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2020.

  • DRDO RECRUITMENT 2020 | ராணுவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-1-2020.
  • இணைய முகவரி : www.drdo.gov.in 
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அலுவலக பணிகளுக்கு 1817 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்துறையின் கீழ் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த அமைப்பு செப்டம் (CEPTAM) எனும் தகுதித் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

தற்போது ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப்’ பணிகளுக்கான செப்டம் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1817 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 849 இடங்களும், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 188 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 503 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 163 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 114 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 23-1-2020-ந் தேதியில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை:

கணினித் தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இன்று (23-ந்தேதி) விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. 23-1-2020-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.

  • NPCIL RECRUITMENT 2020 | NPCIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : டெக்னீசியன் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 137 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.01.2020.
  • இணைய முகவரி : https://npcilcareers.co.in/ 
இந்தியன் அணுமின் கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். (NPCIL), என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சயின்டிபிக் அசிஸ்டன்ட், ஸ்டைபென்டியரி டிரெயினி, டெக்னீசியன், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 137 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு 45 இடங்களும், ஸ்டைபென்டியரி டிரெயினி பணிக்கு 50 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 34 இடங்களும் உள்ளன.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் சயின்டிபிக் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 6-ந்தேதியாகும். கூடுதல் விவரங்களை https://npcilcareers.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

COAL INDIA RECRUITMENT 2019 | COAL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.1.2020.

  • COAL INDIA RECRUITMENT 2019 | COAL INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.1.2020.
  • இணைய முகவரி : https://www.coalindia.in/ 
நிலக்கரி நிறுவனத்தில் 1326 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ‘கோல் இந்தியா’. நிலக்கரி நிறுவனமான இதில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மைனிங், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கோல் பிரிபரேசன், சிஸ்டம்ஸ், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட், பினான்ஸ், பெர்சனல், மார்க்கெட்டிங், கம்யூனிட்டி டெவலப்மென்ட் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 1326 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி தெரிந்து கொள்வோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-4-2020-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பி.இ., பி.டெக், பி.எஸ்சி. என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அனேக பிரிவில் பணியிடங்கள் உள்ளன. சி.ஏ, ஐ.சி.டபுள்யு.ஏ., எம்பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப்படிப்புடன் குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு நிதி, பெர்சனல், மார்க்கெட்டிங், எச்.ஆர். போன்ற பிரிவு பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யும் முறை

கணினி வழி ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், வருகிற ஜனவரி 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு வருகிற பிப்ரவரி 27, 28-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.coalindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

DAAC RECRUITMENT 2019 | DAAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஏர்மேன் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.

    • DAAC RECRUITMENT 2019 | DAAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
    • பதவி : ஏர்மேன் வேலை
    • விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2020.
      இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.

      இது பற்றிய விவரம் வருமாறு:-

      இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்’ (குரூப்-எக்ஸ்) டெக்னிக்கல், ‘குரூப் ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

      இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

      கல்வித் தகுதி:

      குரூப் எக்ஸ், விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 (10+2 முறையில்)/ இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

      குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பிரிவில் சேர விரும்புபவர்கள் பிளஸ்-2, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.

      குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்2/ இன்டர்மீடியட் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      வயது வரம்பு:

      விண்ணப்பதாரர் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அதாவது 17-1-2000 மற்றும் 30-12-2003 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

      உடற்தகுதி:

      குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எடையளவு குறைந்தபட்சம் 55 கிலோ இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். பார்வைத்திறன், கேட்கும் திறன், பற்கள் மற்றும் உடல் நலம் போன்றவை தேவையான அளவுக்குள் இருக்கிறதா? என சோதித்து அறியப்படும். அந்தந்த பணிக்கான சரியான உடற்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

      தேர்வு செய்யும் முறை:

      எழுத்து தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். ஆரம்பத்தில் இது 20 ஆண்டு கால பணி வாய்ப்பாகும். பின்னர் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 57 வயது வரை பணி நீடிப்பு செய்ய முடியும்.

      விண்ணப்பிக்கும் முறை:

      விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 2-1-2020 முதல் 20-1-2020-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இது பற்றிய விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிகிறது நாளைமுதல் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை 

      அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு இன்றுடன் (டிசம்பர் 23) முடிவடைகிறது.

      தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண் டுத் தேர்வு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த டிசம்பர் 11-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது.

      இதற்கிடையே சில பாடங் களுக்கான வினாத்தாள்கள் தேர் வுக்கு முன்கூட்டிய வெளியாகி சர்ச்சையானது. அதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் தற்போது போலீ ஸார் தீவிர மேற்கொண்டு வருகின் றனர். தொடர்ந்து அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (டிச.23) முடி வடைகின்றன. அதன்பின் நாளை தொடங்கி (டிச.24) ஜனவரி 1-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      பள்ளி மாணவர்களைப்போல ஆசிரியர்களுக்கும் சுயமதிப்பீடு தேர்வு கற்பித்தலில் பின்தங்கியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு 

      அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் தொடர்பாக சுயமதிப்பீடு செய்து சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

      தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,358 அரசுப்பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.25 லட் சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரு கிறது. அந்தவகையில் ஆசிரியர் களின் கற்பித்தல் திறன்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப அவர்களை வகைப்பிரித்து சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

      இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

      அரசுப் பள்ளி மாணவர்களை திறம்பட உருவாக்கும் நோக்கத்தில் பாடத்திட்டம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை கற்பிக்க ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எனினும், சில ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப தங்களை மேம்படுத்தி கொள்வதில் சிரமம் இருப்பது தெரியவந்தது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களின் தேர்ச் சிக்கு அரசு முக்கியத்துவம் தருவ தால் உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணி களில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருக்கிறது.

      அதேநேரம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவதால், கணிசமான ஆசிரியர்கள் முறை யாக தங்கள் பணியை செய்வ தில்லை என புகார்கள் வந்தன. மேலும், கட்டாய தேர்ச்சியின் மூலம் 9-ம் வகுப்புக்கு வந்துவிடும் மாணவர்களில் பலர் அடிப்படை கற்றல் திறன்கூட இல்லாமல் இருக்கின்றனர். இதை தவிர்க்கவே மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

      இதையடுத்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சுயமதிப்பீடு செய்து வகைப்பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி கடந்த ஆண்டு கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்) ‘பெர்பாமன்ஸ் இண்டி கேட்டர்’ என்ற பிரிவு கூடுதலாக உருவாக்கப்பட்டது. அதில் தற் போது சில மாற்றங்கள் மேற் கொண்டு 8 விதமான சுயமதிப்பீடு தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தற்போது மதிப்பீடு தேர்வை எமிஸ் இணையதளம் வழியாக எழுதி வருகின்றனர்.

      இந்த தேர்வில் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடம் தொடர் பான தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் பாடம் நடத் தும் விதம், வகுப்பறையில் பயன் படுத்தும் கற்றல் உபகரணங்கள், கற்றலில் பின்தங்கிய குழந்தை களை மேம்படுத்த திட்டமிடல், புதிய கற்பித்தல் வழிமுறைகள், குழந்தைகளின் தனித்திறன் கண்டறி தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த கேள்விகள் இருக்கும். இதற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதில் களை பொறுத்து மதிப்பீடு அளிக் கப்படும்.

      அதற்கேற்ப ஆசிரியர்களை வகைப்பிரித்து, குறைந்த மதிப்பீடு கள் பெறுபவர்களுக்கு கற்பித்தல் திறன்களை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். மதிப்பீட் டின்போது தலைமை ஆசிரியர் களின் கருத்துருகளும் கேட்கப் படும். மேலும், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வின் போதும் ஆசிரியர்களின் இந்த சுயமதிப்பீடு பரிசீலனை செய்யப்படும். தொடர் பயிற்சி வழங்கியும் ஆசிரியர்களின் திறன் மேம்படாதபட்சத்தில் தேவை இருப்பின் அவர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கும் மாற்றப்படுவார் கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Sunday, 22 December 2019

      பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி இறுதியில் செய்முறை தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரம்

      பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர் களுக்கான செய்முறை தேர்வு ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளது.

      தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன் னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. வினாத்தாள், விடைத்தாள் மற்றும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் தயாரிப்பு போன்ற இறுதிகட்ட பணிகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

      இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதியிலேயே செய்முறைத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பிப்ரவரி முழுவதும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அவகாசம் கிடைக்கும். இதையடுத்து செய்முறை தேர்வுக்கான முதல்கட்ட பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆய்வகங்களை முடிவு செய்தல், கண்காணிப்பாளர்கள் நியமனம் உட்பட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் விடுமுறை ஒருவாரம் விடப்படுவதால் இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, அதற்கான விவரப்பட்டியலை அனுப்புமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Saturday, 21 December 2019

      டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணை அறிவிப்பு  குரூப் 1 குறித்து ஜனவரியில் வெளியீடு

      குரூப் 1, குரூப் 2 உட்பட அரசு பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் அரசு பணியிடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடப் படும்.

      அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியானது. அதில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அரசு துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

      அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதத்திலும், ஒருங்கிணைக்கப்பட்ட குரூப் 2 தேர்வு அறிவிப்பு மே மாதத்திலும் வெளியாக உள்ளது. இதேபோல், குரூப் 4 பதவிகளுக்கான அறி விப்பு செப்டம்பர் மாதம் வெளி யாக உள்ளது.

      மேலும், குரூப் 3, குரூப் 6, குரூப் 7 மற்றும் குரூப் 8 பதவிகளில் அடங்கிய பணியிடங்களுக்கான அறிவிப்புகளின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பொறியாளர் பணிகள் உட்பட 23 பிரிவுகளுக்கான தேர்வு விவ ரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

      கூடுதல் விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      சென்னை புத்தக காட்சி ஜனவரி 9-ல் தொடக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 13 நாட்கள் நடைபெறுகிறது

      சென்னை புத்தக காட்சி ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 2 கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

      தென்னிந்திய புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டு தோறும் சென்னையில் புத்தக காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி 43-வது புத்தக காட்சி ‘கீழடி-ஈரடி’ என்ற தலைப்பில் ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான சின்னம், ஹேஷ்டேக் ஆகிய வற்றை பபாசி நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டனர்.

      அதைத் தொடர்ந்து பபாசி தலை வர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

      ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 15 லட்சம் தலைப்புகளில் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறும். தினமும் மதியம் 3 முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூ.10. இணைய தளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு கட்டணம் இல்லை. அவர் களுக்கான அனுமதிச்சீட்டு கல்வி நிறுவனங்களிடம் வழங்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வருபவர்கள் பயண அட்டையை காண்பித்து இலவச அனுமதி பெறலாம்.

      இந்த புத்தகக் காட்சியில் தொல்லியல் துறையின் உதவி யோடு கீழடி அகழாய்வு தொடர்பான அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இளம் இயக்குநர் களின் குறும்படம், ஆவணப்படங் களும் தனி அரங்குகளில் திரையிடப் படும்.

      வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள், ஓய்வறை, உணவகங்கள், வண்ண குறியீடுகள் மூலம் அரங்குகளை வகைப் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங் கள் அமைக்கப்பட உள்ளன.

      புத்தகக் காட்சி நடைபெறும் காலத்தில் பொங்கல் விடுமுறை உள்ளிட்ட 8 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

      முன்னதாக புத்தக வாசிப்பை வலியுறுத்தி 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்கள் படிக்கும் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      செய்தியாளர் சந்திப்பின்போது பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      வட்டாரக்கல்வி அதிகாரி பணிக்கான தேர்வு  ஜன.9-க்குள் விண்ணப்பிக்கலாம்

      ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்ட அறி விப்பு: பள்ளிக்கல்வித் துறை யில் காலியாக உள்ள 96 வட்டாரக்கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பாணை கடந்த நவம்பர் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.

