TRB

Thursday, 19 December 2019

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை

அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மத்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் குறைந்தபட்ச கல்வித்தகுதிகளை பெற்றுள்ள நபர் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்யப்பட தகுதி பெற்றவர் ஆவார்.

கடந்த 23-8-2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்களுக்கு மேற்சொன்ன காலஅவகாசத்தில் 4 முறை ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழக அரசால் நடத்தப்பட்டது.

அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டும் 1,747 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற ஆணையின்படி, அவர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்பட்டு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. மேற்கண்ட 1,747 ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து இணை இயக்குனரின் (இடைநிலை கல்வி) மின்னஞ்சல் முகவரிக்கு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெறாத 1,747 ஆசிரியர்களின் பெயர் விவரங்களை பள்ளி கல்வித்துறை மீண்டும் கேட்டிருப்பதால், தற்போது பணிபுரிந்து வரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.