TRB

Wednesday, 25 March 2020

AENO முக்கிய மாலை நேரச் செய்திகள்

மார்ச் 25
உலகச் செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை :

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2 ட்ரில்லியன் டாலர் ஒதுக்குவதாக செனட் சபை தெரிவித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
கொரோனா தொற்று உறுதி :

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அறிவிப்பு :

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவில்லை :

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.

இன்று மாலை 6 மணி முதல் :

தமிழக முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் டீக்கடைகள் மூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை டீக்கடைகளை திறக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் இரவு 07.00 மணிக்கு உரை :

கொரோனா தடுப்பு தொடர்பாக இன்று இரவு 07.00 மணிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

அமைச்சரவை கூட்டத்தில் முடிவு :

ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும் என்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறை அறிவிப்பு :

ஏப்ரல் 14-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்திகள்
விநியோகிக்க தடை :

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமைத்த உணவுகளை ஸ்விக்கி, ஸொமோட்டோ மூலம் விநியோகிக்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

200 பேர் கைது :

அரியலூரில் 144 தடையை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் 200 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தடையின்றி பால் வினியோகிக்கப்படும் :

சென்னையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், தடையின்றி பால் வினியோகிக்கப்படும் என ஆரோக்கியா பால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் :

நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
அறைகளை வழங்க தயார் :

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.