      தொடர்ந்து விண்ணப்பப் பதிவு டிசம்பர் 19-ம் தேதி இரவு தொடங்கியது. இந்த பணிக்கு தகுதியான பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளம் வழியாக ஜனவரி 9-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

      தற்போதுள்ள புதிய நடைமுறைகளின்படி விண் ணப்பிக்கும் போதே, உரிய சான்றிதழ்களையும் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண் டும். தேர்வு அட்டவணை இறுதிநிலையில் இருப்பதால் எந்த காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. எனவே, பட்டதாரிகள் உரிய காலத்தில் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      பல்கலை. கல்லூரிகளுக்கு  இன்றுமுதல் ஜன.1 வரை தொடர் விடுமுறை

      தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.21) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குநர், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில் கூறியிருப்பதாவது;

      தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் உள் ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பதிவு செய்யவும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடவும் டிச.21 (இன்று) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

      விடுமுறை முடிந்து மீண்டும் பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்பட வேண் டும். கூடுதலாக விடுமுறை அளிக்கப் பட்டுள்ள 23, 24, 26 மற்றும் 31-ம் தேதிகளுக்கு பதிலாக அடுத்துவரும் விடுமுறை நாட்களில் வகுப்புகளை நடத்தி ஈடுசெய்து கொள்ளலாம்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      அண்ணா பல்கலை. அறிவிப்பு

      இதையடுத்து இன்று முதல் டிச.31-ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து பருவத் தேர்வு களும் தள்ளிவைக்கப்படுவதாகவும், அந்தத் தேர்வுகள் ஜனவரி 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களிலும் ஜனவரி 1-ம் தேதி வரை நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Friday, 20 December 2019

      TNPSC - ORAL TEST FOR COMBINED ENGINEERING SERVICES EXAMINATION AND ASSISTANT TRAINING OFFICER

      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
      செய்தி வெளியீடு
      தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளுக்கான – உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவிகளின் 13 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை  19.04.2019  அன்று வெளியிடப்பட்டு 22.06.2019 அன்று 349 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

      உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) பதவியானது சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு,, தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வாகும் மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவியானது தேர்வாணையத்தால் முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்வாகும். இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் 19.12.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன.  இதுபோன்று, அரிய பதவிகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் இருப்பினும் முக்கியத் தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இதுபோன்ற தேர்வுகளுக்கும் அளிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

      எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 38 விண்ணப்பதார்ரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை 31.01.2020 அன்று நடைபெறவுள்ளது.  இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
      மேலும், 10.08.2019 மு.ப & பி.ப மற்றும் 25.08.2019 மு.ப & பி.ப (உதகையில் மட்டும்) ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 1,487 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
      மேற்படி நேர்முகத் தேர்வு 03.01.2020 முதல் 28.01.2020 வரை [05.01.2020, 11.01.2020 முதல் 19.01.2020 வரை மற்றும் 26.01.2020 இத்தேதிகளை தவிர்த்து] நடைபெறவுள்ளது. இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.  அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      TNPSC ANNUAL PLANNER 2019 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD

      TNPSC ANNUAL PLANNER 2019 DOWNLOAD | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2019 ஆம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. | DOWNLOAD
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

      பிஎச்டி படிப்புக்கு ஜனவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.

      இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) டி.தியாக ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

      தமிழ்நாடு திறந்தநிலை பல் கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதி யுடன் முழுநேர மற்றும் பகுதி நேர ஆய்வுப் படிப்புகள் (பிஎச்டி) வழங்கப்படுகின்றன. ஜனவரி பருவ சேர்க்கைக்கு மேலாண்மை யியல், கல்வியியல், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி யியல், பொருளாதாரம், தொடர் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடகவியல், வரலாறு, புவியியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

      பல்கலைக்கழக மானியக்குழு வின் (யுஜிசி) ஜெஆர்எப் தகுதி பெற்ற மாணவர்கள் நிதியுதவி யுடன் ஆய்வு மேற்கொள்ளலாம். தகுதியுள்ள முழுநேர மாணவர் களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் மாதம் தோறும் ரூ.5,000 ஆராய்ச்சி உதவித் தொகை (ரிசர்ச் பெலோஷிப்) வழங்கப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்களை பல் கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதி விறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 4-ம் தேதி ஆகும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      மாணவர் திறன் மேம்பாட்டுக்கான வரைவு பாடதிட்டம் யுஜிசி வெளியீடு

      பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

      மாணவர் திறன் மேம்பாட்டுக் கான பாடத்திட்ட வல்லுநர் குழு வழங்கிய பரிந்துரைகள் அடிப் படையில் வேதியியல், விலங்கி யல், சமஸ்கிருதம், சட்டம், தொல்லியல் மற்றும் சமூகபணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் வடிவமைக் கப்பட்டு யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள், மாண வர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் தங்கள் கருத் துகளை locfugc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனுப்பலாம்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Thursday, 19 December 2019

      தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

      அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மத்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் குறைந்தபட்ச கல்வித்தகுதிகளை பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்பட தகுதி பெற்றவர் ஆவார்.

