TRB

Thursday, 19 March 2020

பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பு..? 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்..? வெளியான தகவல்

9ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பது, பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் எதிரொலியாக உலகமே அதிர்ந்து முடங்கி இருக்கிறது. இந்தியாவும் அதற்கு தப்பவில்லை. 168 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, மார்ச் 19 முதல் 31ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா எதிரொலியாக ஒத்தி வைக்கப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.தமிழக பாடத் திட்டத்தில் நடைபெற்று வரும் தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு தொடங்குகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில், உத்தரப் பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி கொடுக்க வேண்டும். சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது போல தமிழகத்திலும் 12, 11, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 9ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பது குறித்தும், பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது குறித்தும் பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.