TRB

Thursday, 2 January 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி திங்கள்கி ழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங் களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம். நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப் பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வர்களின் நலன் கருதி தேர்வு நேர கால அளவானது இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட் டுள்ளது. மேலும் தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.