      கடந்த 23-8-2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்களுக்கு மேற்சொன்ன காலஅவகாசத்தில் 4 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழக அரசால் நடத்தப்பட்டது.

      அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் 1,747 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற ஆணையின்படி, அவர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. மேற்கண்ட 1,747 ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து இணை இயக்குனரின் (இடைநிலை கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.

      மேற்கண்ட தகவல் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் பெயர் விவரங்களை பள்ளி கல்வித்துறை மீண்டும் கேட்டிருப்பதால், தற்போது பணிபுரிந்து வரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      சமூக வலைதளங்களில்  பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியீடு கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

      பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங் களில் வெளியாகி வருவதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

      ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 2-ம் பருவத் தேர்வும், 9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வும் டிச. 13-ம் தேதி முதல் டிச.23-ம் தேதி வரை நடக்கிறது. அதேபோல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச. 11-ம் தேதி முதல் டிச. 23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

      இந்தத் தேர்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும், ஒரே மாதிரியான வினாத்தாள் மட்டும் இடம்பெற வேண்டுமென அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இதற்காக அரசு தேர்வுத்துறை தமிழ் வழி, ஆங்கில வழி வினாத்தாளை ஒரே மாதிரியாக வடிவமைத்து, அச்சகங்களுக்கு நேரடியாக அனுப்பி வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன.

      அவை தற்போது, அந்தந்த மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நாளன்று பள்ளிகளுக்கு அனுப்பப்படு கின்றன. இந்நிலையில், சமீபத்தில் 9-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானதாகப் புகார் எழுந்தது. தற்போது பிளஸ் 2 வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யிடப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வேதியியல் தேர்வு நாளை (டிச. 20) நடைபெறுகிறது. அதற்கான வினாத்தாள், 2 நாட்களுக்கு முன்பே சமூக வலைத் தளங்களில் வந்து விட்டது. இத னால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

      மேலும் சிவகங்கை மாவட்டத் தில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை தனியார் பள்ளியிலும், கடந்த கல்வியாண்டில் தேவ கோட்டை தனியார் பள்ளியிலும் வினாத்தாள்கள் வெளியாயின. இதனால் சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இதுகுறித்து பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறுகையில், தமிழ் பாடத்தில் இருந்து வினாத்தாள்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. ‘ஹலோ ஆப்’ மூலமாகவே வினாத் தாள் வெளியாகிறது. அவற்றை சிலர் பணத்துக்கு விற்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆசையில், வினாத்தாள் வெளியான விஷ யத்தை மாணவர்கள் வெளியே சொல்லவில்லை,’ என்றனர்.

      இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விசாரித்து விட்டோம். எப்படி வெளியானது என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. வினாத் தாள் வைக்கப்படும் பள்ளிகள் சிசி டிவி கேமரா மூலம் கண்காணிக்கப் படுகின்றன’ என்றார்.தமிழ் தேர்விலிருந்து வினாத்தாள்கள் வெளி யாகி கொண்டுதான் இருக்கின்றன. ‘ஹலோ ஆப்’ மூலமாக வினாத்தாள் வெளியாகிறது.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘நாட்டமறி’ திறன் தேர்வு ஜன. 2-வது வாரம் நடைபெறும்  மாதிரி வினாத்தாள், வழிகாட்டுதல்கள் வெளியீடு

      அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘நாட்டமறித் தேர்வு’ ஜனவரி 2-வது வாரத்தில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

      தமிழக அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்த, பள்ளிகள் அளவில் ‘நாட்டமறித் தேர்வு’ நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

      இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டன. அதன் விவரம்:

      அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

      இதற்கான மாதிரி வினாத்தாள் கள் தமிழ்நாடு ஆசிரியர் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவர்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு முன்மாதிரித் தேர்வு நடைபெறும்.

