TRB

Saturday, 21 March 2020

சி.இ.ஓ., அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம்

 'மதுரை தல்லாகுளம் சி.இ.ஓ., அலுவலகத்திற்கு மார்ச் 31 வரை மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்' என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொது தேர்வுகள் நடக்கின்றன. பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்நிலையில் தல்லாகுளம் சி.இ.ஓ., அலுவலகம் வளாகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலக மெயின் 'கேட்' மூடப்பட்டது. அலுவலகத்திற்குள் செல்லும் ஊழியர் சானிட்டைஸர் பயன்படுத்தி கைகளை கழுவிய பின் அனுமதிக்கப்படுகின்றனர். அவசர பணிக்காக வருவோரின் விவரங்கள் சிறப்பு பதிவேட்டில் சேகரிக்கப்படுகிறது. அவசர பணியல்லாத நிலையில் மக்கள் யாரும் வளாகத்திற்குள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் நேர்முக உதவியாளர்கள் சின்னத்துரை, ரகுபதி, கண்காணிப்பாளர்கள் முத்துராஜா, பத்மா ஆகியோர் கண்காணித்தனர்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.