      இந்தத் தேர்வில் 90 வினாக் கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.

      இதைத்தொடர்ந்து ஜனவரி 2-வது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும், 4-ம் வாரத்தில் 9-ம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதி தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்படும்.

      எனவே, மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுது வதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப் பட்ட தலைமை ஆசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

      தேர்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண் டும். முதன்மைக் கல்வி அதி காரிகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வை நல்ல முறை யில் நடத்தி முடிக்க வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.இந்தத் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Wednesday, 18 December 2019

      குரூப்-1 பணிகளுக்கு புதிய பட்டியல் வெளியிடக்கோரி வழக்கு டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

      குரூப்-1 பணிகளுக்கு புதிய பட்டியல் வெளியிடக்கோரிய வழக்கில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

      மதுரையைச் சேர்ந்த சக்திராவ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

      நான் மதுரை சட்டக்கல்லூரியில் 3 வருட சட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்து, வக்கீலாக பதிவு செய்துள்ளேன். டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அறிவிக்கப்பட்ட குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். அதைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களின் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. விதிகளின்படி தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுள்ளது. அந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு நான் தகுதியானவராக இருந்தபோதும், எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை.

      இதுகுறித்து விசாரித்த போது, அந்த இடஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வி மூலம் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனால் தொலைநிலை கல்வி மூலம் படித்தவர்களை தமிழ் வழியில் படித்தவர்களாக கருத இயலாது. இது விதிகளுக்கு புறம்பான நடவடிக்கை.

      எனவே தொலைநிலை கல்வியில் படித்து டி.என்.பி.எஸ்.சி. பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்க தடை விதிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் படித்தவர்களையும் சேர்த்து, குரூப்-1 பணிகளுக்கான புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்படி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

      இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

      இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

      இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். வழக்கை ஜனவரி மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

      அரையாண்டு தேர்வு விடைத் தாள்களை சரியாக மதிப்பீடு செய் யாத ஆசிரியர்கள் மீது நட வடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

      தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி ஆண்டுத் தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான அரையாண் டுத் தேர்வு கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

      இதற்கிடையே தற்போது நடை பெற்று முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து பள்ளி களின் தலைமை ஆசிரியர்களுக் கும் கல்வித் துறை சுற்ற றிக்கை அனுப்பியுள்ளது. அதில், விடைத்தாள்களை திருத்தும் போது ஆசிரியர்கள் கவனமுடன், சரியான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.

      மதிப்பீடு செய்த விடைத்தாள் களை மற்ற ஆசிரியர்களைக் கொண்டு மறுகூட்டலுக்கு உட் படுத்த வேண்டும். குறிப்பாக பொதுத்தேர்வு நடைபெறவுள்ள 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை கூடுதல் கவ னம் எடுத்து திருத்த வேண்டும்.

      மேலும், விடைத்தாள் மதிப் பீட்டில் தவறிழைக்கும் ஆசிரியர் கள் மீது துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      ஆசிரியர், காப்பாளர்கள் உட்பட  ஆதிதிராவிடர் பள்ளியில் 1,776 காலி பணியிடம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு 

      ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரி யர், காப்பாளர் பணியிடங்கள் 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

      தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,135 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற் றில் 92,756 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொருளா தாரத்தில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிப்ப தால் கல்வி உதவித் தொகை, கட்ட ணச் சலுகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி வரை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

      இதற்கிடையே, தமிழகம் முழு வதும் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி களில் அரசு நிர்ணயித்துள்ள மாண வர் சேர்க்கையின்படி அனைத்து வகை ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணியில் 7,659 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால் 5,883 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். தலை மையாசிரியர் பதவியில் 205, முதுநிலை ஆசிரியர் 132, பட்டதாரி ஆசிரியர் 436, இடைநிலை ஆசிரி யர் 584, காப்பாளர்கள் 321, இதர ஆசிரியர்கள் 98 என மொத்தம் 1,776 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

      இதுகுறித்து, ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாகவே நிரப்பப் படாமல் இருக்கிறது. இதனால் கூடுதல் பணிச் சுமையால் பெரி தும் சிரமப்பட வேண்டியுள்ளது.

      காலியாக உள்ள தலைமை யாசிரியர் பதவியை பொறுப்பு ஆசிரியர் மூலம் கவனித்து வரு வதால் நிர்வாக ரீதியாக முடிவுகள் எடுப்பதிலும் அரசின் நிதியை பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. பாடத்திட்ட பயிற்சியும் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. கற்பித்தல் தவிர இதர அலுவல் பணிகளையும் கவனிக்க வேண்டி உள்ளது.

      இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தி யிலும் மாணவர்களை பொதுத்தேர் வுக்கு தயார்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால், தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கின்றனர். அரையாண்டுத் தேர்வுக்கு முன் பிளஸ் 2 பாடத் திட்டத்தை முடிக்க வேண்டும். ஆனால், முதுநிலை ஆசிரியர் இல் லாததால் பட்டதாரி ஆசிரியர் களைக் கொண்டு அவசர கோலத் தில் பாடம் நடத்துகிறோம்.

      அரசுப் பள்ளியில் தேவைக் கேற்ப தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அதற் கான நிதியை அரசு வழங்கிவிடும். ஆனால், நலத்துறை பள்ளிகள் சொந்த நிதியில் தற்காலிக ஆசிரி யர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். போதுமான பயிற்சி இல்லாத காரணத்தால்தான் கடந் தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர் வில் மிகக் குறைவாக 78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி குறைவதால் பெற்றோர் வேறுபள்ளிகளை நாடிச்செல் கின்றனர். இதை தவிர்க்க காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

      சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

      இதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 29-ம் தேதி வரை தொழிற்கல்வி சார்ந்த பாடங்களுக்கான பொதுத் தேர்வு நடக்கிறது.

      அதைத் தொடர்ந்து, இயற்பியல், கணிதம், கணக்கு பதிவியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முக்கிய பாடங்களுக்கான தேர்வு 30-ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுகளின்போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும்.10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல்| 1.30 மணி வரை நடக்கும்.

      அதேபோல், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர் களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப் படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் இலவச மடிக்கணினி கிடைக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

      தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பல்வேறு விதிமுறை களை புகுத்தியுள்ளதால், பிளஸ் 2 மாண வர்களுக்கு மடிக்கணினி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

      அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங் கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களை போட்டித் தேர்வு களுக்கு தயார்படுத்திக் கொள்ளவும், தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து, போட்டி நிறைந்த, கணினி சார்ந்த வேலை வாய்ப்புச் சந்தையில் வேலைவாய்ப்பை பெறுவதற்காகவும் இந்த திட்டம் தொடங் கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

      தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் சார்பில், ‘எல்காட்’ நிறுவனம் மூலம் மடிக்கணினிகள் கொள் முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங் கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அறிமுகப்படுத்திய இந்த திட்டம், மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளைய தலை முறை வாக்காளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியாக மாற இந்த திட்டம் பெரும் உதவி செய்தது.

      2011-12 முதல் 2016-17-ம் ஆண்டு வரை ரூ.5,490.75 கோடி செலவில் 37 லட்சம் மடிக் கணினிகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள்கூட அரசின் மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பள்ளியில் சேரும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த திட்டம், அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு பதிலாக, சுருங்கி வருவது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      குறிப்பாக கடந்த 2017 முதல் நிதி ஒதுக்கீடு குறைப்பு, நீதிமன்ற வழக்கு நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் மடிக்கணினி வழங்குவது வெகுவாக குறைந்துள்ளது. 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை 15.53 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்க ரூ.1,362 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. பிளஸ் 2 படிக்கும் மாணவருக்கு இலவச மடிக்கணினி உறுதி என்ற திட்டத்தின் ஆரம்ப நோக்கம் சிதைக்கப்பட்டு, தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், பிளஸ் 2-க்குப் பின்னர் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளுடன் சமீபத்தில் அரசாணை வெளியாகியுள்ளது.

      இதன்படி தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள 15 லட்சத்து 53 ஆயிரத்து 359 மடிக்கணினிகளை வழங்குவதில், 2019-20-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத் ததாக பிளஸ் 1 மாணவர்களுக்கும், மூன்றாவ தாக 2018-19-ம் ஆண்டு பிளஸ் 2 மாண வர்களுக்கும், நான்காவதாக 2017-18-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      இந்த உத்தரவால், ஏழ்மை காரணமாக, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல், தொலை நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் உள் ளிட்ட பலருக்கும் மடிக்கணினி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்து உயர்கல்வி படிப்பவர்களில் யாருக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதில் எவ்வித தெளிவும் இல்லாத நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் விருப்பம்போல் விதிமுறைகளை வகுத்து மாணவர்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

      இதனால், ஏறக்குறைய தமிழகத்தில் அனைத்து நகரங்களிலும் இலவச மடிக்கணினி கோரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஈரோடு போன்ற நகரங்களில் மாணவர்கள் மீது தடியடி என்ற நிலை வரை சென்றுள்ளது. இலவச மடிக்கணினி வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, தேவையற்ற கெடுபிடி காட்டாமல், பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் வகையில் முதல் வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர், முன்வைக்கும் கோரிக்கையாகும்.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Tuesday, 17 December 2019

      இந்திய அரசு பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் அறிவிப்பு

      இந்திய அரசு பணியாளர், பொது குறைதீர் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (பணியாளர் மற்றும் பயிற்சித் துறை) புதுடெல்லியில் அமைந்துள்ள மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் பதவி மற்றும் நான்கு தகவல் ஆணையர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |தகுதி நிபந்தனைகள் மற்றும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் பதவிகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பும் விவரங்களுக்கான மாதிரி ஆகியவற்றின் விவரங்களை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையதளம்: www.persmin.nic.in மூலம் பதிவிறக்கம் செய்யலாம். துறையில் நிரப்பப்பட்ட விண்ண ப்பங்கள் பெறும் கடைசி நாள் 03.01.2020.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      ரயில்வே ஆள்சேர்ப்பிற்கு விண்ணப்பித்துள்ள பல்வகை உடல் ஊனம் (MD) கொண்ட அபேட்சகர்களுக்கு (நிலை-1) அறிவிப்பு

      எல்வேஸ் அமைச்சகம் (ரயில்வே போர்டு) (அறிவிப்பு) 
      ரயில்வே ஆள்சேர்ப்பிற்கு விண்ணப்பித்துள்ள பல்வகை உடல் ஊனம் (MD) கொண்ட அபேட்சகர்களுக்கு (நிலை-1) தெரிவிப்பதாவது RPWDசட்டம் 2016-ன்கீழ் உண்மையாக பல்வகை உடல் ஊனம் கொண்ட PwBD அபேட்சகர்கள், ஆனால் நிலை-1 ரயில்வே ஆள்சேர்ப்பு அறிவிக்கை CEN 02/2018 -ல் ஒற்றை உடல் ஊனம் கொண்ட பிரிவு LD அல்லது VI அல்லது HI- க்கு விண்ணப்பித்துள்ள மற்றும் நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வில் தளர்த்தப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ள அபேட்சகர்கள் அதற்காக அவர்கள் விண்ணப்பித்திருக்கும் ரயில்வேயின் RRC/RRB இணையதளத்தை பாார்க்கவும். இந்த அபேட்சகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் வகையிலான அறிவிக்கை 23 டிசம்பர் 2019 அன்று பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      2020-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை இந்த வாரம் வெளியீடு

      அடுத்த ஆண்டு தமிழக அரசு துறைகளில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.

      டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என் னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப் பதற்கு உதவியாக இருக்கிறது.

      இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. காலி இடங்களின் எண்ணிக்கை இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது: 2020-ம் ஆண்டுக்கான வரு டாந்திர தேர்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

      அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தேர்வுக் கான அறிவிக்கை வெளியிடப் படும் காலம், தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம். காலி யிடங்களின் எண்ணிக்கை குறிப் பிட்ட தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக் கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

      அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாலும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
      விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

      Popular Posts

      E.Mail Free Subsciption

      முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

      After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.